பீ ஜீஸ்
பீ ஜீஸ் | |
---|---|
1977ல்: (மேலிருந்து கீழ்) பேரி கிப், ராபின் கிப், மாரிஸ் கிப் | |
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | BGs |
இசை வடிவங்கள் |
|
இசைத்துறையில் |
|
இணையதளம் | beegees |
பீ ஜீஸ் [Bee Gees] 1959ல் பேரி, ராபின், மாரிஸ் ஆகிய கிப் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட ஓர் இசைக்குழு. 1960களில் தொடங்கி ஐந்து பத்தாண்டுகளாக பல இசைத்தொகுப்புகளையும் தனியிசைகளையும் வெளியிட்டு 120 மில்லியன் இசைத்தட்டுகளுக்கும் மேலாக[2] விற்று சாதனை புரிந்துள்ள இக்குழு பல இசை விருதுகளை வென்றுள்ளது; குறிப்பாக, ஐந்து கிராமி விருதுகளையும்[3] 1997ல் ராக் அண்டு ரோல் ஹால் ஆவ் ஃபேமில் இக்குழுவின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது[4].
தொடக்க காலம்
[தொகு]இக்குழுவின் பெயரை இடுவதற்கு ஒரு ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சி நடத்துநர் காரணமாக இருந்தார். தொடக்க காலங்களில் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் செயலை கிப் சகோதரர்களின் தந்தையார் ஹியூ கிப் செய்தார்[5]. சில ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்த இக்குழு, 1967ல் இங்கிலாந்து சென்றது. அங்கு ராபர்ட் ஸ்டிக்வுட்[6] என்ற இசைத் தயாரிப்பாளர் இக்குழுவை முன்னிறுத்தி, பல வெற்றி இசைத் தொகுப்புகளை வெளியிட உறுதுணையாக இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Soft Rock Music Artists". AllMusic. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
- ↑ "Barry Gibb honors brothers ..." பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
- ↑ "grammy.com -- Bee Gees". பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
- ↑ "rockhall.com -- Bee Gees". பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
- ↑ "The Very Very Beginning of the Bee Gees". Archived from the original on 2021-07-14. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2021.
- ↑ "Rollingstone". பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.