உள்ளடக்கத்துக்குச் செல்

உயராட்சித் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{body}}} பெரிய பிரித்தானியவின்
உயராட்சித் தலைவர்
பிரித்தானிய அரசின் சின்னம்
தற்போது
டொமினிக் ராப்

15 செப்டம்பர் 2021 முதல்
நியமிப்பவர்அரசர்
பிரதமரின் ஆலோசனையின் பேரில்
முதலாவதாக பதவியேற்றவர்The Lord Cowper
உருவாக்கம்மே 1707

பெரிய பிரித்தானியவின் உயராட்சித் தலைவர் என்பது ஐக்கிய இராச்சியத்தின் அரசுப்பணிப் பொறுப்புகளில் மிகவும் குறிக்கத்தக்க ஒன்றாகும். அரசு அலுவலர்களில் இரண்டாம் மிக உயரிய பதவி இதுவாகும். இப்பதவிக்கான நபரை பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஐக்கிய இராச்சியத்தின் அரசர் பணியமர்த்துவார். ஒன்றிணைப்புக்கு முன்னர் இங்கிலாந்து (வேல்ஸ் உட்பட) மற்றும் இசுக்கொட்லாந்துக்கு தனித்தனியாக உயராட்சித் தலைவர்கள் இருந்தனர்.[1]

இப்பதவியினை வகிப்போர் சட்டப்படி அமைச்சரவையின் உறுப்பினராவர். இவர்களுடைய மிகவும் குறிப்பான பணி நீதிமன்றங்களை திறம்படவும், சுதந்திரத்தோடும் செயல்படவைப்பதாகும். 2005க்கு முன் இப்பணி பிரபுக்கள் அவைத் தலைமையாகவும், நீதித்துறையின் தலைமையாகவும் இருந்தது. ஆயினும் 2005இல் செய்யப்பட்ட சீர்திருத்தங்களின்போது முறையே அவைத்தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கு இவ்வதிகாரங்கள் கொடுக்கப்பட்டன.

தற்போது இப்பதவியினை வகிப்பவர் டொமினிக் ராப் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The title can be pluralised 'Lord Chancellors' or 'Lords Chancellor'. The former is more common and is used for consistency throughout the article. See Gardner, B., (2001), A dictionary of modern legal usage, Oxford University Press, p. 538.