செலின் கவுண்டர்
செலின் கவுண்டர் ( பிறப்பு 1977 ) தொற்று நோய் மருத்துவர், பொது மருத்துவர், நோய்பரவல் வல்லுநர், பொது உடல்நலன், திரைப்பட இயக்குநர், மருத்துவ செய்தியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தொற்று நோய் மருத்துவத்திலும், பொது உடல்நலனிலும் சிறப்பு தகுதிகள் பெற்றவர். பிரின்சுடன் பல்கலைத்தில் மூலக்கூறு உயிரியலில் இளங்கலையும், யான் ஆப்கின்சன் பல்கலைக்கழகத்தின் புளூம்பெர்க் பொது உடல்நலன் பள்ளியில் நோய்பரவலும், வாசிங்டன் பல்கலைகழகத்தில் மருத்துவமும் படித்தவர், பொது உடல்நலனுக்கும் மருத்துவத்துக்கும் இவர் ஆற்றிய பணிகளை பாராட்டி 2017ஆம் ஆண்டு ‘உலகை மாற்றும் 25 பெண்கள்’ என்பதில் ஒருவராக பீப்பிள் இதழ் தேர்ந்தெடுத்திருந்த்து. மருத்துவ செய்தியாளர் பணியின் காரணமாக 2018இலிருந்து பகுதி நேரமாக தான் மருத்துவத்தை பார்க்கிறார். 2020 நவம்பர் 9 அன்று கோவிட்-19 தொடர்பாக அறிவுறுத்துவதோடு நடவடிக்கை எடுக்கும் குழுவில் இவரை உறுப்பினராக தேர்வு அமெரிக்க அதிபர் பைடன் தேர்ந்தெடுத்தார்.
சிறுவயது வாழ்க்கையும் படிப்பும்
[தொகு]பிரான்சின் நார்மன்டியில் பிறந்த நிக்கோல் கவுண்டர் என்ற தாய்க்கும் 1960இல் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு சென்ற மொடக்குறிச்சி அருகேயுள்ள பெருமாபாளையத்தில் பிறந்த தமிழரான நடராசு கவுண்டருக்கும் அமெரிக்காவில் பிறந்த மூன்று மகள்களில் இவர் மூத்தவர் [1] வான் வெளி பொறியாளரான இவரது தந்தை அமெரிக்காவின் எர்ரி நகரத்திலுள்ள வணிகக் கழகத்தில் 1973-76 ஆம் ஆண்டுகளில்உறுப்பினராக இருந்தார். அமெரிக்க விண்வெளிக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார்.