விசயகாந்து

இந்திய திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி (1952-2023)

விசயகாந்து (Vijayakanth, விஜயகாந்த்; இயற்பெயர்: விஜயராஜ், 25 ஆகத்து 1952 – 28 திசம்பர் 2023) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவர் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது நான்கு தசாப்த திரை வாழ்க்கையில் இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வைதேகி காத்திருந்தாள் (1984), அம்மன் கோவில் கிழக்காலே (1986), பூந்தோட்ட காவல்காரன் (1988), செந்தூரப்பூவே (1988), புலன் விசாரணை (1990), சின்ன கவுண்டர் (1992), ஆனஸ்ட் ராஜ் (1994), தாயகம் (1996) மற்றும் வானத்தைப் போல (2000) ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பிற்காக இவர் அறியப்படுகிறார்.[4]

விஜயகாந்த்
தமிழகச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
13 மே 2011 – 19 மே 2016
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா
சபாநாயகர்து. ஜெயக்குமார்
ப. தனபால்
முன்னையவர்ஜெ. ஜெயலலிதா
பின்னவர்மு. க. ஸ்டாலின்
தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
13 மே 2011 – 19 மே 2016
முன்னையவர்எஸ். சிவராஜ்
பின்னவர்கே. வசந்தம் கார்த்திகேயன்
தொகுதிரிஷிவந்தியம்
பதவியில்
8 மே 2006 – 8 மே 2011
முன்னையவர்ஆர். கோவிந்தசாமி
பின்னவர்வி. முத்துக்குமார்
தொகுதிவிருத்தாச்சலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விசயராஜ் அழகர்சாமி

(1952-08-25)25 ஆகத்து 1952
மதுரை,
மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
இறப்பு28 திசம்பர் 2023(2023-12-28) (அகவை 71)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிதேசிய முற்போக்கு திராவிட கழகம்
துணைவர்பிரேமலதா விசயகாந்து
பிள்ளைகள்விசய பிரபாகரன்,
சண்முகபாண்டியன்
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வேலை
விருதுகள்
புனைப்பெயர்கள்
  • கேப்டன்
  • கருப்பு எம். ஜி. ஆர்.[1][2]
  • புரட்சிக் கலைஞர்[3]

இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும், மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கலைமாமணி விருது இவருக்கு 2001ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[5][6] செந்தூரப் பூவே திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1988ஆம் ஆண்டில் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை வென்றுள்ளார். தாயகம் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1996ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரைப்பட விருதுகள்-சிறப்புப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் மேலும் இரு சினிமா எக்சுபிரசு மற்றும் ஒரு தென்னிந்திய பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். தன் திரை வாழ்க்கை முழுவதும் தமிழ் திரைப் படங்களில் மட்டுமே நடித்த மிகச் சில தமிழ் திரைத் துறை கதாநாயகர்களில் விசயகாந்தும் ஒருவர் ஆவார். இவரது திரைப் படங்கள் தெலுங்கு மற்றும் இந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவர் தன் திரை வாழ்க்கை முழுவதும் இரசிகர்கள் மற்றும் சக திரைத் துறையினரிடமிருந்து பல பட்டப் பெயர்களைப் பெற்றுள்ளார். இவரது 100வது திரைப் படமான கேப்டன் பிரபாகரன் (1991) மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் (2000–2006) மாற்றத்தை ஏற்படுத்திய இவரது தலைமைத்துவத்திற்காக இவர் "கேப்டன்" என்ற பட்டப் பெயரைப் பெற்றார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் நடிகர் சங்கமானது கடன்களிலிருந்து மீண்டது. குறைந்த ஊதியம் பெற்ற உறுப்பினர்களுக்கு இவர் ஓய்வூதியத்தைக் கொண்டு வந்தார்.[7][8] புரட்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்ததால் இவர் "புரட்சிக் கலைஞர்" என்ற பட்டத்தை எஸ். தாணுவிடமிருந்து பெற்றார்.[9] ஏழைக் குடும்பங்களுக்கான உதவி மற்றும் தமிழ் திரைத் துறையின் நலிவுற்ற நடிகர்களுக்கான உதவிகள் ஆகிய மனிதாபிமான உதவிகளை வழங்கியதன் காரணமாக இவர் "கருப்பு எம். ஜி. ஆர்." என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.[10] இவர் படப்பிடிப்புத் தளங்களில் அனைவருக்கும் சம தரத்திலான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டிற்காக அறியப்படுகிறார். குறைந்த ஊதியம் பெறும் நடிகர்களுக்கும், படக்குழு உறுப்பினர்களுக்கும் தனக்கு வழங்கப்படும் அதே தரத்திலான உணவே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அவ்வாறு வழங்கப்படுவதை உறுதியும் செய்தார்.[11] தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக சில படங்களுக்கு தன் சம்பளத்தில் ஒரு பங்கையும் விட்டுக் கொடுத்தார்.[12]

இளமைக்காலம்

விசயகாந்து என்னும் விசயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. இதனால், விசயகாந்து மதுரையில் வளர்ந்தார். சிறு வயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.[13] தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விசயகாந்து தனது பதின்ம வயதில் சிறு சிறு பணிகளைச் செய்து வந்தார்.

மண வாழ்க்கை

விசயகாந்து, 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.[14] இவர்களுக்கு விசய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இருமகன்கள் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.[சான்று தேவை]

அரசியல் கட்சி

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.[15]

2006 சட்டமன்றத் தேர்தல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.[16]

2011 சட்டமன்றத் தேர்தல்

பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார். இவர் அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[17] அத்தேர்தலில் இவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணிக் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தனர். இவர் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில், 34,447 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்

திரைப்பட வாழ்க்கை

இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார்.[13] திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார்.[சான்று தேவை] 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம் தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.

நடித்த திரைப்படங்கள்

இறப்பு

2023 திசம்பர் 28 அன்று காலை விசயகாந்து உடல்நலக்குறைவால் தனது 71 வயதில் மருத்துவமனையில் காலமானார்.[18] முன்னதாக இவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.[19]

இவரது மறைவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் சா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், அனுராக் தாக்கூர், லோ. முருகன், பாஜக தேசியத் தலைவர் நட்டா, காங்கிரசு தலைவர்கள் இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ச்சுன் கார்கே, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினறாயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,[20] புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடகத் துணை முதல்வர் டி. கே. சிவகுமார், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.[21][22][23][24][25]

அவரது உடல் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் முதல் நாள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 2023 திசம்பர் 29 அன்று அதிகாலை பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடல் மைதானத்தில் வைக்கப்பட்டது. பிரம்மாண்ட இறுதி ஊர்வலத்திற்குப் பின், மாலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதை உடன் "புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்" என பொறிக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.[26][27][28]

2024 சனவரி 3அன்று, பிரதமர் மோதி மறைந்த விசயகாந்திற்கு தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புகழுரை எழுதினார்.[29][30]

மேற்கோள்கள்

  1. Ramanujam, Srinivasa (28 December 2023). "Why is Vijayakanth called 'Captain'? A throwback to the actor's 100th film". The Hindu. Archived from the original on 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  2. "Is Vijayakant reviving the 'Black MGR' image amid COVID-19 pandemic?". thefederal.com. 22 April 2020. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  3. "Captain's curse". theweek.in. 12 June 2016. Archived from the original on 6 July 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  4. Chandar, Bhuvanesh (28 December 2023). "Adios, Captain Vijayakanth: The quintessential cop and crusader on-screen" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/adios-captain-vijayakanth-the-quintessential-cop-and-crusader-on-screen/article67682992.ece. 
  5. "Passing of Tamil Cinema icon & DMDK founder 'Captain' Vijayakanth leaves a void that will be hard to fill: PM Modi". Firstpost (in ஆங்கிலம்). 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 30 December 2023.
  6. "'Vijayakanth was known for his open and bold stance'". The Times of India. 28 December 2023. https://timesofindia.indiatimes.com/city/chennai/vijayakanth-was-known-for-his-open-and-bold-stance/articleshow/106342370.cms. 
  7. "How actor-turned-politician Vijayakanth earned the popular moniker 'Captain'". Hindustan Times (in ஆங்கிலம்). 28 December 2023. Archived from the original on 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  8. "Vijayakanth (1952–2023): Tamil Nadu loses its Captain". Indian Express. 28 December 2023. Archived from the original on 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  9. "Difference between a mere actor and a star is a grandiose appellation in the glitzy world of South Indian cinema". The Economic Times. 6 February 2013 இம் மூலத்தில் இருந்து 19 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230419012340/https://economictimes.indiatimes.com/difference-between-a-mere-actor-and-a-star-is-a-grandiose-appellation-in-the-glitzy-world-of-south-indian-cinema/articleshow/18359967.cms. 
  10. Kannan, Ramya (28 December 2023). "Vijayakant | The actor-politician who was more than just hope for his ardent followers" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/the-actor-politician-who-was-more-than-just-hope-for-his-ardent-followers/article67684875.ece. 
  11. "Captain Vijayakanth passes away! Here is a recap of the cinematic journey of the inspirational actor". The Times of India. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/captain-vijayakanth-passes-away-here-is-a-recap-of-the-cinematic-journey-of-the-inspirational-actor/photostory/106349486.cms. 
  12. "Captain... The word suits him for sure!". 21 April 2020. Archived from the original on 14 August 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2021.
  13. 13.0 13.1 "ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி?". Vikatan. 25 August 2016. http://www.vikatan.com/news/tamilnadu/67584-vijayaraj-to-captain---journey-of-vijayakanth-hbdcaptain.html. பார்த்த நாள்: 11 February 2017. 
  14. "விஜயகாந்த்".
  15. "தேமுதிக வரலாறு".
  16. "DMDK chief Vijayakanth loses Ulundurpettai assembly seat, deposit".
  17. "'Captain' to steer third front in T.N., strikes deal with PWF".The Hindu (MARCH 23, 2016)
  18. Julie Mariappan, Pushpa Narayan (28 December 2023). "Vijayakanth Death News: DMDK chief Vijayakant passes away at 71 after prolonged illness". The Times of India. Archived from the original on 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  19. "DMDK chief Vijayakanth dies, was on ventilator after testing Covid positive". India Today (in ஆங்கிலம்). 28 December 2023. Archived from the original on 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  20. "Mamata condoles DMDK chief Vijayakanth's death". The Print. 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  21. "DMDK founder Vijayakant's death updates". The Hindu. 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  22. "DMDK chief Vijayakanth dies at 71: PM Modi, Vikram and others react to 'Captain's' death". moneycontrol. 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  23. "'Man with a golden heart', 'humanitarian': Condolences pour in for DMDK founder Vijayakanth". deccanherald. 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  24. "Edappadi Palaniswami condoles Vijayakanth's demise, calls him 'beloved brother'". dtnext. 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  25. "YS Jagan mourns over demise of Vijayakanth, extends condolences to family". thehansindia. 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  26. "DMDK founder Vijayakant's funeral". The Hindu. 29 December 2023. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
  27. "விஜயகாந்த் உடல் நல்லடக்கம்". Dinamani. 29 December 2023. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
  28. "Tamil Nadu CM Stalin hails Vijaykanth as an 'achiever', announces state honours for funeral". timesnownews. 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  29. "PM pens heartfelt tribute to Captain Vijayakanth". pmindia.gov.in. 3 January 2024. பார்க்கப்பட்ட நாள் 3 January 2024.
  30. "A tribute to Captain!". narendramodi.in. 3 January 2024. பார்க்கப்பட்ட நாள் 3 January 2024.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயகாந்து&oldid=3867944" இலிருந்து மீள்விக்கப்பட்டது