அல்பைன் நாடுகள்
அல்பைன் நாடுகள் (Alpine states or Alpine countries) மேற்கு ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களைக் கொண்ட எட்டு ஐரோப்பிய நாடுகளைக் குறிக்கிறது.[1]
1991ம் ஆண்டின் அல்பைன் மாநாட்டின் தீர்மானத்தின் படி, அல்பைன் பிரதேசத்தின் நாடுகளாக ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, லீக்கின்ஸ்டைன், மொனாக்கோ மற்றும் சுலோவீனியா என எட்டு நாடுகளைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.[2] அல்பைன் பிரதேசத்தில் 6,200 உள்ளாட்சி மன்றங்கள் உள்ளது.
அல்பைன் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 28.7% ஆஸ்திரியாவிலும், 27.2% நிலப்பரப்புகள் இத்தாலியிலும், 21.4% நிலப்பரப்புகள் பிரான்சிலும் உள்ளது. மீதமுள்ள 33% நிலப்பரப்புகள் பிற ஐந்து நாடுகளில் அமைந்துள்ளது.
அல்பைன் நாடுகளின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர், 77% விழுக்காடு கொண்ட பிரான்சு, இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவின் அல்பைன் பிரதேசங்களில் வாழ்கின்றனர்.
ஆஸ்திரியாவின் மொத்த நிலப்பரப்பில் 65.5% விழுக்காடும், சுவிட்சர்லாந்து நாட்டின் மொத்த நிலபரப்பில் 65% விழுக்காடும் அல்பைன் பகுதிகளில் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ EUSALP - EU STRATEGY FOR THE ALPINE REGION
- ↑ "The contracting Parties of the Alpine Convention". Archived from the original on 2011-02-13. பார்க்கப்பட்ட நாள் 2018-02-16.