இத்தேர்தலில் 403 தொகுதிகளில் இருந்து 494 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 312 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 91 தொகுதிகளிலிருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இருந்தது. வேறு சில கட்சிகளும் காங்கிரசை எதிர்த்தன. ஆனால் பதினோறு ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த காங்கிரசும் நேருவும் செல்வாக்கின் உச்சியில் இருந்தனர். எளிதாக சென்ற தேர்தலில் வென்றதை விட கூடுதல் வாக்குகளையும் இடங்களையும் வென்றனர்.