அறந்தாங்கி
அறந்தாங்கி | |||||
— முதல் நிலை நகராட்சி — | |||||
ஆள்கூறு | 10°09′40″N 78°59′46″E / 10.161°N 78.9961°E | ||||
நாடு | இந்தியா | ||||
பகுதி | சோழ நாடு | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||||
வட்டம் | அறந்தாங்கி | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] | ||||
நகராட்சி் தலைவர் | |||||
சட்டமன்றத் தொகுதி | அறந்தாங்கி | ||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||
மக்கள் தொகை | 40,814 (2011[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
அறந்தாங்கி (Aranthangi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும்.[4] அறந்தாங்கி ஒரு செட்டிநாடு பகுதி ஆகும். அறந்தாங்கி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
பெயர்க்காரணம்
[தொகு]அறந்தாங்கி – பாண்டிய, சோழ அரசுகளின் எல்லையில் இருந்த ஊர் இவ்வூரின் சங்ககால பெயர் மிழலைகூற்றம், இங்கு கோட்டைகள் கிடையாது நாட்டைக் குறிக்கும் எல்லையாக பெரிய அரண் போன்ற சுவர்கள் கட்டப்பட்டன, அதன் சிதிலங்கள் இப்போதும் அங்கே காணக்கிடைக்கிறது. அரண்+தாங்கி என்று அரண்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி இப்போது அறந்தாங்கி என்றாகிவிட்டது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அறந்தாங்கி நகராட்சியின் மக்கள்தொகை 40,814 ஆகும். மக்கள்தொகையில் 20,101 ஆண்களும், 20,713 பெண்களும் உள்ளனர். 10,130 குடும்பங்களும், 27 வார்டுகளும் கொண்ட அறந்தாங்கி நகராட்சியின் எழுத்தறிவு 90.59% ஆகவுள்ளது. பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4340 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 74.52%, இசுலாமியர்கள் 22.01%, கிறித்தவர்கள் 3.42% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[5]
பள்ளிகள்
[தொகு]அரசினர் ஆண்கள் மேல் நிலை பள்ளி |
---|
அரசினர் பெண்கள் மேல் நிலை பள்ளி |
அலி ஜைனம் ஜமாத் ஒரிஎண்டல் அரபிக் மேல் நிலை பள்ளி |
போன்ற பள்ளிகள் மட்டுமே 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல் பட்டு வருகின்றன அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இன்று மிகுந்து காணப்படுகின்றன. தனியார் பள்ளிகளும் நிறைந்து காணப்படுகிறான அறந்தாங்கியில் கலைக் கல்லூரிகளும் ஐடிஐ கல்லூரிகளும் அறந்தாங்கியில் அருகாமையிலேயே உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Aranthangi Municipality
- ↑ அறந்தாங்கி நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்