உள்ளடக்கத்துக்குச் செல்

சௌவீர நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரத இதிகாச கால நாடுகள்

சௌவீர நாடு (Sauvira kingdom) பரத கண்டத்தின் மேற்கில் தற்கால பாகிஸ்தான் நாட்டின் சிந்து ஆற்று பகுதியில் அமைந்திருந்தது. மேலும் துவாரகை மற்றும் ஆனர்த்த நாடுகளுக்கு அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சௌவீர நாடு தொடர்பான குறிப்புகள் மகாபாரத காவியத்தில் உள்ளது. சிந்துக்கள் மற்றும் சிவி நாட்டவர்கள், சௌவீர நாட்டின் சிறந்த கூட்டாளிகள் ஆவர்.

சௌவீர மக்கள்

[தொகு]

மகாபாரத காவியத்தில் குறிப்பிட்டுள்ள சௌவீர நாட்டவர்களை தற்கால சரைகி மக்கள் (Saraiki people), என வரலாற்று ஆசிரியர் அகமது அசன் தானி குறிப்பிட்டுள்ளார்.[1] பாரசீக அறிஞர் அல்பிரூனீ (Al-Beruni), சௌவீர நாட்டவர்கள், பஞ்சாப் பகுதியின் தென்மேற்கு பகுதியில் வாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.

சௌவீர நாட்டு மன்னர்கள்

[தொகு]

சௌவீரன்

[தொகு]

சிவி என்பவரின் மகன்களில் ஒருவரான சௌவீரன் என்பவன் சௌவீர நாட்டை நிறுவியவன் ஆவான். சௌவீர நாட்டிற்கு அன்மையில் இருந்த நாடுகளான மத்திர நாடு, கேகய நாடு மற்றும் சிந்து நாடுகளை சிவியின் மற்ற மகன்கள் ஆண்டனர்.

ஜெயத்திரதன்

[தொகு]

ஜெயத்திரதன், சிந்து நாட்டுடன் சௌவீர நாட்டையும் ஆண்டதாக மகாபாரதம் கூறுகிறது. (3: 265)[2] சிவி நாடு, சிந்து நாடு மற்றும் சௌவீர நாட்டுப் படைகளுக்கு ஜயத்திரதன் தலைமை தாங்கினான். (3:269)[3]

சௌவீர நாட்டின் மற்ற மன்னர்கள்

[தொகு]

சத்துருஞ்ஜெயன் என்ற சௌவீர நாட்டின் மன்னர் குறித்து மகாபாரதத்தின் பருவம் 12-இல்-அத்தியாயம் 139-இல் குறிப்பிட்டுள்ளது.[4]

மகாபாரதத்தின் முதல் பருவமான ஆதி பருவம், அத்தியாயம் 67-இல் சௌவீர நாட்டு மன்னர்களை புவியின் வீரமிக்கவர்கள் எனக் கூறுகிறது.[5]

சௌவீர நாட்டு மன்னரான அஜாவிந்தன், தன் சொந்த இனத்தையே அழித்தான் என கூறிப்பிடப்படுகிறது. (5:74)[6]

குருச்சேத்திரப் போரில்

[தொகு]

குருச்சேத்திரப் போரில் சௌவீர நாட்டுப் படைகள் ஜயத்திரதன் தலைமையில் கௌரவர் அணியின் சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர். (மகாபாரதம் 6:71) & (7:10, 136)

ஐந்து ஆறுகள் பாயும் சௌவீர நாட்டின் படைகள், பாக்லீகர்கள், சிந்து வீரர்கள் கௌரவ தலைமைப் படைத்தலைவர் பீஷ்மரின் தலைமையில் போரிட்டனர். (6:20)[7]

சௌவீர நாட்டு வீரர்கள், சிவிக்கள், சூரசேனர்கள், சால்வர்கள், மத்சயர்கள், திரிகர்த்தர்கள், கேகயர்கள் மற்றும் பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு பகுதி வீரர்களுடன் சேர்ந்து பாண்டவப் படையினரை எதிர்கொண்டு தாக்கினர். (துரோண பருவம் 6:18)[8]

பாகவத புராணத்தில்

[தொகு]

பாகவத புராணம் சௌவீர நாட்டவர்களை ஆபீரர்களுடன் இணைத்து பேசுகிறது.[9]

ருத்திரதாமன் எனும் சௌராட்டிர நாட்டு மன்னனை சௌவீர நாட்டைச் சேர்ந்தவன் எனக் கூறப்படுகிறது.[10]

இதனையும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dani, Ahmad Hassan (1982). "Sindhu-Sauvira: A glimpse into the early history of Sind". In Khuhro, Hameeda (ed.). Sind Through the Centuries. Karachi: Oxford University Press. pp. 35–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195772500.
  2. "The Mahabharata, Book 3: Vana Parva: Draupadi-harana Parva: Section 265". Internet Sacred Text Archive. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  3. "The Mahabharata, Book 3: Vana Parva: Draupadi-harana Parva: Section 269". Internet Sacred Text Archive. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  4. "The Mahabharata, Book 12: Santi Parva: Apaddharmanusasana Parva: Section 140". Internet Sacred Text Archive. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  5. "The Mahabharata, Book 1: Adi Parva: Sambhava Parva: Section 67". Internet Sacred Text Archive. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  6. "The Mahabharata, Book 5: Udyoga Parva: Bhagwat Yana Parva: Section 74". Internet Sacred Text Archive. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  7. Mahabharata. Northwestern University Press. 2015. p. 516. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0810130593. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  8. Mahabharata. Northwestern University Press. 2015. p. 513. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0810130593. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  9. Eggermont, Pierre Herman Leonard (1975). Alexander's Campaigns in Sind and Baluchistan and the Siege of the Brahmin Town of Harmatelia. Peeters Publishers. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9061860372. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  10. Fleet, J.F. (1893). "Topographical List of the Brihat-Samhita". The Indian Antiquary: A Journal of Oriental Research (Bombay) 22: 189. https://books.google.com/books?id=dzVCAQAAMAAJ&pg=PA189&lpg=PA189&source=bl&ots=-Hvx2JmltC&hl=en&sa=X#v=onepage&q=sauvira&f=false. பார்த்த நாள்: 13 September 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌவீர_நாடு&oldid=3203860" இலிருந்து மீள்விக்கப்பட்டது