உள்ளடக்கத்துக்குச் செல்

பன்மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இக்கட்டுரையில் பன்மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படுகின்றன. இது முழுமையான பட்டியல் இல்லை.

பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.

ஆசியா

[தொகு]
  • மலேசியா: மலாய் (ஆட்சி மொழி), ஆங்கிலம் (கல்வி மொழி). சீனமும் தமிழும் கல்வி மொழிகளாகவும் அதிகம் பேசப்படும் பிற மொழிகளாகவும் உள்ளன. சீன மாண்டரின் மட்டுமே கற்றுத் தரப்பட்டாலும், ஹொக்கைன், கண்டோனியம், டீச்சோவ் ஆகிய சீன வழக்குகளைப் பேசும் மக்களும் உள்ளனர்.

சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வாழும் பூர்விகக் குடிகள் இபான், தயாக் பொன்ற மொழிகளைப் பேசுவர்.

  • சிங்கப்பூர்: ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் (ஆட்சி மொழிகள்). மலாய் (தேசிய மொழி). ஆங்கிலம் (கல்வி மொழி). சிங்கப்பூரியர்கள் அனைவரும் ஆங்கிலமும்தங்கள் தாய்மொழியையும் பேசுவர். ஜப்பானியம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைப் பள்ளிகளில் கற்கலாம்.
  • இலங்கை. சிங்களம், தமிழ் (ஆட்சி மொழிகள்)
  • தாய்வான்: மாண்டரின் சீனம் (ஆட்சி மொழி), தாய்வான் மின்னான் என்னும் மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹக்கா குழுவினர் தங்கள் ஹக்கா சீன மொழி, மாண்டரின், தாய்வான் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். பழங்குடியினர் 10 மொழிகளைப் பேசுகின்றனர்.
  • மக்காவ்: சீனம், போர்த்துகேயம் (ஆட்சி மொழிகள்). சீனக் கண்டோனியம் அதிகம் பேசப்படும் மொழி எனினும், மாண்டரின் சீனமும் கற்றுத் தரப்படுகிறது. போர்த்துகேயமும், ஆங்கிலமும் பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.

பன்மொழிகளைப் பேசும் நகரங்கள்

[தொகு]
சியட்டல் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் ஐந்து மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை ஆங்கிலம், சீன மொழி , வியட்நாமிய மொழி, எசுப்பானியம், தகலாகு மொழியும் எசுப்பானியச் சொல்லைப் பயன்படுத்துகிறது.

உலகின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர், பிற மொழியினர் பேசும் மக்கள் அதிகம் குடியேறிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம், லண்டன், நியூ யார்க், பாரிஸ், சிட்னி, வான்கூவர், ரொறன்ரோ ஆகியவற்றில் பல மொழிகள் பேசப்படுகின்றன எனினும், இவர்கள் தங்கள் மொழியை மட்டுமே பேசும் திறன் பெற்றிருக்கின்றனர்,

மொழிகள்

மேற்கோள்கள்

[தொகு]