உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுங்கல் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுங்கல் அணை

நெடுங்கல் அணை என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் என்ற ஊரில் உள்ள ஒரு அணையாகும்.[1] இது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1887 - 1889 இல் கட்டப்பட்டது.[2] இந்த சிறு அணை 912 அடி நீளம் கொண்டது. இதில் 8.97 அடிவரை நீரைத் தேக்கலாம். இந்த அணை கருங்கல்லில் அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து ஆற்றின் இரு கரைகளை ஒட்டி இரு புறமும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நீர் தேக்கத்தின் கிழக்குப்புறக் கால்வாய் வழியாக பேரு அள்ளி, காவப்பட்டி, செல்லம்பட்டி, விளங்காமுடி, புங்கம்பட்டி வழியாக பாரூர் ஏரிக்குத் தண்ணீர் செல்கிறது. இதன் மேற்குப்புற கால்வாய் வழியாக ஆவத்தவாடி, மோட்டூர், குடிமேனஅள்ளி, அகரம், தேவீர அள்ளி, கள்ளிப்பட்டி, பண்ணந்தூர் வழியாக சுமார் ஏழு ஏரிகளுக்குத் தண்ணீர் செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் 20 அடி அகலத்தில் இருந்த கால்வாய்கள் தற்போது ஐந்து அடியாக சுருங்கிவிட்டன.

படவரிசை

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "விதிமுறை மீறி கால்வாயில் தண்ணீர் எடுப்பு: கடை மடை விவசாயிகள் பாதிப்பு". செய்தி. தினமலர். 5 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2016.
  2. "நெடுங்கல் தடுப்பணையை சுற்றுலா தலமாக்க கோரிக்கை". அறிமுகம். ஏர்டெல். 12 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்கல்_அணை&oldid=3953054" இலிருந்து மீள்விக்கப்பட்டது