எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)
எடப்பாடி சட்டமன்ற தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாகும். 1951ம் ஆண்டிலிருந்து இது சட்டமன்ற தொகுதியாக உள்ளது. 1957 & 1962 ஆகிய இரு தேர்தல்களில் மட்டும் இது சட்டமன்றத் தொகுதியாக இருக்கவில்லை.
இத்தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அதற்கு அடுத்தப்படியாக கொங்கு வேட்டுவக் கவுண்டர்கள், கொங்கு வேளாளர், முதலியார் சமூகத்தினரும் உள்ளனர்.[1] இத்தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 757 பேர், பெண்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 597 பேர், மூன்றாம் பாலினத்தினர் 24 பேர் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 378 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். 4 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார் மற்றும் ஒருமுறை தோல்வியை தழுவினார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தற்போது எடப்பாடி க. பழனிசாமி 6வது முறையாகவும், திமுக சார்பில் த. சம்பத் குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா, அமமுக சார்பில் பூக்கடை என். சேகர் ஆகியோர் போட்டியிட்டனர்.
விவசாயமும் நெசவுத் தொழிலும்தான் இந்த பகுதியின் பிரதானமான தொழில்களாக இருக்கிறது. காவிரி ஆறு ஓடக்கூடிய எடப்பாடி பகுதியில் சுற்றிலும் ஏரிகளும், குளங்களும் உள்ளன. குறிப்பாக அரிய வகை பாறைகள் உள்ளன. காவிரி நதிக்கரையோரம் அமைந்துள்ள எடப்பாடி தொகுதியில் நெசவும், விவசாயமும் பிரதான தொழில்கள். கைத்தறி, விசைத்தறி, பட்டு துண்டு, கைலி மற்றும் சுடிதார் உடைகள் ஆகியவை எடப்பாடி தொகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- எடப்பாடி வட்டம்
- மேட்டூர் வட்டம் (பகுதி)
வீரக்கல், குட்டப்பட்டி, மல்லிக்குட்டப்பட்டி, சின்னசோரகை, பெரியசோரகை, தாசகாப்பட்டி, வனவாசி, சூரப்பள்ளி, தோரமங்கலம், மற்றும் கரிக்காப்பட்டி கச்சுப்பள்ளி கிராமங்கள்.
நங்கவள்ளி (பேரூராட்சி), வனவாசி (பேரூராட்சி), ஜலகண்டாபுரம் (பேரூராட்சி) மற்றும் (கொங்கணாபுரம்)ஆவடத்தூர்[3]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | கே. எஸ். அர்த்தநாதீஸ்வரா கவுண்டர் | காங்கிரசு | 15368 | 33.15 | எஸ். மாரிமுத்து கவுண்டர் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 11280 | 24.33 |
1967 | ஏ. ஆறுமுகம் | திமுக | 36935 | 54.70 | கே. எஸ். எஸ். கவுண்டர் | காங்கிரசு | 30593 | 45.30 |
1971 | ஏ. ஆறுமுகம் | திமுக | 35638 | 54.72 | டி. நடராஜன் | காங்கிரசு (ஸ்தாபன) | 29485 | 45.28 |
1977 | இ. கணேசன் | அதிமுக | 31063 | 38.56 | டி. நடராஜன் | காங்கிரசு | 24256 | 30.11 |
1980 | இ. கணேசன் | அதிமுக | 37978 | 38.93 | டி. நடராஜன் | சுயேச்சை | 32159 | 32.97 |
1984 | கோவிந்தசாமி | காங்கிரசு | 68583 | 64.78 | பி. ஆறுமுகம் | திமுக | 27860 | 26.32 |
1989 * | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக (ஜெ) | 30765 | 33.08 | எல். பழனிசாமி | திமுக | 29401 | 31.62 |
1991 | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக | 72379 | 58.24 | பி. கொழந்தா கவுண்டர் | பாமக | 31113 | 25.03 |
1996 | இ. கணேசன் | பாமக | 49465 | 37.68 | பி. எ. முருகேசன் | திமுக | 40273 | 30.68 |
2001 | இ. கணேசன் | பாமக | 74375 | 55.40 | எ. கந்தசாமி | திமுக | 43564 | 32.45 |
2006 ** | வி. காவேரி | பாமக | 76027 | -- | கே. பழனிசாமி | அதிமுக | 69680 | -- |
2011 | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக | 104586 | -- | மு.கார்த்திக் | பாமக | 69848 | -- |
2016 | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக | 98703 | -- | ந. அண்ணாதுரை | பாமக | 56681 | -- |
2021 | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக | 163154 | -- | த. சம்பத் குமார் | திமுக | 69352 | -- |
- 1977ல் ஜனதாவின் பி. ஜெயதேவன் 13544 (16.81%) & திமுகவின் எ. ஆறுமுகம் 11695 (14.52%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980ல் காங்கிரசு சார்பில் நின்ற கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர் 17884 (18.33%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் கோவிந்தசாமி 16289 (17.52%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் ஐ. கணேசன் 15181 (16.32%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் திமுகவின் எ. கந்தசாமி 20011 (16.10) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் அதிமுகவின் கே. பழனிசாமி 37036 (28.21%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் சுயேச்சையான பி. கொழந்தா கவுண்டர் 8576 (6.39%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் எ. கே. இராஜேந்திரன் 7954 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் சம்பத்குமார் யார்?". நக்கீரன்
- ↑ 6-வது முறையாக களம் காணும் எடப்பாடி பழனிசாமி- தொகுதி கண்ணோட்டம் - 2021 தேர்தல்
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.