அரசியல்

‘ஆவேச’ சீமான்... ‘இக்னோர்’ விஜய்... முடிவுக்கு வந்த அண்ணன்-தம்பி உறவு!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நாளிலிருந்தே, விஜய்யைக் கட்டி அரவணைத்தவர்களில் முதன்மையானவர் அண்ணன் சீமான்தான். கட்சி தொடங்கியபோது வாழ்த்தியது மட்டுமல்லாமல், விஜய்யின் ஒவ்வொரு நகர்வையும் கொண்டாடினார்.

Published:Updated:
சீமான், விஜய்
பிரீமியம் ஸ்டோரி
சீமான், விஜய்
Comments
Share

பிப்ரவரி, 2024. தன்னுடைய முதல் அரசியல் அடியை நடிகர் விஜய் எடுத்துவைத்த நேரம் அது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே, திருநெல்வேலியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜய், அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமானதாக இருக்கும். தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என விஜய் நினைத்திருக்கலாம்” என வாயார வாழ்த்தி விஜய்யை வரவேற்றார். விஜய்யும் சீமானும் அடிக்கடி சந்தித்து ஆலோசிப்பதாகத் தகவல்கள் பரவியபோது, “அண்ணனும் தம்பியும் சந்திப்பது வழக்கம்தானே... அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக்கொள்கிறோம்” எனப் புன்னகையோடு சொல்லிவந்தார் சீமான். “விஜய் தரப்பிலிருந்து எந்தக் கூட்டணி அறிவிப்பும் வராத நிலையில், அவருடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பிருப்பதாக நீங்கள் மட்டுமே பேசிவருகிறீர்களே..?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர் கொள்கை ஆயிரம் இருக்கட்டும், கொடியில் எதுவும் இருக்கட்டும்... என்ன இருந்தாலும் அவன் என் தம்பி... நான் எப்பவும் ஆதரிப்பேன்... என்னை எதிர்த்து அவர் வேலை செய்தாலும் நான் ஆதரிப்பேன்... அது ஒரு பிரச்னை கிடையாது” என்று முழு முற்றாக ஆதரித்து, பதிலளித்தார்.