உள்ளடக்கத்துக்குச் செல்

டெர்பியம்(IV) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்பியம்(IV) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டெர்பியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
36781-15-4 Y
ChemSpider 21493830
InChI
  • InChI=1S/4FH.Tb/h4*1H;/q;;;;+4/p-4
    Key: XWMJNWMCMQWTCG-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 90471797
  • [F-].[F-].[Tb+4].[F-].[F-]
பண்புகள்
TbF4
தோற்றம் வெண் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெர்பியம்(IV) புளோரைடு (Terbium(IV) fluoride) என்பது TbF4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளை நிறத்தில் திண்மப்பொருளாகக் காணப்படும் இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். கோபால்ட்(III) புளோரைடு அல்லது சீரியம்(IV) புளோரைடு ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் புளோரைடு ஆவிகளின் கலவையை விட டெர்பியம்(IV) புளோரைடை வெப்பப்படுத்தும் போது ஒப்பீட்டளவில் தூய அணுநிலை புளோரின் வெளியிடப்படுகிறது.[1]

தயாரிப்பு

[தொகு]

மிகவும் தூய டெர்பியம்(III) புளோரைடு மற்றும் செனான் இருபுளோரைடு, குளோரின் முப்புளோரைடு அல்லது புளோரின் வாயு ஆகியவற்றுக்கு இடையேயான வினையால் டெர்பியம்(IV) புளோரைடு உருவாகிறது.:[2]

2 TbF3 + F2 → 2 TbF4

பண்புகள்

[தொகு]

டெர்பியம்(IV) புளோரைடு சூடான நீரில் எளிதில் நீராற்பகுப்பு அடைந்து டெர்பியம்(III) புளோரைடையும் டெர்பியம் ஆக்சிபுளோரைடையும் கொடுக்கிறது.

டெர்பியம்(IV) புளோரைடை சூடாக்குவதால் டெர்பியம்(III) புளோரைடாகவும் முக்கியமாக ஒற்றையணு புளோரின் வாயுவாகும் சிதையும்.[3][4]

TbF4 → TbF3 + F•↑

வினையானது Tb(TbF5)3 என்ற கலப்பு இணைதிற சேர்மங்களை உருவாக்கும், இது In(HufF 5)3 போன்ற படிக வடிவத்தைக் கொண்டுள்ளது.[5] டெர்பியம்(IV) புளோரைடு கோபால்ட்(III) புளோரைடு சேர்மத்தை கோபால்ட் டெட்ராபுளோரைடாக ஆக்சிசனேற்றம் செய்கிறது.:[6]

TbF4 + CoF3 → TbF3 + CoF4

பக்மின்சுடர்ஃபுலரின் சேர்மத்தை 320 முதல் 460 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரினேற்றம் செய்கிறது.[7]

டெர்பியம்(IV) புளோரைடு பொட்டாசியம் குளோரைடு மற்றும் புளோரினுடன் வினைபுரியும் போது, அது கலப்பு இணைதிற சேர்மமான KTb3F12 சேர்மத்தை உருவாக்கும். [8] உருபீடியம் புளோரைடு, அலுமினியம் புளோரைடு மற்றும் டெர்பியம்(IV) புளோரைடு ஆகியவற்றின் கலவை Rb2AlTb3F16 என்ற சேர்மத்தை உருவாக்குகிறது. [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rau, J. V.; Chilingarov, N. S.; Leskiv, M. S.; Sukhoverkhov, V. F.; Rossi Albertini, V.; Sidorov, L. N. (August 2001). "Transition and rare earth metal fluorides as thermal sources of atomic and molecular fluorine". Le Journal de Physique IV 11 (PR3): Pr3–109–Pr3-113. doi:10.1051/jp4:2001314. 
  2. 无机化学丛书 第七卷 钪 稀土元素. 科学出版社. pp 244-246. 1. 卤素化合物
  3. Gibson, John K.; Haire, Richard G. (1988-04-01). "Thermal decomposition of curium tetrafluoride and terbium tetrafluoride" (in en). Journal of Solid State Chemistry 73 (2): 524–530. doi:10.1016/0022-4596(88)90140-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 1988JSSCh..73..524G. https://dx.doi.org/10.1016/0022-4596%2888%2990140-5. பார்த்த நாள்: 2018-12-09. 
  4. Rau, J. V.; Chilingarov, N. S.; Leskiv, M. S.; Sukhoverkhov, V. F.; Rossi Albertini, V.; Sidorov, L. N. (August 2001). "Transition and rare earth metal fluorides as thermal sources of atomic and molecular fluorine". Le Journal de Physique IV 11 (PR3): Pr3–109–Pr3-113. doi:10.1051/jp4:2001314. 
  5. Nikulin V V, Goryachenkov S A, Korobov M V, et al. On thermal stability of terbium tetrafluoride[J]. Zhurnal Neorganicheskoj Khimii, 1985, 30(10): 2530-2533.
  6. Chilingarov, N.S; Rau, J.V; Sidorov, L.N; Bencze, L.; Popovic, A.; Sukhoverkhov, V.F (2000-07-01). "Atomic fluorine in thermal reactions involving solid TbF4" (in en). Journal of Fluorine Chemistry 104 (2): 291–295. doi:10.1016/S0022-1139(00)00259-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113900002591. பார்த்த நாள்: 2018-12-09. 
  7. O. V. Boltalina, A. Yu. Lukonin, V. K. Pavlovich, L. N. Sidorov, R. Taylor, A. K. Abdul-Sada (May 1998). "Reaction of [60Fullerene with Terbium(IV) Fluoride"] (in en). Fullerene Science and Technology 6 (3): 469–479. doi:10.1080/10641229809350215. பன்னாட்டுத் தர தொடர் எண்:1064-122X. https://www.tandfonline.com/action/captchaChallenge?redirectUri=%2Fdoi%2Fabs%2F10.1080%2F10641229809350215. பார்த்த நாள்: 2018-12-13. 
  8. Largeau, Eric; El-Ghozzi, Malika; Avignant, Daniel (1998-09-01). "Synthesis and Crystal Structure of a New Mixed-Valence Terbium Fluoride, KTbIIITbIV2F12, and Related KLnIIIMIV2F12Compounds (MIV=Tb, Zr, Hf;LnIII=Ce–Lu)" (in en). Journal of Solid State Chemistry 139 (2): 248–258. doi:10.1006/jssc.1998.7837. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 1998JSSCh.139..248L. https://www.sciencedirect.com/science/article/pii/S0022459698978379. பார்த்த நாள்: 2018-12-10. 
  9. Josse, Michaël; Dubois, Marc; El-Ghozzi, Malika; Avignant, Daniel (2003-08-01). "Synthesis and crystal structure of Rb2AlTb3F16: a new mixed-valence terbium fluoride" (in en). Solid State Sciences 5 (8): 1141–1148. doi:10.1016/S1293-2558(03)00131-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1293-2558. Bibcode: 2003SSSci...5.1141J. https://www.sciencedirect.com/science/article/pii/S1293255803001316. பார்த்த நாள்: 2018-12-10.