கலா-இ-போஸ்ட்
கலா-இ-போஸ்ட் | |
---|---|
தொல்லியல் தளம் | |
ஆள்கூறுகள்: 31°30′2″N 64°21′24″E / 31.50056°N 64.35667°E | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | கந்தகார் |
கலா-இ-போஸ்ட் (Qala-e-Bost ) என்பது ஆப்கானித்தானின் இலாசுகர் கா என்ற இடத்தில் கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். இது 3000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.[1][2][3] இது 31° 30' 02″ N, 64° 21' 24″ Eஇல் எல்மந்து, அர்கந்தாப் ஆறுகளின் சங்கமத்திற்கு அருகில், இலாசுகர் காவிற்கு தெற்கே அரை மணி நேர பயணத்தில் அமைந்துள்ளது. இது அதன் 11 ஆம் நூற்றாண்டின் அலங்கார வளைவுக்கு பிரபலமானது. இது 100 ஆப்கானி நோட்டில் (ஆப்கானிய நாணயம்) இடம் பெற்றுள்ளது. வளைவு ஒரு பள்ளிவாசலின் எச்சத்தின் ஒரு பகுதியாகும். [4]
வரலாறு
[தொகு]2006 ஆம் ஆண்டில், இலசுகர் காவின் தெற்கிலிருந்து கலா-இ-போஸ்ட் வளைவு வரை செல்லும் ஒரு கற்சாலையின் கட்டுமானம் தொடங்கியது (ஜேம்ஸ் ஏ. மைச்செனர் என்ற அமெரிக்க எழுத்தாளர் தனது கேரவான்ஸ் என்ற நூலில் இதனை காலா பிஸ்ட் என்று எழுதியுள்ளார்.[5] ஏப்ரல் 2008 நிலவரப்படி, 20 அடி குறுக்கே 200 அடி ஆழம் கொண்ட ஒரு பழங்கால குழிக்குள் இறங்குவது சாத்தியமாக இருந்தது. தொடர்ச்சியான இருண்ட பக்க அறைகளும் கீழே செல்லும் ஒரு சுழல் படிக்கட்டும் காணப்பட்டன. 2020 இல், கோட்டையின் மறுசீரமைப்பு வேலை தொடங்கியது. [6] [7]
2021 இல், இது தலிபான் மோதல்களில் இருந்து தப்பி ஓடிய நூற்றுக்கணக்கான மக்களின் தாயகமாக மாறியது. [8]
சான்றுகள்
[தொகு]- ↑ "Helmand's Historic Bost Fort Left to Deteriorate". TOLOnews (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
- ↑ Picture of Qala-e-Bost Castle http://maiaibing.smugmug.com/Afghanistan/Helmand-Landscape-Pictures/i-vP7ch3k
- ↑ "Helmand's Archeological Glories Vanishing". RFE/RL (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
- ↑ "BOST – Encyclopaedia Iranica". iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
- ↑ National Geographic – Qala-E-Bost Arch, Afghanistan, 1968 பரணிடப்பட்டது 22 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Work Begins in Helmand's Historical Sites". TOLOnews (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
- ↑ "Helmand's Bost Castle to be Restored: Officials". TOLOnews (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
- ↑ "Afghan war refugees settle in the ruins of an ancient royal city". South China Morning Post. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
வெளி இணைப்புகள்
[தொகு]- Qala-e-Bost images பரணிடப்பட்டது 2022-02-07 at the வந்தவழி இயந்திரம்