சுக்லால் சங்க்வி
பண்டிட் சுக்லால் சங்க்வி | |
---|---|
பண்டிட் சுக்லால்ஜி | |
பிறப்பு | லிம்லி, (சௌராட்டிரா), குசராத்து | 8 திசம்பர் 1880
இறப்பு | 2 மார்ச்சு 1978 குசராத்து | (அகவை 97)
பணி | எழுத்தாளர், தத்துவஞானி, ஆசிரியர், மொழியியலாளர் மற்றும் அறிஞர் |
சுக்லால் சங்க்வி (Sukhlal Sanghvi) (1880 திசம்பர் 1880 - 1978 மார்ச் 2) பண்டிட் சுக்லால்ஜி என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் சமண அறிஞரும் மற்றும் தத்துவவாதியுமாவார். இவர் சமண மதத்தின் சுவேதாம்பரர் பிரிவைச் சேர்ந்தவராவார். [1] பெரியம்மை நோயால் தனது பதினாறு வயதில் கண்பார்வை இழந்தாலும், இவர் இந்த ஊனத்தை வென்று சமண தர்க்கத்தில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்று பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உயர்ந்தார். சமசுகிருத மொழியில் மூத்த அறிஞரான பால் தன்டாசு என்பவர் இவரை சமண தத்துவத்தின் நவீன மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராக அழைக்கிறார். [2] பார்வையற்று இருந்தாலும் அறிவார்ந்த உலகமாகத் தோன்றுவதை சங்க்வி பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று தன்டாசு குறிப்பிடுகிறார். [3] பிரபல சமண அறிஞர் பத்மநாப ஜைனிக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். தனது வாழ்நாளில் சாகித்ய அகாடமி விருது மற்றும் பத்ம பூசண் போன்ற விருதுகளை இந்திய அரசிடமிருந்து பெற்றார். சுக்லால்ஜி 'பிரக்னாசட்சு' என்றும் அழைக்கப்பட்டார். ஏனெனில் இவர் பார்வையற்றவராக இருந்தபோதிலும் மிகவும் கற்றிருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]குசராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தின் லிம்லி கிராமத்தில் 1880 டிசம்பர் 8 ஆம் தேதி சுக்லால் பிறந்தார். இவர் குசராத்தைச் சேர்ந்த பணியா சமூகத்தைச் சேர்ந்தவர் (வணிக சமூகம்). தல்சி சங்க்வி மற்றும் மணிபென் இவரது பெற்றோராவார். இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது இவரது தாயார் இறந்து போனார். இவர் லிம்ப்டி என்ற ஊரில் இவரது தொலைதூர உறவினர் முல்ஜிபாய் என்பவரால் வளர்க்கப்பட்டார். இவரது பதினாறாவது வயதில் பெரியம்மை நோயினால் கண்பார்வையை இழந்தார். இது இவரை மேலும் உள்நோக்கத்துடன் உருவாக்கியது. மேலும் இவர் தனது வாழ்க்கையை கற்றலுக்காக அர்ப்பணித்தார்.
கல்வி
[தொகு]இவர் சமண துறவிகளின் சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். மேலும் வாசகரின் உதவியுடன் வேதங்களைப் படித்தார். இவர் பெனாரசில் சிறி யசோவிஜய சமண சமசுகிருத பாடசாலையில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகளுக்குள் இவர் சித்த-ஹேமா-வியாகரணம் முழுவதையும் படிக்க உறுதிபூண்டார். தர்கசம்ரகா, முக்தாவலி, மற்றும் வைபதிச்சக்ரா ஆகியவற்றையும் பயின்றார். ரகு வம்சம், மகாகாவ்யம், நைசதாச்சரிதம் போன்ற காவியங்களுடனும், ஆலம்கராட்டிரம் மற்றும் கோசா ஆகியவைகளை நன்கு கற்றுக்கொண்டார். மேலதிக படிப்புகளுக்காக இவர் 1911 இல் மிதிலைக்கும், பின்னர் வாரணாசிக்கும் சென்றார், அங்கு இவர் தத்துவம் மற்றும் இலக்கிய ஆய்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பின்னர், இவர் ஆக்ராவுக்குச் சென்றார், அங்கு தேவேந்திரசூரியின் முதல் நான்கு கர்ம மானியங்களான பஞ்சப்பிரதிகிரமணன் போன்ற முக்கியமான சமணப் படைப்புகளைத் திருத்தினார். [4] நியாயாச்சார்யா தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் இவர் சமணப் பாடசாலையில் தொடர்ந்து கற்பித்தார். அங்கு இவரது மாணவர்களில் வருங்கால அறிஞர்களும்-துறவிகளுமான முனி ஜின்விஜய், முனி லலித்விஜய் மற்றும் முனி புன்யவிஜய் ஆகியோர் அடங்குவர். [5]
அறிஞராகவும் தத்துவஞானியாகவும்
[தொகு]1922 ஆம் ஆண்டில், குசராத் வித்யாபீடத்தின் புராத்தத்வா மந்திரில்இந்திய தத்துவ பேராசிரியராக சேர்ந்தார். இங்கே இவர் சித்தசேனா திவாகராவின் சனமதிதர்காவை மதிப்புமிக்க குறியீடுகள் மற்றும் பிற்சேர்க்கைகளைக் கொண்ட ஐந்து தொகுதிகளாகத் திருத்தியுள்ளார். இந்த பணியில் இவருக்கு பண்டிட் பெச்சர்தாசு என்பவர் உதவினார். 1933 முதல் 1944 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் சமண தத்துவ பேராசிரியராக இருந்தார். சமசுகிருதம், இந்தி மற்றும் குசராத்தி மொழிகளில் பல மதிப்புமிக்க படைப்புகளை எழுதுவதற்கும் திருத்துவதற்கும் இவர் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். குசராத்தி மொழியில் தத்வார்த்தசூத்ரம் மற்றும் நயாவதாரம் ஆகிய நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை திருத்தியுள்ளார்.
மரபு மற்றும் தாக்கங்கள்
[தொகு]பண்டிட் நாதுராம் பிரேமியின் எழுத்துக்களால் இளம் சுக்லால்ஜி ஈர்க்கப்பட்டார். பின்னர் அவர் இவருகு நெருங்கிய குடும்ப நண்பராக மாறினார். சுக்லால்ஜி தனது அணுகுமுறையில் குறுங்குழுவாதவர் மற்றும் பிரேமிஜி போன்ற பல திகம்பர அறிஞர்களுடன் ஒரு நல்லுறவைப் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர்களின் பரஸ்பர மரியாதையை பேணிகாத்தார். [6]
இந்தியாவின் குடியரசுத் தலைவர், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், ஒரு புகழ்பெற்ற தத்துவஞானியும் அறிஞருமான சுக்லால்ஜியை நினைவு கூர்ந்தார். [7]
குறிப்புகள்
[தொகு]- ↑ Jaini, Padmanabh (2000). Collected Papers on Jaina Studies. Delhi: Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1691-9. Preface p. vi
- ↑ Dundas, Paul (2002). The Jains. London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-26606-8. p. 228
- ↑ Jaini p.vi
- ↑ Mohan Lal (2006). Encyclopaedia of Indian literature, Volume 5. New Delhi: Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1221-8. p. 4215
- ↑ Wiley, Kristi (2006). The A to Z of Jainism. Delhi: Vision Books (originally published by Scarecrow Press). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7094-690-5. p. 190
- ↑ Jain Study Circular (January–April 2006 Issue)
- ↑ Mohan Lal (2006). Encyclopaedia of Indian literature, Volume 5. New Delhi: Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1221-8. p. 4216