1810கள்
Appearance
1810கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1810ஆம் ஆண்டு துவங்கி 1819-இல் முடிவடைந்தது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- இலங்கையில் புதிய நீதிமன்றச் சட்டம் இயற்றப்பட்டது (1811). மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
- ஐரோப்பாவில் நெப்போலியப் போர்கள் முடிவுக்கு வந்தன.
- ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையே போர் 1815 வரை நீடித்தது.
- கண்டி இராச்சியம் 1815 இல் பிரித்தானியாவால் கைப்பற்றப்பட்டது.
- மரத இராச்சியத்துக்கும் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கும் இடையில் 1818 இல் மூன்றாம் போர் மூண்டது.
- இலங்கையில் உருளைக்கிழங்கு விளைச்சல் ஆரம்பிக்கப்பட்டது.
- அமெரிக்காவிலிருந்து மதப்பிரசாரகர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் (1812).
- அமெரிக்க மதப்பிரசாரகர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர் (1816)