அவகாதரோவின் விதி
அவகாதரோவின் விதி அல்லது அவகாட்ரோ விதி (Avogadro's law) இத்தாலியைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் அமேடியோ அவகாதரோ முன்மொழிந்த ஒரு வளிம விதியாகும்.[1][2] ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள (சம பருமனுள்ள) வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் (சமஅளவு எண்ணிக்கையில்) இருக்கும் என்று கூறினார் அவகாதரோ.[3] இவரது இந்தக் கண்டுபிடிப்பு அவரது பெயரிலேயே அவகாதரோவின் விதி என்று அறியப்படுகிறது.
அவகாதரோவின் விதி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:[4]
இங்கு:
- V - வளிமத்தின் கனவளவு
- n - வளிமத்தில் உள்ள பொருளின் அளவு
- k - விகித மாறிலி
அனைத்து வளிமங்களுக்கும் கருத்தியல் வளிம மாறிலி ஒரே அளவாக இருக்கும் என்பது அவகாதரோவின் விதியின் முக்கிய அம்சமாகும். அதாவது,
இங்கு:
- p - வளிமத்தின் அமுக்கம்
- T - வளிமத்தின் வெப்பநிலை (கெல்வினில்)
கருத்தியல் வளிம விதி
[தொகு]மேலே தரப்பட்ட சமன்பாட்டில், R என்பதை விகித மாறிலியாகக் கொண்டால், பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்:
இச்சமன்பாடு கருத்தியல் வளிம விதி என அழைக்கப்படுகிறது.
பயன்கள்
[தொகு]- வாயுக்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிட உதவுகிறது.
- வாயுச்சேர்மங்களின் மூலக்கூறு வாய்பாட்டைக் கணக்கிட உதவுகிறது.
- மூலக்கூறு நிறைக்கும், ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை உருவாக்குகிறது.
- கேலூசக்கின் விதியை தெளிவாக விளக்குகிறது.
- திட்ட வெப்ப அழுத்த நிலையில் வாயுவின் மோலார் பருமனைக் கணக்கிட உதவுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அமேடியோ அவகாதரோ (1810). "Essai d'une maniere de determiner les masses relatives des molecules elementaires des corps, et les proportions selon lesquelles elles entrent dans ces combinaisons". Journal de Physique 73: 58–76. https://books.google.com/books?id=MxgTAAAAQAAJ&pg=PA58#v=onepage&q&f=false. English translation
- ↑ "US Version". பார்க்கப்பட்ட நாள் 3-02-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Science Laws". பார்க்கப்பட்ட நாள் 3-02-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Definition". Archived from the original on 2016-10-05. பார்க்கப்பட்ட நாள் 3-02-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Avogadro's law பரணிடப்பட்டது 2004-11-03 at the வந்தவழி இயந்திரம் at the University of Fribourg
- Avogadro's law at the Royal Society of Chemistry
மேலும் படிக்க
[தொகு]- தமிழ்நாடு படநூல் கழகம் 10 வகுப்பு அறிவியல்
- Physical Chemistry by Puti and Sharma