கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி
கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி என்பது உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு முறை எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளதோ அங்கெல்லாம் கடைப்பிடிப்பதற்காக வகுக்கப்பட்ட தனி நாள்காட்டி ஆகும். இந்நாள்காட்டியில் வழிபாட்டு ஆண்டின் ஒவ்வொரு நாளும் அனுசரிக்கப்பட வேண்டிய புனிதர் விழாக்கள், ஆண்டவர் இயேசுவின் வாழ்வுதொடர்பான மறைநிகழ்வுகள் போன்றவை குறிக்கப்பட்டிருக்கும்[1].
இப்பொது நாள்காட்டி தவிர, தனித்தனி நாடுகளுக்கும் துறவற சபைகளுக்கும் உரிய நாள்காட்டிகளும் உண்டு.
இந்த எல்லா நாள்காட்டிகளிலும் குறிக்கப்படுகின்ற கொண்டாட்டங்கள் கீழ்வருமாறு வரிசைப்படுத்தப்படுகின்றன:
- விருப்ப நினைவு (வி.நி.) - இந்நாளில் தரப்படுகின்ற புனிதரின் நினைவாகத் திருப்பலி கொண்டாடலாம் என்னும் குறிப்பாகும்
- நினைவு (நி.) - இந்நாளில் தரப்படுகின்ற புனிதரின் நினைவாகத் திருப்பலி கொண்டாட வேண்டும் என்னும் குறிப்பாகும்
- விழா (வி.) - இந்நாளில் தரப்படுகின்ற மறையுண்மையை அல்லது புனிதரை விழா சிறப்பித்து திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என்னும் குறிப்பாகும். விழாத் திருப்பலியில் உன்னதங்களிலே என்று தொடங்கும் வானவர் கீதம் இடம்பெறும்.
- பெருவிழா (பெ.) - இந்நாளில் தரப்படுகின்ற மறையுண்மையை அல்லது புனிதரை பெருவிழா கொண்டாடி ஆடம்பரத் திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என்னும் குறிப்பாகும். பெருவிழாத் திருப்பலியில் வானவர் கீதத்துடன், கூடுதலாக நம்பிக்கை அறிக்கையும் இடம்பெறும்.
புனிதர்களின் எண்ணிக்கை
[தொகு]கத்தோலிக்க திருச்சபை பல ஆயிரக் கணக்கான புனிதர்களைச் சிறப்பிக்கிறது. உரோமை மறைச்சாட்சியர் நூலில் (Roman Martyrology) அடங்கியுள்ள எல்லாப் புனிதர்களும் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இல்லை. அதுபோலவே அந்த நாள்காட்டியில் உள்ள எல்லாப் பெயர்களும் உரோமை மறைச்சாட்சியர் நூலிலும் இல்லை[2]. ஆக, கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் சில புனிதர்களின் பெயர்களே இடம் பெறுகின்றன.
திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் எல்லாருமே கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம் பெறுவதில்லை. இச்சிறப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கே வழங்கப்படுகிறது.
வேறு சில நாள்காட்டிகளில் ஒரே நாளுக்குப் பல புனிதர்கள் குறிப்பதும் உண்டு[3]. பொது நாள்காட்டியில் புனிதர்களின் பெயர் இல்லாத நாள்களுக்கும் புனிதர் பெயர்களைச் சேர்ப்பதுண்டு.
பொது நாள்காட்டியின் சில கூறுகள்
[தொகு]ஒரு நாட்டில் கொண்டாடப்படுகின்ற புனிதர்களின் நினைவு வேறு எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் என்றில்லை. எடுத்துக்காட்டாக, அயர்லாந்து நாட்டில் புனித பாட்ரிக், மெக்சிகோ நாட்டில் குவாதலூப்பே அன்னை, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் புனித எலிசபெத் ஆன் சீட்டன், இந்திய நாட்டில் புனித ஜான் தெ பிரிட்டோ (ஓரியூர் புனித அருளானந்தர்) என்பவர்களின் விழாக்கள் அந்தந்த நாடுகளுக்குச் சிறப்பானவை. அதுபோலவே, கத்தோலிக்க திருச்சபையில் உள்ள தனித்தனி துறவற சபைகள் தத்தம் நிறுவுநர் நினைவைத் தனியாகச் சிறப்பிப்பது வழக்கம்.
பொது நாள்காட்டியில் தரப்படுகின்ற புனிதர் நினைவு, விழா போன்றவை உலகனைத்துக்கும் பொருந்துகின்ற கொண்டாட்டங்கள் ஆகும்.
இச்சீர்திருத்தம் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தால் (1962-1965) கொண்டுவரப்பட்டது. சங்கத்தின் கூற்றுப்படி,
“ | நிறைவாழ்வின் மறைபொருளை நினைவுக்குக் கொணரும் திருவிழாக்களைவிட தூயவர்களின் திருவிழாக்கள் முதன்மை பெறாதிருக்கும் பொருட்டு, அவற்றுள் பலவற்றைத்தனிப்பட்ட சபையின் நாட்டின், துறவற இல்லத்தின் கொண்டாட்டங்களுக்கு விட்டுவிட வேண்டும். உண்மையிலேயே பொதுவாக முக்கியத்துவம் வாய்ந்த தூயவர்களை நினைவுகூரும் திருவிழாக்களை மட்டும் திருச்சபை முழுவதிலும் கொண்டாட வேண்டும் ("திருவழிபாடு", எண் 111). | ” |
முந்திய நூற்றாண்டுகளில் புனிதராக ஏற்கப்பட்ட சிலர் 1969இல் புனிதர் நிலையிலிருந்து "கீழிறக்கப்பட்டார்கள்" என்னும் தவறான கருத்து சிலரிடையே நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, புனித கிறிஸ்தோபர் என்பவரைக் கூறலாம். இவர் பெயர் புனிதர் வரிசையில் "மறைச்சாட்சியர் நூல்" என்னும் ஏட்டில் (16ஆம் நூற்றாண்டு) உள்ளது. ஆனால், இவரது வாழ்வு பற்றி நமக்குக் கிடைக்கும் குறிப்புகள் புனைவுச் செய்தியாக இருந்தாலும் அவருக்கு மிகப் பழங்காலத்திலிருந்தே வணக்கம் செலுத்தப்பட்டு வந்துள்ளதாலும், தனித் திருச்சபைகளில் அப்புனிதரின் நினைவு உளதாலும், பொது நாள்காட்டியில் பிற்காலத்தில் மட்டுமே அவர் பெயர் சேர்க்கப்பட்டதாலும் இப்போது அவர் பெயர் பொது நாள்காட்டியில் தரப்படவில்லை என்று திருத்தந்தை ஆறாம் பவுல் விளக்கினார்.[4]
குறிப்பிட்ட தேதியின்றி மாறிவரும் கொண்டாட்டங்கள்
[தொகு]- திருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா.
- உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய நாற்பத்து ஆறாம் நாள்: திருநீற்றுப் புதன்.
- உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய ஞாயிறு: குருத்து ஞாயிறு.
- உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய வியாழக் கிழமை: பெரிய வியாழன்.
- உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய வெள்ளிக் கிழமை: புனித வெள்ளி.
- மார்ச் 20ஆம் தேதிக்குப் பின் வருகின்ற முழுநிலவுக்கு அடுத்த ஞாயிறு: உயிர்ப்பு பெருவிழா.
- உயிர்ப்பு பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிறு: இறை இரக்க ஞாயிறு.
- உயிர்ப்பு பெருவிழாவிலிருந்து நாற்பதாம் நாள்: ஆண்டவரின் விண்ணேற்றம்.
- உயிர்ப்பு பெருவிழாவிலிருந்து ஐம்பதாம் நாள்: தூய ஆவிப் பெருவிழா.
- தூய ஆவிப் பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிறு: மூவொரு இறைவன் பெருவிழா.
- மூவொரு இறைவன் பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிறு: ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா.
- தூய ஆவிப் பெருவிழாவை அடுத்து வரும் இரண்டாம் ஞாயிறுக்குப் பின் வரும் வெள்ளி: இயேசுவின் திரு இதயப் பெருவிழா.
- தூய ஆவிப் பெருவிழாவை அடுத்து வரும் இரண்டாம் ஞாயிறுக்குப் பின் வரும் சனி: மரியாவின் மாசற்ற இதயம்.
- பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு (நவம்பர் 27ஆம் தேதிக்கு முந்திய ஞாயிறு): கிறிஸ்து அரசர் பெருவிழா.
- கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் எண்கிழமையின் உள் வருகின்ற ஞாயிறு (அவ்வாறு ஞாயிறு வரவில்லை என்றால் டிசம்பர் 30ஆம் தேதி): திருக்குடும்ப பெருவிழா.
இந்தியா உட்பட பல நாடுகளில் சில பெருவிழாக்கள் வார நாளில் வந்தால் அவை அடுத்துவரும் ஞாயிற்றுக் கிழமைக்குத் தள்ளிவைக்கப்படுகின்றன. இவ்வாறு வரும் கொண்டாட்டங்கள்:
- திருக்காட்சி பெருவிழா சனவரி முதல் தேதிக்குப் பின் வரும் ஞாயிறு.
- ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின் வரும் ஏழாம் ஞாயிறு.
- ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா தூய ஆவிப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு.
உலகெங்கிலும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா டிசம்பர் 25ஆம் தேதியே கொண்டாடப்படும். அதுபோல, இந்தியாவில் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா எப்போதும் ஆகஸ்டு 15ஆம் தேதியே கொண்டாடப்படும்.
பொது நாள்காட்டிப்படி ஒவ்வொரு மாதமும் வருகின்ற கொண்டாட்டங்கள்
[தொகு]கீழே ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் கொண்டாடுவதற்குக் குறிக்கப்படுகின்ற பெருவிழாக்கள் (பெ.), விழாக்கள் (வி.), நினைவுகள் (நி.), விருப்ப நினைவுகள் (வி.நி.) சுருக்கக் குறியீடுகளோடு தரப்படுகின்றன. குறிப்புகள் எதுவுமே தரப்படாத நாள்கள் "விடுமுறை" ("Feria") ஆகும்.
ஜனவரி மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்:
தூய கன்னி மரியா இறைவனின் தாய் |
பெ. | |
2 | புனிதர்கள் பெரிய பசிலியார்,
நசியான்சன் கிரகோரியார் |
ஆயர்கள், மறைவல்லுநர்கள் | நி. |
3 | இயேசுவின் திருப்பெயர் | வி.நி. | |
4 | |||
5 | |||
6 | ஆண்டவரின் திருக்காட்சி | பெ. | |
7 | புனித பெனாப்போர்த்து இரெய்முந்து | மறைப்பணியாளர் | வி.நி. |
8 | |||
9 | |||
10 | |||
11 | |||
12 | |||
13 | புனித இலாரியார் | ஆயர், மறைவல்லுநர் | வி.நி. |
14 | அருளாளர் தேவசகாயம் பிள்ளை | பொதுநிலையினர், மறைசாட்சி | |
15 | |||
16 | |||
17 | புனித அந்தோணியார் | ஆதீனத் தலைவர் | நி. |
18 | |||
19 | |||
20 | புனித பபியான்,
புனித செபஸ்தியார் |
திருத்தந்தை, மறைச்சாட்சி
மறைச்சாட்சி |
வி.நி. |
21 | புனித ஆக்னெஸ் | கன்னியர், மறைச்சாட்சி | நி. |
22 | புனித வின்சென்ட் | திருத்தொண்டர், மறைச்சாட்சி | வி.நி. |
23 | |||
24 | புனித பிரான்சிஸ் சலேசியார் | ஆயர், மறைவல்லுநர் | நி. |
25 | திருத்தூதர் பவுல் - மனமாற்றம் | வி. | |
26 | புனிதர்கள் திமொத்தேயு, தீத்து | ஆயர்கள் | நி. |
27 | புனித மெரிசி ஆஞ்சலா | கன்னியர் | வி.நி. |
28 | அக்குவினோ நகர் புனித தோமா | மறைப்பணியாளர், மறைவல்லுநர் | நி. |
29 | |||
30 | |||
31 | புனித ஜான் போஸ்கோ | மறைப்பணியாளர் | நி. |
சனவரி 6ஆம் தேதிக்குப் பின் வரும் ஞாயிறு: ஆண்டவரின் திருமுழுக்கு விழா.
(திருக்காட்சிப் பெருவிழா ஞாயிறன்று கொண்டாடும் இடங்களில், அது சனவரி 6ஆம் |
பெப்ருவரி மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | |||
2 | ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் | வி. | |
3 | புனித பிளாசியு,
புனித ஆன்ஸ்காரியு |
ஆயர், மறைச்சாட்சி
ஆயர் |
வி.நி. |
4 | |||
5 | புனித ஆகத்தா | கன்னியர், மறைச்சாட்சி | நி. |
6 | புனிதர்கள் மறைப்பணியாளர் பவுல் மீகி,
தோழர்கள் |
மறைச்சாட்சியர் | நி. |
7 | |||
8 | புனித எரோணிமுஸ் எமிலியன்,
புனித ஜோஸ்பீன் பக்கீத்தா |
கன்னியர் |
வி.நி. |
9 | |||
10 | புனித ஸ்கொலாஸ்திக்கா | கன்னியர் | நி. |
11 | தூய லூர்து அன்னை | வி.நி. | |
12 | |||
13 | |||
14 | புனிதர்கள் சிரில்,
மெத்தோடியு |
துறவி
ஆயர் |
நி. |
15 | |||
16 | |||
17 | தூய மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் | வி.நி. | |
18 | |||
19 | |||
20 | |||
21 | புனித பீட்டர் தமியான் | ஆயர், மறைவல்லுநர் | வி.நி. |
22 | திருத்தூதர் பேதுருவின் தலமைப் பீடம் | வி. | |
23 | புனித பொலிக்கார்ப்பு | ஆயர், மறைச்சாட்சி | நி. |
24 | |||
25 | |||
26 | |||
27 | |||
28 |
மார்ச் மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | |||
2 | |||
3 | |||
4 | புனித கசிமீர் | வி.நி. | |
5 | |||
6 | |||
7 | புனிதையர் பெர்பெத்துவா,
பெலிசித்தா |
மறைச்சாட்சியர் | நி. |
8 | புனித இறை யோவான் | துறவி | வி.நி. |
9 | உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா | துறவி | வி.நி. |
10 | |||
11 | |||
12 | |||
13 | |||
14 | |||
15 | |||
16 | |||
17 | புனித பேட்ரிக் | ஆயர் | வி.நி. |
18 | எருசலேம் நகர் புனித சிரில் | ஆயர், மறைவல்லுநர் | வி.நி. |
19 | புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் | பெ. | |
20 | |||
21 | |||
22 | |||
23 | புனித மாங்ரோவேகோ துரீபியு | ஆயர் | வி.நி. |
24 | |||
25 | கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு | பெ. | |
26 | |||
27 | |||
28 | |||
29 | |||
30 | |||
31 |
ஏப்ரல் மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | |||
2 | புனித பவோலா பிரான்சிஸ் | வனத்துறவி | வி.நி. |
3 | |||
4 | புனித இசிதோர் | ஆயர், மறைவல்லுநர் | வி.நி. |
5 | புனித வின்சென்ட் பெரர் | மறைப்பணியாளர் | வி.நி. |
6 | |||
7 | லசால் நகர் புனித ஜான் பாப்டிஸ்ட் | மறைப்பணியாளர் | நி. |
8 | |||
9 | |||
10 | |||
11 | புனித தனிஸ்லாஸ் | ஆயர், மறைச்சாட்சி | நி. |
12 | |||
13 | புனித முதலாம் மார்ட்டின் | திருத்தந்தை, மறைச்சாட்சி | வி.நி. |
14 | |||
15 | |||
16 | |||
17 | |||
18 | |||
19 | |||
20 | |||
21 | புனித ஆன்சலம் | ஆயர், மறைவல்லுநர் | வி.நி. |
22 | |||
23 | புனித ஜார்ஜ்,
புனித அடால்பெர்ட் |
மறைச்சாட்சி
ஆயர், மறைச்சாட்சி |
வி.நி. |
24 | புனித சிக்மரிங்ஞன் பிதேலிஸ் | மறைப்பணியாளர், மறைச்சாட்சி | வி.நி. |
25 | புனித மாற்கு | நற்செய்தியாளர் | வி. |
26 | |||
27 | |||
28 | புனித பியர் சானல்,
மான்போர்ட் நகர் புனித லூயி மரிய கிரிஞ்ஞோ |
மறைப்பணியாளர், மறைச்சாட்சி
மறைப்பணியாளர் |
வி.நி. |
29 | சியன்னா நகர் புனித கத்தரீன் | கன்னியர், மறைவல்லுநர் | நி. |
30 | புனித ஐந்தாம் பயஸ் | திருத்தந்தை | வி.நி. |
மே மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | தொழிலாளரான புனித யோசேப்பு | வி.நி. | |
2 | புனித அத்தனாசியு | ஆயர், மறைவல்லுநர் | நி. |
3 | புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு | திருத்தூதர்கள் | வி. |
4 | |||
5 | |||
6 | |||
7 | |||
8 | |||
9 | |||
10 | |||
11 | |||
12 | புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு புனித பங்கிராஸ்,
புனித லியோபோல்டு மேன்டிக் |
மறைச்சாட்சியர்,
மறைப்பணியாளர் |
வி.நி. |
13 | தூய பாத்திமா அன்னை | வி.நி. | |
14 | புனித மத்தியா | திருத்தூதர் | வி. |
15 | |||
16 | |||
17 | |||
18 | புனித முதலாம் யோவான்,
புனித கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ் |
திருத்தந்தை, மறைச்சாட்சி,
துறவி |
வி.நி. |
19 | |||
20 | சியன்னா நகர் புனித பெர்னார்தீன் | மறைப்பணியாளர் | வி.நி. |
21 | புனிதர்கள் மறைப்பணியாளர் கிறிஸ்டோபர் மெகாலன்,
தோழர்கள் |
மறைச்சாட்சியர் | வி.நி. |
22 | காசியா நகர் புனித ரீத்தா | துறவி | வி.நி. |
23 | |||
24 | |||
25 | வணக்கத்துக்குரிய புனித பீடு,
புனித ஏழாம் கிரகோரி
|
மறைப்பணியாளர், மறைவல்லுநர்
திருத்தந்தை
|
வி.நி. |
26 | புனித பிலிப்பு நேரி | மறைப்பணியாளர் | நி. |
27 | கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் | ஆயர் | வி.நி. |
28 | |||
29 | |||
30 | |||
31 | தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் | வி. | |
தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு:
மூவொரு இறைவன் பெருவிழா. |
ஜூன் மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | புனித ஜஸ்டின் | மறைச்சாட்சி | நி. |
2 | புனிதர்கள் மார்சலின்,
பீட்டர் |
மறைச்சாட்சியர் | வி.நி. |
3 | புனிதர்கள் சார்லஸ் லுவாங்கா,
தோழர்கள் |
மறைச்சாட்சியர் | நி. |
4 | |||
5 | புனித போனிப்பாஸ் | ஆயர், மறைச்சாட்சி | நி. |
6 | புனித நார்பெர்ட் | ஆயர், மறைச்சாட்சி | வி.நி. |
7 | |||
8 | |||
9 | புனித எபிரேம் | திருத்தொண்டர், மறைவல்லுநர் | வி.நி. |
10 | |||
11 | புனித பர்னபா | திருத்தூதர் | நி. |
12 | |||
13 | பதுவா நகர் புனித அந்தோனியார் | மறைப்பணியாளர், மறைவல்லுநர் | நி. |
14 | |||
15 | |||
16 | |||
17 | |||
18 | |||
19 | புனித ரோமுவால்து | ஆதீனத் தலைவர் | வி.நி. |
20 | |||
21 | புனித அலோசியுஸ் கொன்சாகா | துறவி | நி. |
22 | புனித பவுலீனு நோலா
புனிதர்கள் ஆயர் ஜான் பிசர்,
|
துறவி
மறைச்சாட்சியர் |
வி.நி. |
23 | |||
24 | புனித திருமுழுக்கு யோவான் பிறப்பு | பெ. | |
25 | |||
26 | |||
27 | அலெக்சாந்திரிய நகர் புனித சிரில் | ஆயர், மறைவல்லுநர் | வி.நி. |
28 | புனித இரனேயு | ஆயர், மறைச்சாட்சி | நி. |
29 | புனிதர்கள் பேதுரு, பவுல் | திருத்தூதர்கள் | பெ. |
30 | உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர் | வி.நி. | |
தூய ஆவிப் பெருவிழாவுக்குப் பின் வரும் இரண்டாம் ஞாயிறுக்குப்
பின் வரும் வெள்ளி: இயேசுவின் திரு இதயம் பெருவிழா. |
|||
தூய ஆவி விழாவுக்குப் பின்வரும் 2ஆம் ஞாயிறை
அடுத்த சனி: தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் |
வி.நி. |
ஜூலை மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | |||
2 | |||
3 | புனித தோமா | திருத்தூதர் | வி. |
4 | போர்த்துகல் நாட்டு புனித எலிசபெத்து | வி.நி. | |
5 | புனித அந்தோணி மரிய செக்கரியா | மறைப்பணியாளர் | வி.நி. |
6 | புனித மரிய கொரற்றி | கன்னியர், மறைச்சாட்சி | வி.நி. |
7 | |||
8 | |||
9 | புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு,
தோழர்கள் |
மறைச்சாட்சியர் | வி.நி. |
10 | |||
11 | புனித பெனடிக்ட் | ஆதீனத் தலைவர் | நி. |
12 | |||
13 | புனித என்றி | வி.நி. | |
14 | புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் | மறைப்பணியாளர் | வி.நி. |
15 | புனித பொனவெந்தூர் | ஆயர், மறைவல்லுநர் | நி. |
16 | தூய கார்மேல் அன்னை | வி.நி. | |
17 | |||
18 | |||
19 | |||
20 | புனித அப்போலினாரிஸ் | ஆயர், மறைச்சாட்சி | வி.நி. |
21 | புனித பிரின்டிசி நகர லாரன்சு | மறைப்பணியாளர், மறைவல்லுநர் | வி.நி. |
22 | புனித மகதலா மரியா | நி. | |
23 | புனித பிரிசித்தா | துறவி | வி.நி. |
24 | புனித சார்பெல் மாக்லுப் | மறைப்பணியாளர் | வி.நி. |
25 | புனித யாக்கோபு | திருத்தூதர் | வி. |
26 | புனிதர்கள் யோவாக்கீம், அன்னா | தூய மரியாவின் பெற்றோர் | நி. |
27 | |||
28 | |||
29 | புனித மார்த்தா | நி. | |
30 | புனித பீட்டர் கிறிசோலோகு | ஆயர், மறைவல்லுநர் | வி.நி. |
31 | புனித லொயோலா இஞ்ஞாசி | மறைப்பணியாளர் | நி. |
ஆகஸ்ட் மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | புனித அல்போன்ஸ் மரிய லிகோரி | ஆயர், மறைவல்லுநர் | நி. |
2 | வெசெல்லி நகர் புனித யுசேபியு
புனித பீட்டர் ஜூலியன் எய்மார்ட் |
ஆயர்
மறைப்பணியாளர் |
வி.நி. |
3 | |||
4 | புனித ஜான் மரிய வியான்னி | மறைப்பணியாளர் | நி. |
5 | தூய கன்னி மரியாவின் பேராலய நேர்ந்தளிப்பு
(பனிமய அன்னை) |
வி.நி. | |
6 | ஆண்டவரின் தோற்றமாற்றம் | வி. | |
7 | புனிதர்கள் திருத்தந்தை 2ஆம் சிக்ஸ்து,தோழர்கள்
புனித கயத்தான் |
மறைச்சாட்சியர்
|
வி.நி. |
8 | புனித தோமினிக் | மறைப்பணியாளர் | நி. |
9 | திருச்சிலுவையின் புனித தெரேசா பெனடிக்டா | கன்னியர், மறைச்சாட்சி | வி.நி. |
10 | புனித லாரன்ஸ் | திருத்தொண்டர், மறைச்சாட்சி | வி. |
11 | புனித கிளாரா | கன்னியர் | நி. |
12 | சாந்தால் நகர் புனித ஜான் பிரான்சிஸ்கா | துறவி | வி.நி. |
13 | புனிதர்கள் திருத்தந்தை போன்சியானு,
இப்போலித்து |
மறைப்பணியாளர்,
மறைச்சாட்சியர் |
வி.நி. |
14 | புனித மாக்சிமிலியன் மரிய கோல்பே | மறைப்பணியாளர், மறைச்சாட்சி | நி. |
15 | தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு | பெ. | |
16 | அங்கேரி புனித ஸ்தேவான் | வி.நி. | |
17 | |||
18 | |||
19 | புனித ஜான் யூட்ஸ் | மறைப்பணியாளர் | நி. |
20 | புனித பெர்நார்ட் | ஆதீனத் தலைவர், மறைவல்லுநர் | நி. |
21 | புனித பத்தாம் பயஸ் | திருத்தந்தை | நி. |
22 | அரசியான தூய கன்னி மரியா | நி. | |
23 | லீமா நகர் புனித ரோசா | கன்னியர் | வி.நி. |
24 | புனித பர்த்தலமேயு | திருத்தூதர் | வி. |
25 | புனித லூயி
கலசான்ஸ் நகர் புனித யோசேப்பு |
மறைப்பணியாளர் |
வி.நி. |
26 | |||
27 | புனித மோனிக்கா | நி. | |
28 | புனித அகுஸ்தீன் | ஆயர், மறைவல்லுநர் | நி. |
29 | திருமுழுக்கு யோவானின் பாடுகள் | நி. | |
30 | |||
31 |
செப்டம்பர் மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | |||
2 | |||
3 | புனித பெரிய கிரகோரி | திருத்தந்தை, மறைவல்லுநர் | நி. |
4 | |||
5 | அருளாளர் அன்னை தெரசாள் | ||
6 | |||
7 | |||
8 | தூய கன்னி மரியாவின் பிறப்பு
(ஆரோக்கிய அன்னை) |
வி. | |
9 | புனித பீட்டர் கிளாவர் | மறைப்பணியாளர் | வி.நி. |
10 | |||
11 | |||
12 | மரியாவின் திருப்பெயர் | வி.நி. | |
13 | புனித யோவான் கிறிசோஸ்தோம் | ஆயர் | நி. |
14 | திருச்சிலுவையின் மகிமை | வி. | |
15 | தூய வியாகுல அன்னை | நி. | |
16 | புனித திருத்தந்தை கொர்னேலியு,
ஆயர் சிப்பிரியன் |
மறைச்சாட்சியர் | நி. |
17 | புனித ராபர்ட் பெல்லார்மின் | ஆயர், மறைவல்லுநர் | வி.நி. |
18 | |||
19 | புனித சனுவாரியு | ஆயர், மறைச்சாட்சி | வி.நி. |
20 | புனித மறைப்பணியாளர் ஆன்ரு கிம் தே கோன்,
பவுல் சோங் காசாங், தோழர்கள் |
மறைச்சாட்சியர் | நி. |
21 | புனித மத்தேயு | திருத்தூதர், நற்செய்தியாளர் | வி. |
22 | |||
23 | பியட்ரல்சினா புனித பியோ | மறைப்பணியாளர் | நி. |
24 | |||
25 | |||
26 | புனிதர்கள் கோஸ்மாஸ்,
தமியான் |
மறைச்சாட்சியர் | வி.நி. |
27 | புனித வின்சென்ட் தே பவுல் | மறைப் பணியாளர் | நி. |
28 | புனித வென்செஸ்லாஸ்
புனிதர்கள் லாரன்ஸ் ரூய்ஸ், தோழர்கள் |
மறைச்சாட்சி
மறைச்சாட்சியர் |
வி.நி. |
29 | தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் | அதிதூதர்கள் | வி. |
30 | புனித எரோணிமுஸ் | மறைப்பணியாளர், மறைவல்லுநர் | நி. |
அக்டோபர் மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | குழந்தை இயேசுவின் புனித தெரேசா | கன்னியர் | நி. |
2 | தூய காவல் தூதர்கள் | நி. | |
3 | |||
4 | அசிசி நகர் புனித பிரான்சிஸ் | நி. | |
5 | |||
6 | புனித புரூனோ | மறைப்பணியாளர் | வி.நி. |
7 | தூய செபமாலை அன்னை | நி. | |
8 | |||
9 | புனிதர்கள் ஆயர் தியோனியுசு, தோழர்கள்
புனித யோவான் லெயோனார்ட் |
மறைச்சாட்சியர்
|
வி.நி. |
10 | |||
11 | |||
12 | |||
13 | |||
14 | புனித முதலாம் கலிஸ்து | திருத்தந்தை, மறைச்சாட்சி | வி.நி. |
15 | இயேசுவின் (அவிலா நகர்) புனித தெரேசா | கன்னியர், மறைவல்லுநர் | நி. |
16 | புனித எட்விஜ்
புனித மார்கரீத் மரியா அலக்கோக்கு |
துறவி
|
வி.நி. |
17 | அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசி | ஆயர், மறைச்சாட்சி | நி. |
18 | புனித லூக்கா | நற்செய்தியாளர் | வி. |
19 | புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள்
|
மறைச்சாட்சியர்
|
வி.நி. |
20 | |||
21 | |||
22 | |||
23 | கப்பஸ்த்தரானோ நகர் புனித யோவான் | மறைப்பணியாளர் | வி.நி. |
24 | புனித அந்தோனி மரிய கிளாரட் | ஆயர் | வி.நி. |
25 | |||
26 | |||
27 | |||
28 | புனிதர்கள் சீமோன், யூதா | திருத்தூதர்கள் | வி. |
29 | |||
30 | |||
31 |
நவம்பர் மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | புனிதர் அனைவர் | பெ. | |
2 | இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு | ||
3 | புனித மார்ட்டின் தெ போரஸ் | துறவி | வி.நி. |
4 | புனித சார்லஸ் பொரோமியோ | ஆயர் | நி. |
5 | |||
6 | |||
7 | |||
8 | |||
9 | இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு | வி. | |
10 | புனித பெரிய லெயோ | திருத்தந்தை, மறைவல்லுநர் | நி. |
11 | தூரின் நகர் புனித மார்ட்டின் | ஆயர், மறைச்சாட்சி | நி. |
12 | புனித யோசபாத்து | ஆயர், மறைச்சாட்சி | நி. |
13 | புனித தனிஸ்லாஸ் கோஸ்கா | திருத்தொண்டர் | நி. |
14 | |||
15 | புனித பெரிய ஆல்பர்ட் | ஆயர், மறைவல்லுநர் | வி.நி. |
16 | ஸ்காட்லாந்து புனித மார்கரீத்
புனித ஜெர்த்ரூது |
|
வி.நி. |
17 | அங்கேரி புனித எலிசபெத்து | துறவி | நி. |
18 | திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு | வி.நி. | |
19 | |||
20 | |||
21 | தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் | நி. | |
22 | புனித செசிலியா | கன்னியர், மறைச்சாட்சி | நி. |
23 | புனித முதலாம் கிளமெண்ட்
புனித கொலும்பன் |
திருத்தந்தை, மறைச்சாட்சி
|
வி.நி. |
24 | புனிதர்கள் மறைப்பணியாளர் ஆன்ரு டுங் லாக், தோழர்கள் | மறைச்சாட்சியர் | நி. |
25 | அலெக்சாந்திரியா நகர் புனித கேத்தரின் | கன்னியர், மறைச்சாட்சி | நி. |
26 | |||
27 | |||
28 | |||
29 | |||
30 | புனித அந்திரேயா | திருத்தூதர் | வி. |
திருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறன்று: கிறிஸ்து அரசர் பெருவிழா |
டிசம்பர் மாதம்
[தொகு]நாள் | விழா/புனிதர் பெயர் | விளக்கக் குறிப்பு | கொண்டாட்ட வகை |
---|---|---|---|
1 | |||
2 | |||
3 | புனித பிரான்சிஸ் சவேரியார் | மறைப்பணியாளர் | நி. |
4 | புனித யோவான் தமசேன் | மறைப்பணியாளர், மறைவல்லுநர் | வி.நி. |
5 | |||
6 | புனித நிக்கோலாஸ் | ஆயர் | வி.நி. |
7 | புனித அம்புரோஸ் | ஆயர், மறைவல்லுநர் | நி. |
8 | தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் | பெ. | |
9 | |||
10 | |||
11 | புனித முதலாம் தமசுஸ் | திருத்தந்தை | வி.நி. |
12 | |||
13 | புனித லூசியா | கன்னியர், மறைச்சாட்சி | நி. |
14 | சிலுவையின் புனித யோவான் | நி. | |
15 | |||
16 | |||
17 | |||
18 | |||
19 | |||
20 | |||
21 | புனித பீட்டர் கனீசியு | மறைப்பணியாளர், மறைவல்லுநர் | வி.நி. |
22 | |||
23 | காண்டி நகர் புனித யோவான் | மறைப்பணியாளர் | வி.நி. |
24 | |||
25 | கிறிஸ்து பிறப்பு | பெ. | |
26 | புனித ஸ்தேவான் | முதல் மறைச்சாட்சி | வி. |
27 | புனித யோவான் | திருத்தூதர், நற்செய்தியாளர் | வி. |
28 | மாசில்லாக் குழந்தைகள் | மறைச்சாட்சியர் | வி. |
29 | புனித தாமஸ் பெக்கட் | ஆயர், மறைச்சாட்சி | வி.நி. |
30 | |||
31 | புனித முதலாம் சில்வெஸ்தர் | திருத்தந்தை | வி.நி. |
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது
ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்பப் பெருவிழா. |
மேலும் காண்க
[தொகு]கத்தோலிக்க திருச்சபையின் சிறப்பு நாள்காட்டி (இந்தியா)
ஆதாரங்கள்
[தொகு]- ↑ கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி
- ↑ மறைச்சாட்சியர் நூல்
- ↑ "ஒவ்வொரு நாளுக்கும் புனிதர்". Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2011-04-28.
- ↑ Calendarium Romanum (Libreria Editrice Vaticana 1969), p. 131.