உள்ளடக்கத்துக்குச் செல்

பனி வளைதடியாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனி வளைதடியாட்டம் என்பது உறைபனி அரங்கில் ஆடப்படும் வளைதடிப் பந்தாட்டத்தை ஒத்த ஒரு குழு விளையாட்டு ஆகும்.

ஒவ்வொரு குழுவில் ஒரு நேரத்தில் 5 வீரர்கள் விளையாடுவர். இவர்களில் ஒருவர் பந்துக் காப்பாளர் (Goal Keeper) ஆவர்.

வளைதடிப் பந்தாட்டத்தில் பந்து போன்று, இதில் ஒரு தட்டையான சில்லு பயன்படுத்தப்படுகிறது. வேகமாக பனிச்சறுக்கிய வண்ணம் சில்லை வலைப் பெட்டியில் போட முனைய வேணும்.

இந்த விளையாட்டு கனடா மொன்றியாலில் 1875 அளவில் முதலில் விளையாடப்பட்டது. கனடாவின் பண்பாட்டில் இந்த விளையாட்டு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.



Country Players % of population
 கனடா 617,107 1.799%
 ஐக்கிய அமெரிக்கா 511,178 0.163%
 செக் குடியரசு 95,094 0.934%
 சுவீடன் 69,921 0.768%
 உருசியா 64,326 0.047%
 பின்லாந்து 56,626 1.076%
 செருமனி 27,068 0.033%
 சுவிட்சர்லாந்து 26,166 0.342%
 சப்பான் 19,975 0.016%
 பிரான்சு 17,381 0.026%
 ஆஸ்திரியா 11,202 0.136%
 சிலவாக்கியா 9,034 0.165%
 நோர்வே 6,893 0.146%
 இத்தாலி 6,774 0.011%
 ஐக்கிய இராச்சியம் 5,119 0.008%
 டென்மார்க் 4,405 0.079%
 கசக்கஸ்தான் 4,067 0.023%
 உக்ரைன் 4,003 0.009%
 லாத்வியா 3,979 0.182%
 பெலருஸ் 3,937 0.041%
 ஆத்திரேலியா 3,721 0.017%
 அங்கேரி 3,320 0.033%
 நெதர்லாந்து 2,842 0.017%
 போலந்து 2,575 0.007%
 தென் கொரியா 1,636 0.003%
 வட கொரியா 1,575 0.006%
 மெக்சிக்கோ 1,568 0.001%
 எசுத்தோனியா 1,510 0.118%
 பெல்ஜியம் 1,490 0.014%
 நியூசிலாந்து 1,193 0.028%
 உருமேனியா 1,093 0.005%
 மங்கோலியா 1,001 0.031%
Total 1,549,984

மேற்கோள்கள்

[தொகு]