உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரமுகி பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரமுகி பாசு
Chandramukhi Basu
பிறப்பு1860
தேராதுன், பிரித்தானிய இந்தியா
இறப்பு1944
தேராதுன், பிரித்தானிய இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்டப் கல்லூரி
கல்கத்தா பல்கலைக்கழகம்]]
பணிகல்வியாளர்
வாழ்க்கைத்
துணை
பண்டித் கேசவரானந்த் மாம்காயன்

சந்திரமுகி பாசு (Chandramukhi Basu) (1860–1944), ஒரு வங்காளக் கிறித்தவர் ஆவார். இவ்ர் ஒன்றிய ஆக்ரா, அவுத் மாகாணத்திலிருந்த தேரதுன்னில் பிறந்தவர். இவர் பிரித்தானிய இந்தியவில் முதல் இரு பெண் பட்ட்தாரிகளில் ஒருவராவார். இவரும் கடம்பினி கங்கூலியும் 1882 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்ட்த்தைப் பெற்றனர். இவர்களுக்குப் பட்டமளிப்பு விழா 1883 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில்நடந்தது.

வாழ்க்கை

[தொகு]

சந்திரமுகி பாசுவின் தந்தை பூபன் மோகன் போஸ். இவர் 1880ல் டேராடூன் நேட்டிவ் கிறிஸ்டியன் ஸ்கூலில் எஃப் ஏ (FA ) தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.[1] அச்சமயம் இந்துக்கள் அல்லாத பெண்களுக்கு கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிய பெத்தூன் கல்லூரியில் இடமளிக்கப்படவில்லை. பின்னர் அக்கொள்கை தளர்த்தப்பட்டு சந்திரமுகி இளங்கலைப் பட்டபடிப்புக்கு பெத்தூன் கல்லூரியில் சேர்ந்தார். இவரும் கடம்பினி கங்கூலியும் 1883ல் பட்டப்படிப்பை முடித்து பிரித்தானியாவின் இந்தியாவியே (பிரித்தானியப் பேரரசிலேயே) முதல் இரு பெண் பட்டதாரிகள் ஆனார்கள்.[1] 1884ல் கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் ஃபிரீ சர்ச் இன்ஸ்டிட்யூஷனில் (தற்சமயம் - ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜ்) எம். ஏ பட்டம் பெற்றார்.[2] அப்பல்கலைக்கழகத்தில் எம். ஏ பட்டம் பெற்ற முதல் பெண் இவர்தான்.[1]

சந்திரமுகி பாசு 1886ல் பெத்தூன் கல்லூரியில் விரிவுரையாளராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். அப்போது பெத்தூன் கல்லூரி பெத்தூன் பள்ளியோடு இணைந்திருந்தது. 1888ல் பெத்தூன் கல்லூரி பள்ளியிலிருந்து தனியாகப் பிரிந்து செயற்பட்டபோது இவர் அக்கல்லூரியின் முதல்வராகப் பணியேற்றார்.[1] தெற்கு ஆசியாவிலேயே ஒருஇளங்கலைப் பட்டப்படிப்புக் கல்லூரிக்கு தலைவரான முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் இவர் .

இவர் 1891ல் உடல்நலம் சரியில்லாததால் பணியிலிருந்து ஓய்வு பெற்று தனது மீதிநாட்களை டேராடூனில் கழித்தார்.[1] இவரது சகோதரிகள் பிதுமுகி போஸ் மற்றும் பிந்துபாசினி போஸ் இருவருமே கல்கத்தா மருத்துவக் கல்லூரியில மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் (முறையே 1890 மற்றும் 1891 வருடங்களில்).[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (வங்காள மொழியில்), p152, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185626650
  2. "History of Scottish Church College" (PDF). www.scottishchurch.ac.in. Archived from the original (PDF) on 2009-12-22. பார்க்கப்பட்ட நாள் 2009-03-10.
  3. Bose, Anjali (editor), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol II, 1996/2004,(வங்காள மொழியில்), p215, 219, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86806-99-7

வெளி இணைப்புகள்

[தொகு]