இலங்கையில் தேர்தல்கள்
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
---|
இலங்கையில் தேர்தல்கள் பல கட்டங்களில் நடத்தப்படுகின்றன. அரசுத்தலைவர் (சனாதிபதி) தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. இவற்றைவிட மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளுக்கான் தேர்தல்களும் நடைபெறுகின்றன. அனைத்துத் தேர்தல்களும் இலங்கைத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன.
அரசுத்தலைவர் அல்லது சனாதிபதி
[தொகு]அரசுத்தலைவர் அல்லது சனாதிபதி ஐந்தாண்டு காலத்திற்கு உடனடி-வாக்கெடுப்பு மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களை வரிசைப்படுத்துகிறார்கள். முதல் சுற்று வாக்கெடுப்பில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை (50% இற்கும் அதிகமான வாக்குகள்) பெறவில்லை என்றால், வெற்றியாளரைத் தீர்மானிக்க முதல் விருப்பத்தேர்வு வேட்பாளர் நீக்கப்பட்ட வாக்குகளிலிருந்து இரண்டாவது, மூன்றாவது விருப்பத்தேர்வுகள் பயன்படுத்தப்படும்.[1] 2024 தேர்தலில் மட்டுமே முதல் முறையாக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் மூலம் அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்றம்
[தொகு]நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர், ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் மூலம் பல-தொகுதி தேர்தல் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அங்கு ஒவ்வொரு கட்சிக்கும் மொத்த வாக்குகளின் விகிதத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கீட்டில் இருந்து பல இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தேசியப் பட்டியல் என்று அழைக்கப்படும் ஏனைய 29 பேர் நாடளாவிய ரீதியில் கட்சி பெறும் விகிதாசார வாக்குகளின்படி ஒவ்வொரு கட்சியின் செயலாளராலும் நியமிக்கப்படுகின்றனர்.
உள்ளூராட்சி சபைகள்
[தொகு]இலங்கையில் உள்ளூராட்சி சபைகள்:
ஆகியவற்றிற்கான உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர்.
அண்மைய தேர்தல்கள்
[தொகு]2024 அரசுத்தலைவர் தேர்தல்
[தொகு]வேட்பாளர் | கட்சி | முதல் சுற்று | இரண்டாம் சுற்று | |||
---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | வாக்குகள் | % | |||
அனுர குமார திசாநாயக்க | தேசிய மக்கள் சக்தி | 56,34,915 | 42.31 | 57,40,179 | 55.89 | |
சஜித் பிரேமதாச | ஐக்கிய மக்கள் சக்தி | 43,63,035 | 32.76 | 45,30,902 | 44.11 | |
ரணில் விக்கிரமசிங்க | சுயேச்சை | 22,99,767 | 17.27 | |||
நாமல் ராசபக்ச | இலங்கை பொதுசன முன்னணி | 3,42,781 | 2.57 | |||
பா. அரியநேத்திரன் | சுயேச்சை | 2,26,343 | 1.70 | |||
திலித் ஜயவீர | இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி | 1,22,396 | 0.92 | |||
கே. கே. பியதாச | சுயேச்சை | 47,543 | 0.36 | |||
டி. எம். பண்டாரநாயக்க | சுயேச்சை | 30,660 | 0.23 | |||
சரத் பொன்சேகா | சுயேச்சை | 22,407 | 0.17 | |||
விஜயதாச ராஜபக்ச | தேசிய சனநாயக முன்னணி | 21,306 | 0.16 | |||
அநுருத்த பொல்கம்பொல | சுயேச்சை | 15,411 | 0.12 | |||
சரத் கீர்த்திரத்தின | சுயேச்சை | 15,187 | 0.11 | |||
கே. ஆர். கிரிசான் | அருனலு மக்கள் முன்னணி | 13,595 | 0.10 | |||
சுரஞ்சீவ அனோச் டி சில்வா | சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 12,898 | 0.10 | |||
பிரியந்த விக்கிரமசிங்க | நவ சமசமாஜக் கட்சி | 12,760 | 0.10 | |||
நாமல் ராஜபக்ச | சமபீம கட்சி | 12,700 | 0.10 | |||
அக்மீமன தயாரத்தன தேரோ | சுயேச்சை | 11,536 | 0.09 | |||
நுவான் போபகே | சோசலிச மக்கள் அரங்கு | 11,191 | 0.08 | |||
அஜந்தா டி சொய்சா | ருகுணு மக்கள் கட்சி | 10,548 | 0.08 | |||
விக்டர் அந்தனி பெரேரா | சுயேச்சை | 10,374 | 0.08 | |||
சிறிபால அமரசிங்க | சுயேச்சை | 9,035 | 0.07 | |||
சிறிதுங்க ஜெயசூரிய | ஐக்கிய சோசலிசக் கட்சி | 8,954 | 0.07 | |||
பத்தரமுல்ல சீலாரத்தன தேரோ | மக்கள் நல முன்னணி | 6,839 | 0.05 | |||
அபூபக்கர் முகம்மது இன்ஃபாசு | சனநாயக ஐக்கியக் கூட்டணி | 6,531 | 0.05 | |||
பேமசிறி மானகே | சுயேச்சை | 5,822 | 0.04 | |||
மகிந்த தேவகே | இலங்கை சோசலிசக் கட்சி | 5,338 | 0.04 | |||
கீர்த்தி விக்கிரமரத்தின | நமது மக்களின் சக்தி | 4,676 | 0.04 | |||
பானி விஜேசிறிவர்தன | சோசலிச சமத்துவக் கட்சி | 4,410 | 0.03 | |||
ஒசால கேரத் | புதிய விடுதலை முன்னணி | 4,253 | 0.03 | |||
ரொசான் ரணசிங்க | சுயேச்சை | 4,205 | 0.03 | |||
பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க | தேசிய அபிவிருத்தி முன்னணி | 4,070 | 0.03 | |||
ஆனந்த குலரத்தின | சுயேச்சை | 4,013 | 0.03 | |||
லலித் டி சில்வா | ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி | 3,004 | 0.02 | |||
சிட்னி ஜெயரத்தின | சுயேச்சை | 2,799 | 0.02 | |||
ஜானக ரத்திநாயக்க | ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி | 2,405 | 0.02 | |||
ம. திலகராஜா | சுயேச்சை | 2,138 | 0.02 | |||
சரத் மனமேந்திர | புதிய சிங்கள மரபு | 1,911 | 0.01 | |||
ஏ. எஸ். பி. லியனகே | இலங்கை தொழிற் கட்சி | 1,860 | 0.01 | |||
மொத்தம் | 1,33,19,616 | 100.00 | 1,02,71,081 | 100.00 | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,33,19,616 | 97.80 | ||||
செல்லாத/வெற்று வாக்குகள் | 3,00,300 | 2.20 | ||||
மொத்த வாக்குகள் | 1,36,19,916 | 100.00 | ||||
பதிவான வாக்குகள் | 1,71,40,354 | 79.46 | 1,71,40,354 | – | ||
மூலம்: இலங்கைத் தேர்தல் திணைக்களம்[2] (தேர்தல் திணைக்களம்) |
2020 நாடாளுமன்றத் தேர்தல்
[தொகு]கட்சிகளும் கூட்டணிகளும் | வாக்குகள் | % | இருக்கைகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேர்தல் மாவட்டம் | தேசியப் பட்டியல் | மொத்தம் | +/– | |||||||||||
|
6,853,690 | 59.09 | 128 | 17 | 145 | 50 | ||||||||
2,771,980 | 23.90 | 47 | 7 | 54 | புதியது | |||||||||
445,958 | 3.84 | 2 | 1 | 3 | ▼3 | |||||||||
|
327,168 | 2.82 | 9 | 1 | 10 | ▼6 | ||||||||
ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் அணி) | 249,435 | 2.15 | 0 | 1 | 1 | ▼105 | ||||||||
67,766 | 0.58 | 1 | 1 | 2 | 2 | |||||||||
நமது சக்தி மக்கள் கட்சி |
67,758 | 0.58 | 0 | 1 | 1 | 1 | ||||||||
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 67,692 | 0.58 | 1 | 0 | 1 | 1 | ||||||||
இலங்கை சுதந்திரக் கட்சி[iv] | 66,579 | 0.57 | 1 | 0 | 1 | 1 | ||||||||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 61,464 | 0.53 | 2 | 0 | 2 | 1 | ||||||||
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு | 55,981 | 0.48 | 1 | 0 | 1 | 1 | ||||||||
|
51,301 | 0.44 | 1 | 0 | 1 | 1 | ||||||||
அகில இலங்கை மக்கள் காங்கிரசு[vi] | 43,319 | 0.37 | 1 | 0 | 1 | 1 | ||||||||
தேசியக் காங்கிரஸ்[i] | 39,272 | 0.34 | 1 | 0 | 1 | 1 | ||||||||
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[vii] | 34,428 | 0.30 | 1 | 0 | 1 | |||||||||
ஐக்கிய அமைதிக் கூட்டணி | 31,054 | 0.27 | 0 | 0 | 0 | |||||||||
அகில இலங்கைத் தமிழர் மகாசபை | 30,031 | 0.26 | 0 | 0 | 0 | |||||||||
தேசிய அபிவிருத்தி முன்னணி | 14,686 | 0.13 | 0 | 0 | 0 | |||||||||
முன்னிலை சோசலிசக் கட்சி | 14,522 | 0.13 | 0 | 0 | 0 | |||||||||
தமிழர் சோசலிச சனநாயகக் கட்சி | 11,464 | 0.10 | 0 | 0 | 0 | |||||||||
தமிழர் விடுதலைக் கூட்டணி | 9,855 | 0.08 | 0 | 0 | 0 | |||||||||
இலங்கை சோசலிசக் கட்சி | 9,368 | 0.08 | 0 | 0 | 0 | |||||||||
மக்கள் நல முன்னணி | 7,361 | 0.06 | 0 | 0 | 0 | |||||||||
சிங்கள தேசிய முன்னணி | 5,056 | 0.04 | 0 | 0 | 0 | |||||||||
புதிய சனநாயக முன்னணி | 4,883 | 0.04 | 0 | 0 | 0 | |||||||||
ஐக்கிய இடது முன்னணி | 4,879 | 0.04 | 0 | 0 | 0 | |||||||||
இலங்கை லிபரல் கட்சி | 4,345 | 0.04 | 0 | 0 | 0 | |||||||||
தேசிய மக்கள் கட்சி | 3,813 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 3,611 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
தேசிய சனநாயக முன்னணி | 3,488 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
இலங்கைத் தொழிற் கட்சி | 3,134 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
சனநாயக இடது முன்னணி | 2,964 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
புதிய சிங்கள மரபு | 1,397 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
ஐக்கிய சோசலிசக் கட்சி | 1,189 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
தாய்நாடு மக்கள் கட்சி | 1,087 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
ஈழவர் சனநாயக முன்னணி | 1,035 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
சோசலிச சமத்துவக் கட்சி | 780 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
லங்கா சமசமாஜக் கட்சி[iii] | 737 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
அனைத்துக் குடிகளும் மன்னர்களே அமைப்பு | 632 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
சனநாயக ஒற்றுமைக் கூட்டணி | 145 | 0.00 | 0 | 0 | 0 | |||||||||
சுயேச்சைகள் | 223,622 | 1.93 | 0 | 0 | 0 | |||||||||
செல்லுபடியான வாக்குகள் | 11,598,929 | 100% | 196 | 29 | 225 | |||||||||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 744,373 | 6.03% | ||||||||||||
மொத்த வாக்குகள் | 12,343,302 | |||||||||||||
பதிவு செய்த வாக்காளர்கள்/வாக்குவீதம் | 16,263,885 | 75.89% | ||||||||||||
அடிக்குறிப்புகள்:
|
கடந்தகாலத் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IFES Election Guide | Elections: Sri Lanka Pres Jan 2010". www.electionguide.org. பார்க்கப்பட்ட நாள் 2023-12-21.
- ↑ "Presidential Election Results - 2024". Election Commission of Sri Lanka. 22 September 2024. Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 September 2024.
- ↑ "2020 Sri Lankan Parliamentary Elections". Rajagiriya, Sri Lanka: இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2020.
- ↑ "Parliamentary Election 2020". Daily Mirror (Colombo, Sri Lanka). http://generalelection2020.dailymirror.lk/. பார்த்த நாள்: 7 August 2020.
- ↑ "Official Election Results Parliamentary Election – 2020 – Sri Lanka". news.lk (Colombo, Sri Lanka: Department of Government Information). http://elections.news.lk/election/. பார்த்த நாள்: 7 August 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- Department of Elections பரணிடப்பட்டது 2021-02-11 at the வந்தவழி இயந்திரம்
- Adam Carr's Election Archive
- www.Srilankanelections.com - A website featuring Sri Lankan elections and results.