உள்ளடக்கத்துக்குச் செல்

தீயான் (ஊஞ்சல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீயான்
Teeyan (Punjab/Haryana)
பிற பெயர்(கள்)ஊஞ்சல்
கடைபிடிப்போர்பெண்கள்
வகைபருவகாலப் பண்டிகை
தொடக்கம்சரவணா
நாள்சூலை/ஆகத்து

தீயான் (Teeyan (பஞ்சாபி: ਤੀਆਂ)) என்பது பருவ மழைக் காலத்தினை வரவேற்கும் ஊஞ்சல் திருவிழாவாகும். ஊஞ்சல் திருவிழாவிற்கு பஞ்சாபி மொழியில் தீயான் என்பது பெயராகும். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் தீ எனும் நாளில் தொடங்கி 13 நாட்களுக்கு தொடர்ச்சியாக இத்திருவிழா நடைபெறுகிறது. அரியானாவில் இத்திருவிழா அரியாலி ஊஞ்சல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்நாளில் பெண்டிரும் சிறுமியரும் கித்தா நடனம் ஆடுவதற்காக குடும்பங்களுக்கு வருகை தருவர்[1] . பொதுவாக இவ்வூஞ்சல் திருவிழா மகள்கள் மற்றும் சகோதரிகளை[2][3] முன்னிறுத்தி கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.

கொண்டாட்டம்

[தொகு]

பருவ மழைக் காலத்தில் சவான் சந்திர மாதத்தின் பிரகாசமான பாதியான மூன்றாம் நாளில் தொடங்கி இத்திருவிழா பௌர்ணமி வரை பெண்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு வருகைதந்து குதூகலத்தில் பங்கேற்கிறார்கள்[4][5]. பண்டைய காலத்தில் பெண்கள் சவான் மாதம் முழுவதும் தங்கள் தாய் வீட்டில் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க இத்திருவிழா ஒரு வாய்ப்பை வழங்கியது[4][6].

பரிசுகள்

[தொகு]

திருமணமாகிய பெண்களோ ஆகாதவர்களோ அவர்களுடைய சகோதரர்கள் இத்திருநாளில் அவர்களுக்கு சந்தரா என்ற பரிசுப் பேழையை அளிப்பார்கள். இப்பேழையில் பஞ்சாபி சேலைகள், இனிப்பு இலட்டு, வளையல்கள், மெகந்திப் பூச்சுகள் மற்றும் ஊஞ்சல் முதலான பொருட்கள் அடங்கியிருக்கும்[4]

கித்தா மற்றும் ஊஞ்சல்

[தொகு]

தீயான் திருவிழா நாளில் சிறுமிகளும் பெண்களும் அவர்களின் கிராமத்தில் ஒன்று சேர்ந்து மரத்தில் ஊஞ்சல் கட்டுவார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து கித்தா நடனம் ஆடி மகிழ்வார்கள். இந்நடனத்தின் போது பாரம்பரிய பஞ்சாபி போலியன் பாடல்களை பாடிக் கொண்டே ஆடுவர்.

பஞ்சாபி மொழியில்

ਓੁੱਚੇ ਟਾਹਣੇ ਪੀਂਘ ਪਾ ਦੇ
ਜਿਥੇ ਆਪ ਹੁਲਾਰਾ ਆਵੇ

ஆங்கிலத்தில்

Hang my swing from a high tree branch
where the swing moves by itself

தமிழில்

உயரமான மரத்தில் கிளையில் என் ஊஞ்சலைத் தொங்க விடு
அங்குதான் அவ்வூஞ்சல் தானாக ஆடும்

தீயான் விழாவின் நோக்கம் கித்தா நடனம் ஆடுவதை மையமாக கொண்டிருக்கும். முற்காலத்தில் பெண்கள் விருப்பம் போல சில நாட்கள் முதல் நான்கு வாரம் வரையிலும் கூட தங்கள் பிறந்த வீட்டில் தங்கியிருப்பர், அந்நாட்களில் தினந்தோறும் ஒன்று கூடி கித்தா நடனம் ஆடி மகிழ்வர். இத்திருவிழாவின் இறுதி நாளில் அவ்விழாவை முடித்து வைக்கும் நடனமாக பால்கோ நடனம் ஆடப்படும். பெண்கள் இரண்டு வரிசைகளில் நின்று பாலோ நடனம் ஆடுவார்கள்[7] . பாரம்பரியமாக பெண்கள் இவ்வாறு ஒன்று கூடி நடனமாடுவது படிப்படியாகக் குறைந்து வருகிறது[8]

படக்காட்சியகம்

[தொகு]

.

உணவு

[தொகு]

தீயான் விழாவோடு தொடர்புடைய பாரம்பரிய உணவு வகைகள் சில:

  • பால்பொங்கல் (பாலில் வேகவைத்த அரிசி, கீர்)[4]
  • பூரேய் (poorhay) (வறுத்த ரொட்டி)[4]
  • அல்வா
  • மால்புரா
  • குல்குலாய் (Punjabi: ਗੁਲਗੁਲੇ) (வறுக்கப்பட்ட கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்த உருண்டைகள்)[9]
  • மாண்டே (Punjabi: ਮੰਡੇ) கோதுமை மாவை மெல்லியதாகத் தட்டி மேலும் கைகளாலேயே மெல்லியதாக விரிவாக்கி தவாவின் மேல் வேகவைத்து சமைப்பது)[9]

படக்காட்சியகம்

[தொகு]

விழாவின் பரவல்

[தொகு]

தீயான் பெரும்பாலும் பருவகாலங்களில் நடைபெறுகிறது. பஞ்சாப் கிராமங்களில் பொதுவாக தீயான் கூடுகை நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. பள்ளி கல்லூரிகளில் குறைந்த செலவு நிகழ்வுகளாக கொண்டாடப்படுகின்றன. அரசு சில தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களில் மட்டும் தீயான் விழாக்களுக்கு நிதியுதவி செய்கிறது[10].இந்தியாவிற்கு வெளியே கனடாவில்[2] சர்ரே மற்றும் பிராம்ப்டன் நகரங்களிலும் இலண்டனில் சௌத்தால் [11][12]மற்றும் சிமெத்விக்[13] நகரங்களிலும், ஆத்திரேலியாவில் மெல்போர்ன் நகரிலும் தீயான் விழா கொண்டாடப்படுகிறது[14].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Good Earth Punjab Travel Guide (2006)
  2. 2.0 2.1 http://www.teeyandamela.com/
  3. Savino, Natalie (03 09 2013) Leader: New cultural group Koonj-The Flock bringing migrants together for fun, theatre and dance [1]
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Alop Ho Raha Punjabi Virsa: Harkesh Singh KehalUnistar Books PVT Ltd பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7142-869-X
  5. Shankarlal C. Bhatt (2006) Land and People of Indian States and Union Territories: In 36 Volumes. Punjab, Volume 22 [2]
  6. Rainuka Dagar (2002) Identifying and Controlling Female Foeticide and Infanticide in Punjab [3]
  7. Yash Kohli The Women of Punjab 1983
  8. East of Indus: My memories of old Punjab: Gurnam Singh Sidhu Brar
  9. 9.0 9.1 Alop ho riha Punjabi virsa - bhag dooja by Harkesh Singh Kehal Unistar Book PVT Ltd பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5017-532-3
  10. [4] The Tribune 26 08 2012:Amar Nath Wadehra & Randeep Wadehra
  11. Ramaa Sharma (15 08 2008) Happy Clapping BBC London
  12. Teeyan Festival at Southall Library (04 07 2013)
  13. Charanjit Kaur Sapra Tia in West Smethwick Park
  14. Teeyan Melbourne diyan 2015