உள்ளடக்கத்துக்குச் செல்

சட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல நிற முழுக்கைச் சட்டை

சட்டை (shirt) என்பது மனிதர்கள் உடுத்தும் ஒரு ஆடை ஆகும். இதனை நீண்ட ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே அணிந்து வந்தனர். ஆனால் தற்போது பெண்களும் சட்டையை அணிந்து கொள்கின்றனர்.

பெண்கள் அணியும் சட்டைக்கும், ஆண்கள் அணியும் சட்டைக்கும் தையல் முறை வேறுபடுகின்றன. இரண்டு வகைகளில் சட்டை தயாரிப்பு செய்யப்படுகிறது. ஒன்று, நல்ல நீள அகலமுள்ள துணியாக நூலினை நெய்து விற்கப்படுவதை வாடிக்கையாளர்கள் காசு கொடுத்து வாங்கி, பின் அவர்களின் உடல் அளவுகள் கொண்டு தையல் காரர்களிடம் கொடுத்து தைத்து தர வேண்டுவர். மற்றொன்று, ஒரு சில குறிப்பிட்ட அளவுகளில் துணி தயாரிக்கும் நிறுவனமே துணியினை சட்டையாக தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பர். முதலில் கூறியது துணி எடுத்து தைக்கும் முறை. இரண்டாவது, தயார்நிலை சட்டை ஆகும்.[1][2][3]

பொதுவாக சட்டை, குறிப்பாக தயார்நிலை சட்டை, அலுவல் சட்டை மற்றும் புறப்பயன் சட்டை என இரண்டு வகையாக பிரிப்பர். இப்பிரிவு அதன் ஒயில் மிக்க தையல் முறையினால் வேறுபடுகிறது. அலுவல் ஒயில் மிக்க சட்டையை அலுவலகங்களில் பயன்படுத்தப்படும். புறப்பயன் ஒயில் மிக்க சட்டையை அலுவலகம் அல்லாத பிறப்பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். ஆனால் நடைமுறையில் மனிதர்கள் இந்த முறையில் இருந்து வேறுபட்டும் பயன்படுத்துவர்.

இதேப் போன்று சட்டையில் உள்ள கை அளவுகளும் மாறுபடும். முழுக்கைச் சட்டையில் கைமுழுதும் மூடியவாறு இருக்கும். அரைக்கைச் சட்டை பாதி கை அளவிற்கு மூடியவாறு இருக்கும். சட்டையின் அணியும் பொழுது நெஞ்சுப்பகுதியில் எவ்விடம் இருக்கிறதோ அங்கு பை ஒன்றும் தைக்கப்பட்டிருக்கும். இரண்டு நெஞ்சின் பகுதியில் சில சட்டையில் வைத்திருப்பர். இருபுறமும் பை இல்லாமலும் இருக்கும்.

சட்டையின் பின்புறம் தளர்ந்த அகலம் வைத்தும் தைத்திருப்பர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Barber, Elizabeth Wayland (1994). Women's Work. The first 20,000 Years, p.135. Norton & Company, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-31348-4
  2. William L. Brown III, "Some Thoughts on Men's Shirts in America, 1750-1900", Thomas Publications, Gettysburg, PA 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57747-048-6, p. 7
  3. Dorothy K. Burnham, "Cut My Cote", Royal Ontario Museum, Toronto, Ontario 1973. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88854-046-9, p. 14
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டை&oldid=3893781" இலிருந்து மீள்விக்கப்பட்டது