புடவை
Appearance
புடைவை, புடவை, அல்லது சேலை (அ) "'சீலை'" (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ஒரு பெண்ணுக்கு மிகவும் அழகான பொருள் புடவைதான். அதிக அளவு கெளரவமான பொருளும் அதுதான்.—மரியா தெரேசா (15-12-1964) (புராதன போர்பன் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி)[1]
- நான் மேல் நாடுகள் சொல்லுவதற்கு முன் அங்குள்ளவர்களுக்கு பதினாறு முழம் சேலையும், நீண்ட கூந்தலும் வெறுப்பை உண்டு பண்ணும் என்று எண்ணிய என்னை அவர்கள் ஏமாற்றி விட்டனர். சேலைகளையம், நீண்ட கூந்தலையும் வரவேற்றனர். அவர்கள் சேலைமீது கொண்ட மோகத்தினால் என் சேலைகள் சிலவற்றைப் பரிசாக வாங்கிச் சென்றனர். நீண்ட கூந்தலிலிருந்த கொஞ்சம் சாம்பிள் கத்தரித்துக் கொண்டு போனார்கள். —நடிகை வசுந்தராதேவி (1950)[2]
சான்றுகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.