உள்ளடக்கத்துக்குச் செல்

தொட்டியம்

ஆள்கூறுகள்: 10°59′00″N 78°20′00″E / 10.9833°N 78.3333°E / 10.9833; 78.3333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொட்டியம்
தொட்டியம்
அமைவிடம்: தொட்டியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°59′00″N 78°20′00″E / 10.9833°N 78.3333°E / 10.9833; 78.3333
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் தொட்டியம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,909 (2011)

15.93/km2 (41/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


94 மீட்டர்கள் (308 அடி)

இணையதளம் www.townpanchayat.in/

தொட்டியம் (ஆங்கிலம்:Thottiyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும். பேரூராட்சியும் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

திருச்சிக்கு 60 கிமீ தொலைவில் தொட்டியம் பேரூராட்சி உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 18 கிமீ தொலைவில் அமைந்த குளித்தலையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

15.93 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி முசிறி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3926 வீடுகளும், 14909 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6] [7]

பெயர்க்காரணம்

[தொகு]

இவ்வூரில் அதிகமாக தொட்டிய நாயக்கர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு தொட்டியம் என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி .[8] இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு.

மதுரகாளியம்மன் கோவில்

[தொகு]

மதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாறு. இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் .இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துனை தெய்வங்கள் இருக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. தொட்டியம் பேரூராட்சியின் இணையதளம்
  5. தொட்டியம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Thottiyam Population Census 2011
  7. Thottiyam Town Panchayat
  8. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டியம்&oldid=3934313" இலிருந்து மீள்விக்கப்பட்டது