இலட்சுமி நந்தன் போரா
இலட்சுமி நந்தன் போரா | |
---|---|
பிறப்பு | 15 சூன் 1932 (அகவை 92) நகாமோ மாவட்டம் |
இறப்பு | குவகாத்தி |
படித்த இடங்கள் |
|
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
இலட்சுமி நந்தன் போரா (ஆங்கிலம்: Lakshmi Nandan Bora ) இவர் ஒரு இந்திய நாவலாசிரியரும் மற்றும் அசாமிய மொழியில் சிறுகதை எழுத்தாளருமாவார்.[1][2] இவர் எழுதிய 60க்கும் மேற்பட்ட புத்தகங்களால் பெயர் பெற்றவர்.[3][4] விருது பெற்ற புதினங்களான பட்டல் பைரவி [5] மற்றும் காயகல்பா உட்பட.[6] சாகித்திய அகாதமி விருதும், சரஸ்வதி சம்மான் விருதும் பெற்ற்றுள்ளார்.[7][8] போராவை இந்திய அரசு 2015 இல் பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[9]
சுயசரிதை
[தொகு]இலட்சுமி நந்தன் போரா, 1932 ஜூன் 15 அன்று குடிஜா கிராமத்தின் ஹதிச்சுங் என்ற இடத்தில் பிறந்தார். இது வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ள நகாமோ மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குக்கிராமம் ஆகும். புலேசுவர் போரா மற்றும் புலேசுவரி ஆகியோருக்கு அவர்களின் ஐந்து குழந்தைகளில் இளையவராக பிறந்தார்.[3] இவரது இளவயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டனர். இவரது மூத்த சகோதரர் கமல் சந்திர போராவால் இவர் வளர்க்கப்பட்டார். நகாமோ உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பைச் முடித்தார். குவகாத்தியின் காட்டன் கல்லூரி மாநில பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் பி.எச்.டி. படித்த ஆந்திர பல்கலைக்கழகத்திலேயே வானிலை அறிவியலில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். பல்கலைக்கழகத்தில் வானிலை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபராக இருந்தார். இவரது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு அவர் ஜோர்காட்டின் அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய உறுப்பினராக பணியாற்றினார். பேராசிரியராக [7] ஓய்வுபெறும் வரை அந்த நிறுவனத்தில் பணியிலிருந்தார்.[7] 1992 மற்றும் 1992இல் இயற்பியல் மற்றும் வேளாண் அறிவியல் துறைத் தலைவராகவும் இருந்துள்ளார்.[4] இவர் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக இரண்டு பருவங்களுக்குப் பணியாற்றியுள்ளார். போரா 1961 இல் மாதுரி என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு சியூஜி என்ற ஒரு மகளும் திரிதிப் நந்தன் மற்றும் சுவரூப் நந்தன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அசாமின் குவகாத்தி என்ற செயற்கைக்கோள் நகரமான கணேஷ்குரியில் இவர்கள் குடும்பம் வசித்து வருகிறது. சியூஜி போரா நியோக் ஜோர்காட்டின் அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கத் துறையின் பேராசிரியராக உள்ளார். திரிதிப் நந்தன் போரா ஒரு மாநில அரசு மூத்த அதிகாரியாகவும், இளைய மகன் சுவரூப் நந்தன் குவஹாத்தியின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் கணித பேராசிரியராகவும் உள்ளார்.
இலக்கியழ் மற்றும் சமூக வாழ்க்கை
[தொகு]போரா போனா என்ற தனது தனது முதல் சிறுகதையை 1954இல் எழுதினார். இது இராம்தேனு என்ற அசாமிய இதழில் வெளியானது.[3] இவரது முதல் புத்தகம் திரித்திரூபா 1958இல் வெளியிடப்பட்டது. அடுத்த புத்தகம் நிசார் புராபி 1962இல் வெளியிடப்பட்டது. இவர் தனது முதல் புதினமான கோங்கா சிலோனிர் பக்கி என்பதை 1963இல் வெளியிட்டார். இது விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது 11 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டில் பதும் பருவா என்ற இயக்குனரால் அதே பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டுகளில் இவர் அசாமின் அரசியல் சூழலில் தீவிரமாக செயல்பாடுகளைக் கொண்ண்டிருந்தார். 1981 இல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு முறை கைது செய்யப்பட்டார்.
இவரது புதினமான அகோ சாரைகாத்,[10] என்பது இந்த நேரத்தில் எழுதப்பட்டு 1980இல் வெளியிடப்பட்டது. இவரது அரசியல் சாய்வை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிரதிபலிக்கிறது. இவர் இரங்க்பூர் என்ற ஒரு வார இதழை நிறுவினார். 1996 ஆம் ஆண்டு வரை அதன் ஆசிரியராக இருந்த இவர் பின்னர் பத்திரிக்கையின் உரிமையாளருடனான எற்பட்ட கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக அப்பதவியை விட்டு விலகினார்.
அவர் அசாம் சாகித்ய சபையின் தலைவராகவும் (1996-97) [3] மற்றும் அசாமின் திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[4] 1997 - 2003 காலகட்டத்தில் அசாம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் அசாமிய மாதாந்திர இலக்கிய இதழான கோரியோஷியின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.[7][11]
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
[தொகு]போரா தனது புதினமான பட்டல் பைரவி [8] 1988 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதையும், 2004 இல் அசாம் பள்ளத்தாக்கு இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.[4][7] இவரது புதினமான, காயகல்பா இவருக்கு கேகே பிர்லா அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட சரஸ்வதி சம்மான் விருதை 2008 ல் பெற்றுத் தந்தது. 2012 இல், அசாம் வெளியீட்டு வாரியம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து கௌரவித்தது.[11] 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.[9]
குறிப்புகள்
[தொகு]- ↑ Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Academy.
- ↑ "Bipul Jyoti". Bipul Jyoti. 2007. Archived from the original on 5 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 3.2 3.3 "UCCS". UCCS. 2015. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "The Hindu". The Hindu. 6 April 2011. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
- ↑ Patal Bhairavi (1997 edition). Sahitya Academy Publications.
- ↑ Kayakalpa — The Elixir of Everlasting Youth. Niyogi Books.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 "Good Reads". Good Reads. 2015. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
- ↑ 8.0 8.1 "Saraswati Samman". LKVP. 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
- ↑ 9.0 9.1 "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on 26 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
- ↑ "Akou Saraighat". Bani Prakash Pathsala. 1980. பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
- ↑ 11.0 11.1 "Assam Tribune". Assam Tribune. 3 October 2012. Archived from the original on 20 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
மேலும் படிக்க
[தொகு]- Lakshmi Nandan Bora (1997). Patal Bhairavi. Sahitya Academy Publications. p. 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126001460.
- Lakshmi Nandan Bora (2010). Kayakalpa — The Elixir of Everlasting Youth. Niyogi Books. p. 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189738679.
வெளி இணைப்புகள்
[தொகு]- Kartik Chandra Dutt (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Academy. p. 1490. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126008735.