கிரேஸ் கெல்லி
கிரேஸ் கெல்லி | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1953 இல் கெல்லி | ||||||||||
மொனாக்கோ இளவரசி, துணைவி | ||||||||||
Tenure | 18 ஏப்ரல் 1956 - 14 செப்டெம்பர் 1982 | |||||||||
பிறப்பு | கிரேசு பத்திரீசியா கெல்லி நவம்பர் 12, 1929 பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா | |||||||||
இறப்பு | செப்டம்பர் 14, 1982 லா கோல், மொனாக்கோ | (அகவை 52)|||||||||
புதைத்த இடம் | செப்டெம்பர் 18, 1982 மொனாக்கோ | |||||||||
துணைவர் | மூன்றாம் இரைனியர், மொனாக்கோ இளவரசர் (தி. 1956) | |||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| |||||||||
மரபு | கிரிமால்டி (திருமணத்தின் மூலம்) | |||||||||
தந்தை | சாக் கெல்லி | |||||||||
தாய் | மார்கரெட் மேஜர் | |||||||||
கையொப்பம் | ||||||||||
|
கிரேஸ் பாட்ரிசியா கெல்லி (Grace Patricia Kelly, 12 நவம்பர் 1929 – 14 செப்டம்பர் 1982) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1950 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி முதல் பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். பின்னர், ஏப்ரல் 1956 இல் இளவரசர் ரெய்னர் III என்பவரைத் திருமணம் செய்து மொனாக்கோ இளவரசி ஆனார்.
1950 ஆம் ஆண்டில் தனது 20 ஆம் வயதில் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். கெல்லி நியூயார்க் நகர நாடகத் திரையரங்குகளில் 1950 களின் முற்பகுதியில் தொலைக்காட்சியின் பொற்காலத்தில் ஒளிபரப்பப்பட்ட நேரடி நாடக தயாரிப்புகளின் 40 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களிலும் தோன்றியுள்ளார். 1952 ஆம் ஆண்டு முதல் 1956 வரை அவர் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.சக ஆண் நடிகர்கள் இவரை வரை விட 25 முதல் 30 வயது அதிகாமான நடிகர்களுடன் நடித்தார். அக்டோபர் 1953 இல், இயக்குனர் ஜான் ஃபோர்டின் சாகச-காதல் திரைப்படமான மொகாம்போவில் கிளார்க் கேபிள் மற்றும் அவா கார்ட்னர் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அந்தத் திரப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். இந்டஹ்த் திரைப்படத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருதினை வென்றார். மேலும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். 1954 ஆம் ஆண்டில் தி கன்ட்ரி கேர்ள் (1954 ) என்ற நாடகத்தில்பிங்கு கிராசுபியுடன் இணைந்து நடித்தார். தனது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான அகாதமி விருதை வென்றார். [1] கேரி கூப்பருடன் வெஸ்டர்ன் ஹை நூன் (1952); காதல்-நகைச்சுவைத் திரைப்படமான பிங் கிராஸ்பி மற்றும் ஃபிராங்க் சினாட்ராவுடன் இனைந்து ஹை சொசைட்டி (1956) டயல் எம் ஃபார் மர்டர் (1954), ரியர் விண்டோ (1954), ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டுடன், கேரி கிராண்ட்டுடன் டூ கேட்ச் எ தீஃப் (1955) ஆகியன, அவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தன ஆகும்.
பின்னணி மற்றும் ஆரம்ப வாழ்க்கை
[தொகு]கிரேஸ் பாட்ரிசியா கெல்லி 1929 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி பென்சில்வேனியா, பிலடெல்பியாவில் உள்ள ஹேன்மேன் பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்தார். இவர் ஒரு வசதியான மற்றும் செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்தார். [2] இவரது தந்தை ஐரிஷ்-அமெரிக்க வம்சா வழியான ஜான் பி கெல்லி சீனியர் ஆவார். [3] இவர் ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார் .1935 ஆம் ஆண்டு பிலடெல்பியா மேயருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். பிற்காலத்தில், அவர் ஃபேர்மவுண்ட் பார்க் கில் பணியாற்றினார், இரண்டாம் உலகப் போரின்போது, சனாதிபதி ரூசவெல்ட் அவர்களால் தேசிய உடற்தகுதி இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரது சகோதரர் வால்டர் சி. கெல்லி ஒரு நடிகர் ஆவார். மேலும் இவர் பாரமவுண்ட் பிக்சர்ஸ் திரைப்படங்களை தயாரித்தார். மற்றொருவர் புலிட்சர் பரிசு-வென்ற நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநரான ஜார்ஜ் ஆவார். [4]
திரைப்படங்கள்
[தொகு]காதல்-நகைச்சுவைத் திரைப்படமான பிங் கிராஸ்பி மற்றும் ஃபிராங்க் சினாட்ராவுடன் இனைந்து ஹை சொசைட்டி (1956) டயல் எம் ஃபார் மர்டர் (1954); ரியர் விண்டோ (1954), ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டுடன் ; மற்றும், கேரி கிராண்ட்டுடன் டூ கேட்ச் எ தீஃப் (1955) ஆகிய அவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தன ஆகும்.
குடும்பம்
[தொகு]ஏப்ரல் 1956 இல் இளவரசர் ரெய்னர் III என்பவரைத் திருமணம் செய்து மொனாக்கோ இளவரசி ஆனார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "1954 Academy Awards: Winners and History". AMC Filmsite.
- ↑ "High Society (washingtonpost.com)". www.washingtonpost.com. பார்க்கப்பட்ட நாள் June 2, 2016.
- ↑ Jacobs, Laura. "Grace Kelly's Forever Look".
- ↑ Leigh 2007