சூரிய இயக்காற்றல் வானாய்வகம்
சூரிய இயக்காற்றல் வானாய்வகம் (Solar Dynamics Observatory) என்பது நாசாவினால் பிப்ரவரி11, 2010 ல் சூரியனை ஆராய்வதற்காக 848 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வானில் ஏவப்பட்ட ஆய்வாகம் ஆகும். இது அட்லாசு 5 ஏவுகணை மூலம் கேப் கார்னிவல் நிலைய ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த ஆய்வகம் விண்மீன்களுடன் வாழுதல் (Living With a Star (LWS)) என்ற திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
இவ்வாய்வகம் சூரியனில் காந்தப் புலம் உருவாவதை பற்றியும் அதன் அமைப்பு பற்றியும் ஆராயும். மேலும் இந்த காந்தப்புலம் எப்படி சூரியகாற்றை பாதிக்கிறது, சூரியனின் காந்தப்புலத்தின் ஆதிக்கம் பூமியையும் பூமியை அண்டிய அயல்வெளியிலும் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் இவ்வாய்வகம் ஆராயும்.
இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள். மற்ற செயற்கைக்கோள்களை போலவே இது 5 ஆண்டுகளுக்கு மேலும் செயல்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாய்கத்தில் மூன்று கருவிகள் உள்ளன.
- வளிமண்டல படத் திரட்டுமுறை - Atmospheric Imaging Assembly (AIA)-
- உச்ச அளவு புற ஊதாக்கதிர்கள் மாறுதன்மை சோதனை - EUV Variability Experiment (EVE) .
- கெலியோசெசுமிக் மற்றும் காந்தப்புல படக்கருவி - Helioseismic and Magnetic Imager (HMI)
இந்த மூன்று கருவிகளும் பற்பல ஆய்வுகளை மேற்கொள்ளும்.