ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
வாழுமிடம்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்கரண் சிங்
(1965–1967)
இறுதியாகசத்யபால் மாலிக்
(2018–2019)
இணையதளம்http://jkrajbhawan.nic.in
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.

1965-க்கு முன்

தொகு

இந்தியா விடுதலையடைந்தபின் ஜம்மு காஷ்மீர் மகாராஜாவாக ஹரி சிங் ஆட்சி பொறுப்பின் கீழ் காஷ்மீர் 17 நவம்பர் 1952 வரையில் இருந்தது. மேலும் அதுவரை அவர் மகன் கரண் சிங் 20 ஜூன், 1949 முதல் தற்காலிகமாக ஆட்சிக் காவலாராகப் பொறுப்பேற்றிருந்தார். அதன்பின் 17 நவம்பர், 1952 முதல் 30 மார்ச், 1965 வரை மாநிலத்தின் தலைமை பொறுப்பையும் கரன் சிங்கே 'சத்ரிரியாசத்' என்ற பதவியின் மூலம் பொறுப்பேற்றிருந்தார். 31 அக்டோபர் 2019 வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஆளுநர்கள் பொறுப்பு வகித்தனர்.

2019 முதல்

தொகு

2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், 31 அக்டோபர் 2019 முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றுல் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் கிரீஷ் சந்திர முர்மு பதவியேற்றார்.[1][2]

ஜம்மு காஷ்மீர் ஆளுநர்கள்

தொகு
ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர்களின் பட்டியல் (1965 முதல் 2019 வரை)
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 கரண் சிங் 30 மார்ச் 1965 15 மே 1967
2 பக்வான் சகாய் 15 மே 1967 3 சூலை 1973
3 லட்சுமி காந்த் ஜா 3 சூலை 1973 22 பெப்ரவரி 1981
4 பிராஜ் குமார் நேரு 22 பெப்ரவரி1981 26 ஏப்ரல் 1984
5 ஜக்மோகன் 26 ஏப்ரல் 1984 சூலை 1989
6 கே.வி. கிருஷ்ண ராவ் சூலை 1989 19 ஜனவரி 1990
7 ஜக்மோகன் 19 ஜனவரி 1990 26 மே 1990
8 கிரிஷ் சந்திர சக்சேனா 26 மே 1990 12 மார்ச் 1993
9 கே.வி. கிருஷ்ண ராவ் 12 மார்ச் 1993 2 மே 1998
10 கிரீஷ் சந்திர சக்சேனா 2 மே 1998 4 சூன் 2003
11 எஸ்.கே. சின்கா 4 சூன் 2003 25 சூன் 2008
12 நரேந்திர நாத் வோரா 25 சூன் 2008 23 ஆகத்து 2018
13 சத்யபால் மாலிக் 23 ஆகத்து 2018[3] 30 அக்டோபர் 2019

மேற்கோள்கள்

தொகு

வெளிப்புற இணைப்புகள்

தொகு