உரூபி நூர்
உரூபி நூர் | |
---|---|
மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் 1991–2008 | |
பின்னவர் | மவுசம் நூர் |
தொகுதி | சுஜாபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஆகத்து 1945 மால்டா, மேற்கு வங்காளம், வங்காள மாகாணம், இந்தியா |
இறப்பு | சூலை 10, 2008 கொல்கத்தா, மேற்கு வங்காளம் இந்தியா | (அகவை 62)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | செய்யது முகமது நூர் |
பிள்ளைகள் |
|
வாழிடம்(s) | சககாசாலபூர், மால்டா, மேற்கு வங்காளம், மால்டா மாவட்டம் |
உரூபி நூர் (Rubi Noor)(12 ஆகஸ்ட் 1945 - 10 ஜூலை 2008) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். மேற்கு வங்காளம் சுஜாபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அவர் ஏ.பி.ஏ. கனி கான் சவுத்ரியின் இளைய சகோதரி மற்றும் மவுசம் நூரின் தாயார் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]உரூபி நூர் 1945ஆம் ஆண்டில் பிறந்தார். பெங்காலி முஸ்லீம் வம்சாவளியான கான் செளத்திரியின் மகளாக கோட்வாலி இல்லத்தில் பிறந்தார். மால்டாவில் தனது ஆரம்பக் கல்விக்குப் பிறகு, 1964இல் கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீஷிக்ஷயாதன் பள்ளியில் பயின்றார்.[1][2]
இவருடைய கல்லூரி கல்வியின் போது, கொல்கத்தாவில் பெக் பாகனில் வசிக்கும் சையது முகமது நூரை மணந்தார். முகமது நூர் வெளிநாட்டில் வேலை செய்தார். ரூபி தனது கணவருடன் கனடாவுக்குச் சென்றார். பின்னர் இவர்கள் 1972இல் கொல்கத்தா திரும்பினர்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]ரூபி நூர் 1991இல் தனது 46 வயதில் அரசியலில் நுழைந்தார். இவரது மூத்த சகோதரரும் காங்கிரசு தலைவருமான கானி கான் செளத்ரி, இவரை சுஜாபூரில் போட்டியிட வைத்தார்.[1][3] மற்றும் 2006 இல் சுஜாபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[4]
2001ஆம் ஆண்டில், கனி கான் செளத்ரி இவரை மால்டா மாவட்ட காங்கிரசு தலைவராக நியமித்தார். இவர் இறக்கும் வரை இப்பொறுப்பிலிருந்தார்.[1]
இறப்பு
[தொகு]ரூபி நூர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 10 ஜூலை 2008 அன்று கொல்கத்தாவில் தனது 65ஆவது அகவையில் இறந்தார். இவரது மரணத்திற்குப் பிறகு, இவரது உடல் மாநிலச் சட்டசபைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சட்டமன்றம் இவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஒத்திவைக்கப்பட்டது.[2][5]
இவருடைய கணவர் இவருக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள். இவருடைய மூத்த மகள் சோனியா நூர் அமெரிக்க இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இரண்டாவது மகள் சயீதா நூர், இவருடைய மாமா அபு ஹசெம் கான் செளத்ரியின் மகன் இஷா கான் செளவுத்ரியினை திருமணம் செய்துகொண்டார். இளைய மகள் மவுசம் நூர், தனது அன்னையின் மரணத்திற்குப் பிறகு அரசியலில் சேர்ந்தார். இவர் மல்டாஹ் உத்தர் தொகுதியிலிருந்துநாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
ஒரு அஞ்சலியில், தி டெலிகிராப் பத்திரிக்கை "பல ஆண்டுகளாக, நூரின் சகோதரர் வங்காள அரசியலில் நுண்ணறிவைப் பதித்தார், இது தேர்தல் அரசியலின் துடிப்பை உணர உதவியது. இவரது திறமையான தலைமையின் கீழ், இந்த ஆண்டு மால்டா மாவட்ட பகுதியில் காங்கிரசு மற்ற இடது-சாரி கட்சிகளுடன் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் ஆட்சிக்கு வந்தது. "புதிய மாவட்ட குழுவின் தலைவர், சபினா யாஸ்மின் என்பவர் ரூபியின் தேர்வாக இருந்தது. இதற்கு எதிராகக் காங்கிரசு அதிருப்தியாளர்கள் பல முயற்சிகள் செய்தனர்."[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Congress mourns loss of a leader who filled a void". The Telegraph, 11 July 2008. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
- ↑ 2.0 2.1 "Malda Congress MLA Rubi Noor passes away". Hindustan Times, 11 July 2008. Archived from the original on 19 July 2013. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
- ↑ "West Bengal Assembly adjourned to pay respect to Rubi Noor". webindia123. Archived from the original on 14 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)