காலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள்
காலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள் (List of colonial Governors and Presidents of Madras), காலனித்துவ காலத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சென்னை மாகாணத்தின் முகவர்கள், ஆளுநர்கள், மற்றும் தலைவர்களின் பட்டியல்:
பிரித்தானிய முகவர்கள்
[தொகு]பிரித்தானியப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிர்வாகி பிரான்சிஸ் டே என்பவர், 1639ல் சந்திரகிரி மன்னரின் அனுமதியுடன் சென்னையின் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளில் வணிகம் மேற்கொள்ள கட்டுமானங்களை துவக்கினார். முன்னர் மசூலிப்பட்டினத்தில் கம்பெனியினர் நிறுவியியிருந்த தொழிற்சாலைகளை, 1640ல் ஆண்ட்ரூ கோகன் என்பவர் சென்னைக்கு மாற்றினர். புனித ஜார்ஜ் கோட்டை கட்டி, அதில் கம்பெனியின் தலைமை அலுவலகத்தை நிறுவினர்.
இவ்வாறக முதன்முதலில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை முகமை 1 மார்ச் 1640ல் நிறுவப்பட்டது. சென்னை முகமையின் முதல் முகவராக ஆண்ட்ரூ கோகன் நியமிக்கப்பட்டார்.
சென்னை முகவரி அலுவல் பெயர் புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் ஆகும். இருப்பினும் ஆளுநரை முகவர் என்றே அழைக்கப்பட்டார்.
ஆண்ட்ரூ கோனின் மூன்றாண்டு பணிக்குப் பின்னர் பிரான்சிஸ் டே சென்னை முகவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் பதவியேற்ற நான்கு முகவர்களுக்குப் பின் வந்த ஆரோன் பேக்கர் முகவராக இருந்த காலத்தில், சென்னை முகமை, 1684ல் சென்னை மாகாணமாக தரம் உயர்த்தப்பட்டது.
பெயர் | பதவியேற்ற நாள் | பதவி முடிந்த நால் |
---|---|---|
ஆண்ட்ரூ கோகன் | 1மார்ச் 1640 | 1643 |
பிரான்சிசு டே (1605–1673) | 1643 | 1644 |
தாமசு வி (1605–1673) | 1644 | 1648 |
தாமஸ் கிரீன்ஹில் (1611–1658) | 1648 | 1652 |
ஆரோன் பேக்கர் (தலைவர்) (1610–1683) | 1652 | 1655 |
தாமஸ் கிரீன்ஹில் (1611–1658) | 1655 | 1658 |
சர் தாமஸ் சேம்பர்ஸ் | 1658 | 1661 |
சர் எட்வர்டு விண்டர் (1622–1686) | 1661 | ஆகஸ்டு 1665 |
ஜார்ஜ் பாக்ஸ்குரோப்ட் (1634–1715) | ஆகஸ்டு 1665 | 16 செப்டம்பர் 1665 |
சர் எட்வர்டு விண்டன் (இரண்டாம் முறை) (1631–1715) | 16 செப்டம்பர் 1665 | 22 ஆகஸ்டு 1668 |
ஜார்ஜ் பாக்ஸ்குரோப்ட் (இரண்டாம் முறை) (1634–1715) | 22 ஆகஸ்டு 1668 | சனவரி 1670 |
சர் வில்லியம் லாங்கோர்ன் | சனவரி 1670 | 27 சனவரி 1678 |
ஸ்டேரேன்சாம் மாஸ்டர் | 27 சனவரி 1678 | 3 சூலை 1681 |
வில்லியம் கிப்போர்டு | 3 சூலை 1681 | 8 ஆகஸ்டு1684 |
கம்பெனி தலைவர்கள்
[தொகு]சென்னை, 1684 முதல் 12 பிப்ரவரி 1785 முடிய மாகாணமாக விளங்கியது. 1784ல் இயற்றப்பட்ட பிட்டின் இந்தியச் சட்டத்தின் படி, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை கம்பெனியும், பிரித்தானியப் பேரரசும் கூட்டாக நிர்வாகம் செய்ய ஒரு தலைவரின் கீழ் கட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது.
சென்னை மற்றும் மும்பை மாகாணங்களில் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்து, கொல்கத்தா மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கினர். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் தலைநகராக கல்கத்தா விளங்கியது.
இலிகு யேல் 8 ஆகஸ்டு 1684 அன்று சென்னை மாகாணத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார்.
இலிகு யேல், தாமஸ் பிட், மற்றும் ஜார்ஜ் மெகர்டினி ஆகியோர் சென்னை மாகாணத்தின் புகழ் பெற்ற தலைவர்கள் ஆவார்.
பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுநர்கள்
[தொகு]1746ல், தூப்ளேயின் படைகள் சென்னை நகரத்தை முற்றுகையிட்டு, கைப்பற்றியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னைப் பகுதிகள், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் கட்டுப்பாட்டில் இருந்தது. 1749ல் இருதரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சென்னை மீண்டும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒப்படைக்கப்பட்டது.
1749ல் சென்னையை மீண்டும் பிரித்தானியர்களிடம் வழங்கும் வரை சென்னை ஆளுநராக ஜீன்-ஜாக்ஸ் டுவால் டிபிரெம்மேன் ஆட்சி செய்தார்.
பெயர் | படம் | பதவியேற்ற நாள் | பதவி விலகிய நாள் |
---|---|---|---|
மஹே டி லா பர்ட்டோனாய்ஸ் (தற்காலிகம்) | 10 செப்டம்பர் 1746 | 2 அக்டோபர் 1746 | |
ஜீன்-ஜாக்ஸ் டுவால் டிபிரெம்மேன் | 2 அக்டோபர் 1746 | ஆகஸ்டு 1749 |
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்கள்
[தொகு]1746 முதல் 1749 முடிய சென்னை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்த போது, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடம் தற்காலிகமாக, சென்னையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திரா கடற்கரையில் உள்ள புனித டேவிட் கோட்டையில் இயங்கியது.
1752ல் சென்னையின் தலைவர் ஜான் சாண்டர்ஸ், கம்பெனியின் தலைமையிடத்தை மீண்டும் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார்.
1760ல் வந்தவாசிப் போரில், பிரஞ்ச் கம்பெனிப் படைகளை வென்றதன், மூலம், சென்னை மாகாணத்தில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி பன்மஅடங்கு விரிவடைந்தது.
1785ல் சென்னை மாகாணம் நிறுவப்பட்டு, அதன் தலைவரே, மாகாண ஆளுநராக பதவியேற்றார்.
பெயர் | பதவியேற்ற நாள் | பதவி விலகிய நாள் |
---|---|---|
ஜான் ஹிண்டே (புனித டேவிட் கோட்டையில் ) | 10 செப்டம்பர் 1746 | 14 ஏப்ரல் 1747 |
சார்லஸ் பிளேயர் (புனித டேவிட் கோட்டையில்) | 14 ஏப்ரல் 1747 | 19 செப்டம்பர் 1750 |
தாமஸ் சாண்டர்ஸ் (புனித டேவிட் கோட்டையில்) - 5 ஏப்ரல் 1752 முடிய) | 19 செப்டம்பர் 1750 | 14 சனவரி 1755 |
ஜார்ஜ் பிக்கோட் (முதன்முறை) | 14 சனவரி 1755 | 14 நவம்பர் 1763 |
இராபர்ட் பால்க் | 14 நவம்பர் 1763 | 25 சனவரி 1767 |
சார்லஸ் போர்ச்சியர் | 25 சனவரி 1767 | 31 சனவரி 770 |
ஜோசியா டு பிரே | 31 சனவரி 1770 | 2 பிப்ரவரி 1773 |
அலெக்சாண்டர் விஞ்ச் | 2 பிப்ரவரி 1773 | 11 டிசம்பர் 1775 |
ஜார்ஜ் பிக்கோட் (இரண்டாம் முறை) | 11 டிசம்பர் 1775 | 23 ஆகஸ்டு 1776 |
ஜார்ஜ் ஸ்டிராட்டன் | 23 ஆகஸ்டு 1776 | 31 ஆகஸ்டு 1777 |
ஜான் ஒயிட் ஹில் (முதன் முறை - தற்காலிகம்) | 31 ஆகஸ்டு 1777 | 8 பிப்ரவரி 1778 |
சர் தாமஸ் ரம்போல்டு | 8 பிப்ரவரி 1778 | 6 ஏப்ரல் 1780 |
ஜான் ஒயிட் ஹில் (இரண்டாம் முறை - தற்காலிகம்) | 6 ஏப்ரல் 1780 | 8 நவம்பர் 1780 |
சார்லஸ் ஸ்மித் (தற்காலிகம்) | 8 நவம்பர் 1780 | 22 சூன் 1781 |
ஜார்ஜ் மார்ட்னி | 22 சூன் 1781 | 12 பிப்ரவரி 1785 |
ஆளுநர்கள் (பிரித்தானிய இந்தியா)
[தொகு]பிரித்தானியப் பேரரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்
பெயர் | படம் | பதவியேற்ற நாள் | பதவி விலகிய நாள் |
---|---|---|---|
ஜார்ஜ் மார்ட்னி | 12 பிப்ரவரி 1785 | 14 சூன் 1785 | |
அலெக்சாண்டர் டேவிட்சன் (தற்காலிகம்) | 14 சூன் 1785 | 6 ஏப்ரல் 1786 | |
ஆர்ச்பால்ட் காம்பெல் | 6 ஏப்ரல் 1786 | 7 பிப்ரவரி 1789 | |
ஜான் ஹாலந்து (தற்காலிகம்) | 7 பிப்ரவரி 1789 | 13 பிப்ரவரி 1790 | |
எட்வர்டு ஜெ. ஹாலந்து (தற்காலிகம்) | 13 பிப்ரவரி 1790 | 20 பிப்ரவரி 1790 | |
வில்லியம் மெடோஸ் | 20 பிப்ரவரி 1790 | 1 ஆகஸ்டு 1792 | |
சர் சார்லஸ் ஒக்கேலே | 1 ஆகஸ்டு 1792 | 7 செப்டம்பர் 1794 | |
இராபர்ட் ஹோபர்ட் | 7 செப்டம்பர் 1794 | 21 பிப்ரவரி 1798 | |
ஜார்ஜ் ஹாரிஸ் (தற்காலிகம்) | 21 பிப்ரவரி 1798 | 21 ஆகஸ்டு 1798 | |
எட்வர்டு கிளைவ் | 21 ஆகஸ்டு 1798 | 30 ஆகஸ்டு 1803 | |
வில்லியம் பென்டிங்கு பிரபு | 30 ஆகஸ்டு 1803 | 11 செப்டம்பர் 1807 | |
வில்லியம் பெட்ரி (தற்காலிகம்) | 11 செப்டம்பர் 1807 | 24 பிப்ரவரி 1808 | |
சர் ஜார்ஜ் பார்லோ | 24 பிப்ரவரி 1808 | 21 மே 1813 | |
ஜான் ஆபேர்கிராம்பி (தற்காலிகம்) | 21 மே 1813 | 16 செப்டம்பர் 1814 | |
ஹக் எலியட் | 16 செப்டம்பர் 1814 | 1820 | |
தோமஸ் முன்ரோ | 1820 | 10 சூலை 1827 | |
ஹென்றி சல்லிவன் கிரேம் (தற்காலிகம்) | 10 சூலை 1827 | 18 அக்டோபர் 1827 | |
ஸ்டீபன் ரம்போல்டு லஸ்சிங்டன் | 18 அக்டோபர் 1827 | 25 அக்டோபர் 1832 | |
பிரடெரிக் ஆடம் | 25 அக்டோபர் 1832 | 4 மார்ச் 1837 | |
ஜார்ஜ் எட்வர்டு ரஸ்ஸல் (தற்காலிகம்) | 4 மார்ச் 1837 | 6 மார்ச் 1837 | |
ஜான் எல்பின்ஸ்டோன் | 6 மார்ச் 1837 | 24 செப்டம்பர் 1842 | |
ஜார்ஜ் ஹே | 24 செப்டம்பர் 1842 | 23 பிப்ரவரி 1848 | |
ஹென்றி டிக்கின்சன் (தற்காலிகம்) | 23 பிப்ரவரி 1848 | 7 ஏப்ரல்1848 | |
ஹென்றி பாட்டிங்கர் | 7 ஏப்ரல் 1848 | 24 ஏப்ரல் 1854 | |
டேனியல் எலியட் (தற்காலிகம்) | 24 ஏப்ரல் 1854 | 28 ஏப்ரல்1854 | |
ஜார்ஜ் ஹாரிஸ் | 28 ஏப்ரல் 1854 | 28 மார்ச்1859 | |
சர் சார்லஸ் திரவேல்யன் | 28 மார்ச் 1859 | 8 சூன் 1860 | |
வில்லியம் அம்புரோஸ் மோர்ஹெட் (முதல்முறை) (தற்காலிகம்) | 8 சூன் 1860 | 5 சூலை 1860 | |
ஹென்றி ஜார்ஜ் வார்டு | 5 சூலை 1860 | 2 ஆகஸ்டு 1860 | |
வில்லிய அம்புரோஸ் மோர்ஹெட் (இரண்டாம் முறை) (தற்காலிகம்) | 4 ஆகஸ்டு 1860 | 18 பிப்ரவரி 1861 | |
சர் வில்லியம் டெனிசன் (முதன்முறை) | 18 பிப்ரவரி 1861 | 26 நவம்பர் 1863 | |
எட்வர்டு மால்ட்பி (தற்காலிகம்) | 26 நவம்பர் 1863 | 18 சனவரி 1864 | |
சர் வில்லியம் டெனிசன் (இரண்டாம் முறை) | 18 January 1864 | 27 March 1866 | |
பிரான்சிஸ் நேப்பியர் | 27 மார்ச் 1866 | 19 பிப்ரவரி 1872 | |
அலெக்சாண்டர் ஜான் அர்புத்னாட் (தற்காலிகம்) | 19 பிப்ரவரி 1872 | 15 மே 1872 | |
வேரி ஹென்றி ஹோபர்ட் | 15 மே 1872 | 29 ஏப்ரல் 1875 | |
வில்லியம் ரோஸ் ராபின்சன் (தற்காலிகம்) | 29 ஏப்ரல் 1875 | 23 நவம்பர் 1875 | |
ரிச்சர்டு டெம்பிள் | 23 நவம்பர் 1875 | 20 டிசம்பர் 1880 | |
வில்லியம் பாட்ரிக் ஆடம் | 20 டிசம்பர் 1880 | 24 மே 1881 | |
வில்லியம் ஹட்டில்ஸ்டோன் (தற்காலிகம்) | 24 மே 1881 | 5 நவம்பர் 1881 | |
மவுண்ட்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் | 5 நவம்பர் 1881 | 8 டிசம்பர் 1886 | |
ராபர்ட் பௌர்க் | 8 டிசம்பர் 1886 | 1 டிசம்பர் 1890 | |
ஜான் ஹென்றி கர்ட்ஸ்டின் | 1 டிசம்பர் 1890 | 23 சனவரி 1891 | |
பெயில்பி லாலே | 23 சனவரி 1891 | 18 மார்ச் 1896 | |
ஆர்தர் எலிபாங்க் ஹாவ்லாக் | 18 மார்ச் 1896 | 28 டிசம்பர் 1900 | |
ஆர்தர் ரஸ்சல் (முதன்முறை) | 28 டிசம்பர் 1900 | 30 ஏப்ரல் 1904 | |
ஜேம்ஸ் தாம்சன் (தற்காலிகம்) | 30 ஏப்ரல் 1904 | 13 டிசம்பர் 1904 | |
ஆர்தர் ரஸ்சல் (இரண்டாம் முறை) | 13 டிசம்பர் 1904 | 15 பிப்ரவரி 1906 | |
சர் காப்பிரியல் ஸ்டோக்ஸ் (தற்காலிகம்) | 15 பிப்ரவரி 1906 | 28 மார்ச் 1906 | |
சர் ஆர்தர் லாலே | 28 மார்ச் 1906 | 3 நவம்பர் 1911 | |
தாமஸ் கிப்சன் கார்மைக்கேல் | 3 நவம்பர் 1911 | 30 மார்ச் 1912 | |
சர் முர்ரே ஹம்மிக் (தற்காலிகம்) | 30 மார்ச் 1912 | 30 அக்டோபர் 1912 | |
ஜான் சிங்கிலயர் | 30 அக்டோபர் 1912 | 29 மார்ச் 1919 | |
அலெக்சாண்டர் கார்டுவ் | 29 மார்ச் 1919 | 10 ஏப்ரல் 1919 | |
பிரிமேன் - தாமஸ் | 10 ஏப்ரல் 1919 | 12 ஏப்ரல் 1924 | |
சார்லஸ் டோட்ஹண்டர் (தற்காலிகம்) | 12 ஏப்ரல் 1924 | 14 ஏப்ரல் 1924 | |
ஜார்ஜ் கோசென் | 14 ஏப்ரல் 1924 | 29 சூன் 1929 | |
நார்மன் மார்ஜோரிபாங்க்ஸ் (தற்காலிகம்) | 29 சூன் 1929 | 11 நவம்பர் 1929 | |
ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி (முதன்முறை) | 11 நவம்பர் 1929 | 16 மே 1934 | |
முகமத் உஸ்மான், சென்னை (தற்காலிகம்) | 16 மே 1934 | 16 ஆகஸ்டு 1934 | |
ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி (இரண்டாம் முறை) | 16 ஆகஸ்டு 1934 | 15 நவம்பர் 1934 | |
ஜான் எர்ஸ்கின் (முதன்முறை) | 15 நவம்பர் 1934 | 18 சூன் 1936 | |
கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (தற்காலிகம்) | 18 June 1936 | 1 October 1936 | |
ஜான் எர்ஸ்கின் பிரபு (இரண்டாம் முறை) | 1 அக்டோபர் 1936 | 12 மார்ச் 1940 | |
ஆர்தர் ஓஸ்வால்டு ஜேம்ஸ் ஹோப் | 12 மார்ச் 1940 | 26 பிப்ரவரி 1946 | |
சர் ஹென்றி நைட் (தற்காலிகம்) | 26 பிப்ரவரி 1946 | 5 மே 1946 | |
சர் ஆர்ச்சிபோல்டு எட்வர்டு நய் | 5 மே 1946 | 15 ஆகஸ்டு 1947 |
இதனையும் காண்க
[தொகு]- சென்னை மாகாணம்
- சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள்
- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
- இந்தியாவில் கம்பெனி ஆட்சி
- பிரித்தானிய இந்தியா
- பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
- இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு
மேற்கோள்கள்
[தொகு]- List of Governors of Madras, Worldstatesmen.org