சங்கீதா ராஜீவ்
சங்கீதா ராஜீவ் | |
---|---|
ஒரு புகைப்பட நிகழ்ச்சியில் சங்கீதா ராஜீவ் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 23 அக்டோபர் பெங்களூர், கருநாடகம், இந்தியா |
பிறப்பிடம் | இந்தியா |
இசை வடிவங்கள் | பாப், பாலிவுட், மின்னணு நடன இசை இந்திய நாட்டுப்புற இசை |
தொழில்(கள்) | பாடகர், இசையமைப்பாளர், நடிகர் |
இசைத்துறையில் | 2010 – தற்போது வரை |
ச. ரா என்றும் அழைக்கப்படும் சங்கீதா ராஜீவ் (Sangeetha Rajeev) ஓர் இந்தியப் பாடகியும், மேடைக் கலைஞரும்,இசையமைப்பாளரும் ஆவார். மலேசியாவில் நடந்த விமா இசை விருதுகள் 2019 நிகழ்ச்சியில் அந்த ஆண்டின் சிறந்த சர்வதேச பரப்பிசைப் பாடகி விருதினை வென்றார். [1] சோனு நிகமுடன் நடிகை ஷைன் ஷெட்டி நடித்த "நீனே நீனே" என்ற கன்னடப் ப படத்திற்காக இவர் பாடியிருந்தார். [2] இது இந்தியில் "துஹி துஹி" என்றும் வெளியிடப்பட்டது. "நீ ஹிங்க நோட பேடா" என்ற கன்னடப் பாடலுக்கும் இசையமைத்து, பாடியுள்ளார். [3]
தொழில்
[தொகு]கன்னடத் திரைப்படங்களிலிருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இசையமைப்பாளர் தர்மா விஷ் என்பவரால் இந்தத் தொழிலுக்கு அறிமுகமானார். இவர் "ஆனே படாக்கி" என்ற படத்தில் ஒரு பாடலைப் பாடினார். அப்பாடலுக்காக அதே ஆண்டில் சிறந்த பின்னணி பாடகர் விருதையும் வென்றார்.
பின்னர் இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் "க்ஷனம்" என்ற படத்தின் இசை அமைப்பாளர் ஸ்ரீசரன் பக்காலா மற்றும் இயக்குனர் ஸ்ரீரஞ்சனி ஆகியோரால் நடிகர் / தயாரிப்பாளர் அக்கினேனி நாகார்ஜூனாவின் தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்
இவர் தனது தெலுங்கு திரைப்பட வாழ்க்கையை "ரங்குலா ராட்டினம்" படத்துடன் தொடங்கினார். அதில் இவர் ஒரு பிறந்த நாள் பாடலைப் பாடி, நடிகை சித்தாராவுக்கு பின்னணி குரலையும் கொடுத்தார். சிம்ப்ளி ஏக் லவ் ஸ்டோரி என்ற பாலிவுட் படத்திலும் இவர் பாடியுள்ளார்.
"நீ ஹிங்கா நோட பேடா" உட்பட பலபாடல்களை கன்னடத்திலும், இந்தி மொழிகளிலும் பல தனிப்பாடல்களையும் இவர் பாடியுள்ளார். [4] இவரது "நீனே நீனே" என்ற சமீபத்திய பாடல் சோனு நிகாம் மற்றும் நடிகர் ஷைன் ஷெட்டி ஆகியோருடன் இருந்தது. [5]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சங்கீதா பெங்களூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை எஸ். ராஜீவ் ஒரு வங்கி மேலாளராக இருக்கிறார். இவர் தனது பணி காரணமாக இவரது ஆறு வயதில் மும்பைக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்கு இவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியைக் கழித்தார். அங்கு பரதநாட்டியம், கருநாடக இசை, இந்துஸ்தானி இசை போன்றவற்றில் பயிற்சி பெற்றார்.
கல்வி
[தொகு]சங்கீதா தனது பள்ளிப்படிப்பை மும்பையில் முடித்தார். பின்னர், தகவல் அறிவியல் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் இவர் இசையைத் தொடர இங்கிலாந்து சென்றார். [6]
தாக்கங்கள்
[தொகு]இவரது தாயார் எம்.கே.சாரதாம்பாள் ஒரு கருநாடக இசைக் கலைஞராக இருக்கிறார். [7] சங்கீதா மேற்கத்திய இசையால் மிகவும் ஈர்க்கப்பட்டார். மேலும் மரியா கேரி, மறைந்த பெரிய மைக்கல் ஜாக்சன் ஆகியோரை தனது மேற்கத்திய தாக்கங்களாக கருதுகிறார். [8] இவர் தன்னை சுனிதி சௌகானின் மிகப்பெரிய அபிமானிகளில் ஒருவராக கருதுகிறார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ [1]
- ↑ [newindianexpress.com/cities/bengaluru/2020/oct/05/beats-from-the-heart-2205774.html]
- ↑ [2]
- ↑ [3]
- ↑ [4]
- ↑ Talking about music and passion: Sangeetha Rajeev
- ↑ Indian Express talking to Sangeetha about her influences
- ↑ Newsminute interview with Sangeetha Rajeev