கிழங்கான்
Appearance
கிழங்கான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சில்லாஜினிடே
|
பேரினம்: | சில்லாகோ
|
இனம்: | சி. சிகாமா
|
இருசொற் பெயரீடு | |
சில்லாகோ கிகாமா (பார்சாகல், 1775) | |
கிழங்கான் மீன்களின் பரம்பல் |
கிழங்கான் (northern whiting, silver whiting அல்லது sand smelt; உயிரியல் பெயர்: Sillago sihama)[1] என்பது ஒரு கடல்வாழ் மீன் வகையாகும். இவை மேற்கில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கிழக்கில் ஜப்பான் மற்றும் இந்தோனேசியா வரை உள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படுகின்றன. மேலும் சுயஸ் கால்வாய் வழியாக நடுநிலக்கடல் பகுதியில் ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளன. ஊணுண்ணியான இவை, பலவகையான கடற்புழுக்களையும் ஓட்டுக் கணுக்காலிகளையும் உட்கொள்கின்றன. இந்தோ-பசிபிக் முழுவதும் கிழங்கான் மீன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது பெரும்பாலும் சீன் வலைகள் மற்றும் வார்ப்பு வலைகளால் எடுக்கப்பட்டு புதியதாக சந்தைப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Common Names List - Sillago sihama". www.fishbase.se. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.