உள்ளடக்கத்துக்குச் செல்

பகன்றை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகன்றை
Crotalaria verrucosa
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. verrucosa
இருசொற் பெயரீடு
Crotalaria verrucosa

பகன்றை அல்லது கிலுகிலுப்பை[1] (Crotalaria verrucosa) வெண்ணிற மலர். கருவிளை என்பது இதைப் போன்று நீல நிறத்தில் பூக்கும் மலர். பகன்றைக் கொடி கொழுகொழுப்பாகச் செந்நிறம் கொண்டிருக்கும். மகளிரும் மைந்தரும் பகன்றை மலரைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்.

பகன்றை மலர் பற்றிச் சங்கப் பாடல்கள் தரும் செய்திகள் சுவையானவை.

மலரின் தோற்றம்

[தொகு]
  • பகன்றை மலர் பால்மதி போல் வெண்ணிறம் கொண்டது.[2]
  • பகன்றை வெண்ணிறம் கொண்டது. கருவிளை இதைப் போலவே நீல நிறம் கொண்டிருக்கும்.[3]
  • பகன்றைக்கொடி கொழுத்து வளரும்.[4]
  • பகன்றைக்கொடி சிவப்பாக இருக்கும்.[5]
  • மகளிர் சேலை கட்டும் கொச்சகம் (கொசவம்) போல மடிப்புகளுடன் இருக்கும்.[6]
  • பாண்டில் என்னும் தோல்பறை போல வெண்ணிறத்தில் பூக்கும்.[7]
  • பாண்டில் பறை போலப் பூக்கும்.[8]
  • புலத்தி கஞ்சி போட்டு வெளுத்த துணி போலத் தூய்மையானது.[9]
  • பெரிய இலைகளுடன் கிண்ணத்தில் வைத்திருக்கும் நுரைத்த பால் போலப் பூக்கும்.[10]

வயலிலும், வனத்திலும்

[தொகு]
  • வயலில் தழைக்கும்.[11]
  • சேற்றில் வளரும்.[12]
  • பசுமையான புதரில் மலரும்.[13]

பனியிலும், தூவலிலும்

[தொகு]
  • பனியில் மலரும்.[14]
  • தூவல் தூறலில் மலரும்.[15]

சூடுதல்

[தொகு]
  • பழையர் குடிமகளிர் சூடிக்கொள்வர்.[16]
  • ஆனிரை மேய்க்கும் கோவலர் சூடிக்கொள்வர்.[17]
  • உழவர் சூடிக்கொள்வர்.[18]
  • மள்ளர் (உழவர்) சூடிக்கொள்வர்.[5]
  • காடுகளில் பூக்கும் பகன்றைப் பூக்கள் சூடுவார் இல்லாமல் தாமே அழிவது போல் பிறரைப் பேணாமல் பிறந்து வாழ்ந்து மடியும் மக்கள்தான் உலகில் மிகுதி.[19]

பயன்

[தொகு]
  • சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[20]

உணவு

[தொகு]
  • கிழட்டுப்பசுவுக்கு உணவாக இதனையும் பாகல் கொடியையும் அறுத்துத் தருவர்.[21]
  • எருமைக் கன்று பகன்றை படர்ந்த கொம்பைக் கண்டு உண்ண அஞ்சும்.[22]

இவற்றையும் காண்க

[தொகு]
சங்ககால மலர்கள்

காட்சி

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. "கிலுகிலுப்பை". பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
  2. பால்மதி உருவின் பகன்றை மாமலர் வெண்கொடி - ஐங்குறுநூறு 456,
  3. கருவிளை முரணிய தண்புதல் பகன்றை பெருவளம் மலர - அகநானூறு 255-11,
  4. கொழுங்கொடி பகன்றை - சிலப்பதிகாரம் 13-157
  5. 5.0 5.1 குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர் பார்செறி மள்ளரின் புகுதரும் - அகநானூறு 316-6,
  6. போது விரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன்று மடி கலிங்கம் உடீஇ - புறநானூறு 393-17
  7. பாசிலைப் பொதுளிய புதல்தொறும் பகன்றை நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய தோலெறி பாண்டிலின் வாலிய மலர - அகநானூறு 217-6,
  8. பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம் - நற்றிணை 86
  9. நலத்தகைப் புலத்தி பசைதோய்த்து எடுக்கும் தலைப்புடைப் போக்கித் தண்கயத்து இட்ட நீரின் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும் பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ - குறுந்தொகை 330
  10. பேரிலைப் பகன்றை வான்மலர் பனி நிறைந்ததுபோல் பால் பெய் வள்ளம் - அகநானூறு 219-4,
  11. ஒலித்த பகன்றை விளைந்த கழனி - மதுரைக்காஞ்சி 261
  12. ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல் - அகநானூறு 176-10,
  13. அகன் துறை அணிபெறப் புதலொடு தாழ்ந்த பகன்றைப்பூ உற நீண்ட பாசடைத் தாமரை - கலித்தொகை 73-2
  14. பனிப்பகன்றை - புறநானூறு 16-14,
  15. தலைபிணி அவிழா, சுரிமுகப் பகன்றை சிதால் அம் துவலை தூவலின் மலரும் - அகநானூறு 24-3,
  16. பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் - மலைபடுகடாம் 459
  17. பகன்றைக் கண்ணிப் பல்லான் கோவலர் கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் - ஐங்குறுநூறு 87
  18. பல்விதை உழவின் சில் ஏராளர் பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி - பதிற்றுப்பத்து 76-12
  19. பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர் தவப் பலவே – (அதியமானுக்குப் பின்னர் கொடை நல்கும் வள்ளண்மை, பகன்றை மலர் போல, ஈவார் இல்லாமல் போயிற்று என்கிறார் ஔவையார்) - புறநானூறு 235-18,
  20. குறிஞ்சிப்பாட்டு 88
  21. பாகல் கொடியையும், பகன்றைக் கொடியையும் பரித்து (கையால் அறுத்து) மூதா உண்ண உழவர் தருவர். அகநானூறு 156-5,
  22. பகன்றை வால்மலர் மிடைந்த கோட்டைக் கருந்தாள் எருமைக் கன்று வெறூஉம் - ஐங்குறுநூறு 97,
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகன்றை&oldid=3430057" இலிருந்து மீள்விக்கப்பட்டது