உள்ளடக்கத்துக்குச் செல்

இணை மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணை மொழிகள் என்பது பேசும்பொழுதும், எழுதும்பொழுதும் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து வருதலாகும். இவை இடத்துக்கேற்றவாறு பயன்படுத்தப்படுகின்றன.

சில இணைமொழிகள்

[தொகு]

*அக்கம் பக்கம்

*அரை குறை

  • அண்டை அயல்
  • அந்தியும் சந்தியும்
  • அருமை பெருமை
  • அல்லும் பகலும்
  • அறமும் மறமும்
  • அன்பும் அருளும்
  • அன்றும் இன்றும்
  • அடி முடி
  • ஆடல் பாடல்
  • ஆடிப்பாடி
  • ஆடையணி
  • ஆதியந்தம்
  • ஆய்ந்தோய்ந்து
  • ஆற அமர
  • ஆறித்தேறி
  • ஆக்கமும் கேடும்
  • இண்டுஇடுக்கு
  • இன்ப துன்பம்
  • இங்கும் அங்கும்
  • இன்னார் இனியார்
  • இசகு பிசகு
  • ஈடும் எடுப்பும்
  • ஈவு இரக்கம்
  • உடல் பொருள் ஆவி
  • உண்டும் உடுத்தும்
  • உருண்டு திரண்டு
  • உருவும் திருவும்
  • உற்றாரும் உறவினரும்
  • உற்றோரும் மற்றோரும்
  • ஏழை பாழை
  • ஏற்றத் தாழ்வு
  • ஏட்டிப் போட்டி
  • ஏற்ற இறக்கம்
  • ஒட்டியும் ஒட்டாமல்
  • ஒப்பும் உயர்வும்
  • ஒட்டி உலர்ந்து

க்

[தொகு]
  • கங்கு கரை
  • கண்டும் கேட்டும்
  • கண்ட துண்டமாக
  • கண்ணீரும் கம்பலையுமாக
  • கரடு முரடாக
  • கல்வியும் கேள்வியும்
  • கள்ளம் கபடம்
  • கனவும் நனவும்
  • கையும் களவும்
  • குறுக்கும் மறுக்கும்
  • கூனும் குறளும்
  • கொள்வனை கொடுப்பனை
  • கன்னங்கரிய

ச்

[தொகு]
  • சட்ட திட்டம்
  • சதுக்கமும் சந்தியும்
  • சின்னா பின்னமாக
  • சீரும் சிறப்பும்
  • சுக துக்கம்
  • சுற்றும் முற்றும்
  • சூதுவாது

த்

[தொகு]
  • திட்ட வட்டமாக
  • துணி மணிகள்
  • தோட்டம் துரவு

ந்

[தொகு]
  • நகை நட்டு
  • நடை உடை
  • நயத்தாலும் பயத்தாலும்
  • நரையும் திரையும்
  • நல்லது கெட்டது
  • நாயும் பேயும்
  • நாளும் கிழமையும்
  • நொண்டி சண்டி
  • நோய் நொடி

ப்

[தொகு]
  • பட்டி தொட்டி
  • பண்டிதரும் பாமரரும்
  • பத்துப் பன்னிரண்டு
  • பயிர் பச்சை
  • பழக்க வழக்கம்

ம்

[தொகு]

வ்

[தொகு]
  • வந்தவன் போனவன்
  • வம்பு தும்பு
  • வாடி வதங்கி
  • வீரனும் சூரனும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணை_மொழிகள்&oldid=4121038" இலிருந்து மீள்விக்கப்பட்டது