உள்ளடக்கத்துக்குச் செல்

இயல் மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டச்சு நிலப்படவியலாளர் பிரெடரிக் டெ விட் வரைந்த 17வது நூற்றாண்டு வான்வெளி வரைபடம்

இயல் மெய்யியல் (Natural philosophy) அல்லது இயற்கையின் மெய்யியல் (இலத்தீன்: philosophia naturalis) என்பது இயற்கை மற்றும் அண்டத்தைக் குறித்த மெய்யியல் ஆய்வாகும். அறிவியல் மற்றும் தொழினுட்பத்தின் மேம்பாடுகளுக்கு முன்னர் இத்துறையே முதன்மையாக இருந்தது. இயற்பியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளுக்கு இதுவே முன்னோடியாக இருந்தது.

இயற்கை அறிவியல் வரலாற்றின்படி மெய்யியிலிருந்தே , குறிப்பாக இயல் மெய்யியலிலிருந்தே உருவானது. பல தொன்மையான பல்கலைக்கழகங்களில் நெடுங்காலமாக நிறுவபட்டிருந்த இயல் மெய்யியல் தலைமைப் பீடங்கள் தற்காலத்தில் இயற்பியல் பேராசிரியர்களால் நிரப்பப்பட்டுள்ளன. தற்காலப் பயன்பாடான அறிவியலும் அறிவியலாளர்களும் 19வது நூற்றாண்டிலிருந்தே புழக்கத்திற்கு வந்தன. இயற்கைவாத-சமயவியலாளர் வில்லியம் ஹியூவெல் தான் முதன்முதலில் "அறிவியலாளர்" என்ற சொல்லாட்சியை அறிமுகப்படுத்தினார். எடுத்துக்காட்டாக, ஐசாக் நியூட்டன் 1687 ஆம் ஆண்டில் வெளியிட்ட தமது அறிவியல் ஆய்வறிக்கைக்கு இயல் மெய்யியலின் கணிதக் கோட்பாடுகள் என்றும் 1867இல் வில்லியம் தாம்சனும் பீட்டர் டைட்டும் எழுதிய ஆய்வறிக்கை இயல் மெய்யியல் ஆய்வறிக்கை என்றும் பெயரிடப்பட்டிருந்தன.

மேலும் அறிய

[தொகு]
  • Adler, Mortimer J. (1993). The Four Dimensions of Philosophy: Metaphysical, Moral, Objective, Categorical. Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-500574-X.
  • Edwin Arthur Burtt, Metaphysical Foundations of Modern Science (Garden City, NY: Doubleday and Company, 1954).
  • Philip Kitcher, Science, Truth, and Democracy. Oxford Studies in Philosophy of Science. Oxford; New York: Oxford University Press, 2001. LCCN:2001036144 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-514583-6
  • பெர்ட்ரண்டு ரசல், A History of Western Philosophy and Its Connection with Political and Social Circumstances from the Earliest Times to the Present Day (1945) Simon & Schuster, 1972.
  • Santayana, George (1923). Scepticism and Animal Faith. Dover Publications. pp. 27–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-20236-4.
  • David Snoke, Natural Philosophy: A Survey of Physics and Western Thought. Access Research Network, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-931796-25-4.[1] பரணிடப்பட்டது 2007-04-08 at the வந்தவழி இயந்திரம் [2]

வெளி இணைப்புகள்

[தொகு]