துவாரன் மின் உற்பத்தி நிலையம்
Appearance
துவாரன் வாயு அடிப்படை இ.சு.மி.நி. (Dhuvaran Gas Based CCPP) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலம், ஆனந்து மாவட்டத்தில் இருக்கும் காம்பாட் அல்லது காம்பே என்றழைக்கப்படும் நகரத்தில் இம்மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. குசராத்து மாநில மின்சாரக்கழக நிறுவனத்திற்குரிய, வாயுவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இணைப்புச் சுழல் மின்னுற்பத்தி நிலையங்களில் இம்மின்னுற்பத்தி நிலையமும் ஒன்றாகும்.
கொள்திறன்
[தொகு]இம்மின் நிலையம் 219 மெகாவாட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.
நிலை | அலகுஎண் | நிறுவிய திறன் (மெகாவாட்) | செயற்படத் தொடங்கிய நாள் | வா.சு / நீ.சு |
---|---|---|---|---|
1 | 1 | 67.85 | 2004 சனவரி | வா.சு [1] |
1 | 2 | 38.767 | 2007 நவம்பர் | நீ.சு |
2 | 3 | 72.51 | 2006 மார்ச்சு | வா.சு [1] |
2 | 4 | 39.94 | 2007 ஆகத்து | நீ.சு |
மொத்தம் | 4 | 219 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Gujarat State Electricity Corporation Limited". gsecl.in. Archived from the original on 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.