உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சேனா கீர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஞ்சேனா கீர்த்தி (Anjena Kirti) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார், இவர் முக்கியமாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். அஞ்சேனா சென்னை மற்றும் துபாயில் வளர்ந்தார், இவர் ஒரு பன்னாட்டு வானூர்தி குழுவான எட்டிஹாட் ஏர்வேசில் பணியாற்றினார். திரைப்படத் தொழிலை வெற்றிகரமாக தொடர தனது வேலையை விட்டுவிட்டார்.

தொழில்

[தொகு]

அஞ்சேனா நடித்து வெளியான முதல் படம் 2014 திசம்பரில் வெளியான, அழகிய பாண்டிபுரம் . என்றாலும், இவர் பணிபுரிந்த முதல் படம் என். ரயன் இயக்கிய தமிழ் நகைச்சுவை படமான வெற்றிகொண்டான் ஆகும். அவரது அடுத்த வெளியீடான திறந்திடு சீசேம் படத்தில் சாய் தன்சிகா உடன் நடித்தார், அதைத் தொடர்ந்து ' அந்தாதி ' படத்தில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். 2016 ஆம் ஆண்டில், இவர் சிறார் 3டி திரைப்படமான, முற்றிலும் ஜப்பானில் படம்பிடிக்கபட்ட ஜம்புலிங்கம் 3டி படத்தில் நடித்தார். அப்படத்தை அம்புலி, படப் புகழ் அரி, அரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கினர். அடுத்து. வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 II படத்தில் நடித்தார். அதில் விஜய் வசந்த் ஜோடியாக வட இந்தியப் பெண்ணாக நடித்தார். சென்னை 600028 II இவருக்கு புகழை பெற்றுத் தந்தது. இவரது அடுத்த வெளியீடான 'யாகன்', படமாகும் அதில் டென்மார்க் சாஜனின் நாடகக் கலைஞருடன் ஜோடியாக நடித்தார், யாகன் திரைப்பட பாடல்களுக்காகவும் முன்னணி கதாபாத்திரங்களின் நடிப்பிற்காகவும் பாராட்டப்பட்டது. இவரது தற்போதைய படங்களில் வெங்கட் பிரபு தயாரிப்பில் வடகறி புகழ் இயக்குனர் சரவண ராஜாவின் ஆர். கே. நகர் அடங்கும், இது 2020 ஏப்ரலில் வெளியிடப்பட உள்ளது.

திரைப்படவியல்

[தொகு]
  • குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாதவை, எல்லாம் தமிழ் படங்களாகும்.
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
2014 அழகிய பாண்டிபுரம் (திரைப்படம்) தீபிகா
2015 திறந்திடு சீசேன் திவ்யா
2015 அந்தாதி அஞ்சனா
2016 ஜம்புலிங்கம் 3டி ஐரீன்
2016 சென்னை 600028 II பூணம்
2018 யாகன் பிரபா
2019 ஆர். கே. நகர் காமாச்சி
2021 லைவ் டெலிகாஸ்ட் தீபா சிறப்புத் தோற்றம்
2021 மாநாடு தயாரிப்புக்குப் பிந்தைய பணியில்
2021 அறம் செய் தயாரிப்பில்
2021 தி டிரெயினர் தயாரிப்பில்