உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியா டுடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா டுடே
இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பொன்றின் முகப்பு
தலைமை ஆசிரியர்அருண் பூரி
வகைசெய்திகள்
இடைவெளிவாரமொருமுறை
நுகர்வளவு1,100,000
வெளியீட்டாளர்இந்தியா டுடே குழுமம்
முதல் வெளியீடு1975
நாடுஇந்தியா
அமைவிடம்கன்னாட் பிளேசு, புது தில்லி[1]
மொழிஆங்கிலம்
வலைத்தளம்http://www.indiatoday.com

இந்தியா டுடே (India Today) மும்பையை அடித்தளமாகக் கொண்டு 1975ஆம் ஆண்டு முதல் லிவிங் மீடியா இந்தியா நிறுவனத்தால் முதன்மையாக ஆங்கில மொழியில் வாரமொருமுறை வெளியிடப்படும் ஓர் இந்தியச் செய்தி இதழ் ஆகும்.[1] இதே பெயரில் இந்தி, தமிழ் எனப் பிற இந்திய மொழிகளிலும் வார இதழ் வெளியிட்டது. தற்போது தமிழ் மொழியில் வெளியீடு இல்லை. 1975 முதல் இதன் தலைமை ஆசிரியராக மூன்று பத்தாண்டுகளாக இருந்து வருகிறார்.

இதன் மேலாண் நிறுவனமாக உள்ள இந்தியா டுடே குழுமம் 13 மொழிகளில் இதழ்களையும் 3 வானொலி நிலையங்களையும் 4 தொலைக்காட்சி அலைவரிசைகளையும் ஒரு செய்தித் தாளையும் நடத்தி வருகிறது. மேலும் (மியூசிக் டுடே) என்ற செவ்விசை ஒலித்தட்டுகளையும் நூல் வெளியீட்டுகளையும் இந்தியாவின் ஒரே நூல் சங்கத்தையும் மேலாண்மை செய்கிறது. 1975 ஆம் ஆண்டில் 5,000 படிகளுடன் துவங்கி, திசம்பர் 2005 அன்று வெளியான முப்பதாவது ஆண்டுநிறைவு இதழின்போது ஐந்து பதிப்புகளில் 1.1 மில்லியனுக்குக் கூடுதலான படிகளை வெளியிட்டு 5.62 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "India Today Group". India Today Group. பார்க்கப்பட்ட நாள் 2010-09-28.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியா_டுடே&oldid=3821024" இலிருந்து மீள்விக்கப்பட்டது