உள்ளடக்கத்துக்குச் செல்

வேதிப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதிப் போர் எனப்படுவது பேரழிவு விளைவிக்க வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்திப் போர் செய்வதாகும். வேதியியல் ஆயுதங்கள் தமது பாதிப்பை சுவாசிக்கும் போதோ, தோலுடன் தொடுகை ஏற்படுத்தும் போதோ அல்லது நச்சூட்டப்பட்ட உணவின் மூலமோ நடைபெறலாம்.[1][2][3]

செயற்படுத்தும் முறைகள்

[தொகு]

இவை பல வழிகளில் செயற்படுத்தப்படலாம். மிகப்பொதுவான முறை வளியில் தூவுவதாகும். இதைவிட நடு வானில் வெடித்து சிதறக் கூடிய எறிகணைகளைப் பயன்படுத்தலாம் அல்லது விமானம் மூலம் தேவையான இடத்தின் மீது தூவலாம். 20 ம் நூற்றாண்டிலே முதலாம் உலக யுத்தம் மற்றும் ஈரான் – ஈராக் யுத்தம் என்பனவே வேதியியல் உயிரியல் யுத்த கள முனைகளாக இருந்தன.

பிரயோகங்கள்

[தொகு]

இரசாயண ஆயுதங்கள் முதலில் உலக யுத்தம் ஒன்றில் பாவிக்கப்பட்டது. இதன் பின்பு ஈரான் - ஈராக் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்பு பேர்சியன் வளைகுடா யுத்தத்திலும் பாவிக்கப்பட்டது. இவையனைத்தின் பின்பு ஜப்பானில் அண்மைக் காலத்தில் சுரங்க இரயிலில் பாதையில் இராசாண ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. 2001 இல் அமேரிக்காவில் அந்திராக்ஸ் பக்ரீரியா கடிதம் மூலம் அரச நிறுவனங்களுக்கு அனுப்ப பட்டமை ஒரு வகை உயிரியல் தாக்குதலாகும்.

உடன் படிக்கைகள்

[தொகு]

முதன்மைக் கட்டுரை: வேதி ஆயுத உடன்படிக்கை

1972 வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் குறிப்பிடத்தக்கனவாகும். பல நாடுகள் இந்த உடன் படிக்கையில கைச்சாத்திட்டுள்ள போதும் இன்னும் சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் ஈராக்கை அமேரிக்காவும் பிருத்தானியாவும் ஆக்கிரமிக்க இதுவே காரணமாக இருந்தது.

இவற்றையும் பாக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anne Lorenzat (2017–2018). "The Current State of Customary International Law with regard to the Use of Chemical Weapons in Non-International Armed Conflicts". The Military Law and the Law of War Review.
  2. Jillian Blake & Aqsa Mahmud (October 15, 2013). "A Legal "Red Line"? Syria and the Use of Chemical Weapons in Civil Conflict". UCLA Law Review.
  3. "Convention on the Prohibition of the Development, Production, Stockpiling and Use of Chemical Weapons and on their Destruction". United Nations Treaty Collection. 2018-01-03. பார்க்கப்பட்ட நாள் 2018-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதிப்_போர்&oldid=4103524" இலிருந்து மீள்விக்கப்பட்டது