பர்வானி மாவட்டம்
பர்வானி மாவட்டம் बड़वानी जिला | |
---|---|
பர்வானிமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | இந்தூர் |
தலைமையகம் | பர்வானி |
பரப்பு | 5,427 km2 (2,095 sq mi) |
மக்கட்தொகை | 1,385,881 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 255/km2 (660/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 14.72% |
படிப்பறிவு | 49.08% |
பாலின விகிதம் | 982 |
வட்டங்கள் | 9 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பர்வானி மாவட்டம் (Barwani district) (இந்தி: बड़वानी जिला) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் பர்வானி ஆகும். இது இந்தூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]பர்வானி மாவட்டத்தின் வடக்கில் தார் மாவட்டம், கிழக்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் கார்கோன் மாவட்டம், தெற்கில் மகாராஷ்டிர மாநிலத்தின் ஜள்காவ் மாவட்டம், தென்மேற்கில் மகாராஷ்டிராவின் துளே மாவட்டம், மேற்கில் நந்துர்பார் மாவட்டம், வடமேற்கில் அலிராஜ்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
வரலாறு
[தொகு]மன்னராட்சி பகுதியாக இருந்த பர்வானி சுதேச சமஸ்தானம், இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-இல் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின், மேற்கு நிமர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக கார்கோன் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு பர்வானி மாவட்டம் 25 மே 1998-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.
பொருளாதாரம்
[தொகு]பர்வானி மாவட்டம் வறண்ட வானிலை கொண்டிருப்பதால் இம்மாவட்டம், தொழில் மற்றும் வேளாண்மை வளர்ச்சி அடையவில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றாக பர்வானி மாவட்டத்தை இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2006-ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது. இதனால் இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் நிதி உதவி அளிக்கிறது.[1]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]பர்வானி மாவட்டம் பர்வானி மற்றும் செந்துவா என இரண்டு உட்கோட்டங்களையும்; பர்வானி, செந்துவா, பன்செமல், வர்லா, திக்ரி, பட்டி, அஞ்ஜத், ராஜ்பூர் மற்றும் வர்லா என ஒன்பது வருவாய் வட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டம் பர்வானி, பட்டி, செந்துவா, பன்செமல், நிவாளி, திக்ரி மற்றும் ராஜ்பூர் என ஏழு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. இம்மாவட்டம் பர்வானி மற்றும் செந்துவா என இரண்டு நகராட்சிகளைக் கொண்டுள்ளது.
அரசியல்
[தொகு]பர்வானி மாவட்டம் பர்வானி, செந்துவா, பன்செமல் மற்றும் இராஜ்பூர் என நான்கு மத்தியப் பிரதேச சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளும் கார்கோன் நாடாளுமன்ற மக்களவைத் தொதிக்குட்பட்டதாகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,385,881 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.25% மக்களும்; நகரப்புறங்களில் 14.72% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.57% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 699,340 ஆண்களும் மற்றும் 686,541 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 982 வீதம் உள்ளனர். 5,427 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 255 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 49.08 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 55.70 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 42.39 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 265,299 ஆக உள்ளது. [2]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,318,869 (95.16 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 58,222 (4.20 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாகவும் உள்ளது.
மொழிகள்
[தொகு]மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Barwani District : Census 2011 data
வெளி இணைப்புகள்
[தொகு]- Barwani district official website
- [1] List of places in Barwani