பெருந்துறை தொடருந்து நிலையம்
பெருந்துறை | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பெருந்துறை, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°15′14″N 77°37′44″E / 11.2538°N 77.6289°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | ஜோலார்பேட்டை - சோரனூர் வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | PY | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
முந்தைய பெயர்கள் | மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே | ||||
|
பெருந்துறை தொடருந்து நிலையம் (Perundurai railway station, நிலையக் குறியீடு:PY) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை நகரில் இருக்கும் ஒரு தொடருந்து நிலையமாகும்.
அமைவிடம்
[தொகு]ஈரோடு சந்திப்பு மற்றும் கோயம்புத்தூர் சந்திப்புக்கு இடையே, ஜோலார்பேட்டை - சோரனூர் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்நிலையம், தென்னக இரயில்வேயின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இது ஈரோடு சந்திப்பிலிருந்து 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[1]
ஈரோடு சந்திப்புக்கும், கோயம்புத்தூர் சந்திப்புக்கும் இடையே இயங்கும் எட்டு பயணிகள் தொடருந்துகள், இங்கு நிறுத்தப்படுகிறது.
எதிர்கால வளர்ச்சிகள்
[தொகு]இந்நிலையம் குழும முதலாளியச் சமூகப் பொறுப்புத் திட்டத்தைன்கீழ் இந்த வட்டார வணிக நிருவனங்கள, கல்விநிறுவனங்களின் உதவியோடு வளர்த்தெடுக்கப்படும்.[2]
இந்திய விடுதலைக்கு முன்பே பழனிநகரையும் சாமராசநகர்ப் பகுதியையும் பெருந்துறை வழியாக இணைக்கும் புதிய இருப்புத்தொடருக்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தொடர் தருமபுரம், காங்கேயம், சென்னிமலை, ஈரோடு சந்திப்பு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஊடாகச் செல்லும். நாளடைவில் இந்த முன்மொழிவுகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், 2007 இல் ஈரோடு-பழனி தொடர் சார்ந்த அளக்கை செய்யப்பட்டது. புதிதான முன்மொழிவில் இத்தொடர் ஈரோடுச் சந்திப்பில் இருந்து இப்போதுள்ள ஜோலார்பேட்டை–சோரனூர் தொடருக்கு இணையாகச் சென்று பெருந்துறையை அடைந்ததும் பிரிந்து பழனி நோக்கிச் செல்லும்.[3][4]சத்தியமங்கலம் கானுயிர் காப்பகம் சார்ந்த சுற்றுச்சூழல் ஒப்புதல் சிக்கலால் ஏற்பட்ட தடையால், ஈரோடு-சாமராசநகர் இருப்புத் தொடருக்கு மாற்றாக, மாற்றங்கள செய்யபட்டு, ஈரோடு-சத்தியமங்கலம் பிரிவுத் தொடருக்கு மட்டும் 2007 இல் அளக்கை செய்து முடிக்கப்பட்டது.[5]
- மேலும், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டைக் கழகம் சரக்குகலையும் பொருள்களையுக் எளிதாகப் போக்குவரத்து செய்ய பெருந்துறை தொடருந்து நிலையத்தில் இருந்து சிப்காட் தொழிலக வளாகத்துக்கு ஒரு இணைப்புத் தொடரை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.[6][7]
- ஈரோடுப் பகுதி கள முன்னேற்றத் திட்டப்பகுதியாக ஓர் எளிய நகருந்திறத் திட்டப்பணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடுச் சந்திப்பின் சரக்கு முனையத்தை அதன் நரகப் புறப்பகுதிக்கு, பெருந்துறை நிலையத்துக்கு அருகாமை வரை நீட்டிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியகம் கேட்டுக் கொண்டுள்ளது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Systems map". Southern Railways - Salem division Systems map.
- ↑ "Scope exists for developing Perundurai Railway Station". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Scope-exists-for-developing-Perundurai-railway-station/article14515850.ece.
- ↑ "Plea to revive Erode–Palani railway project". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/plea-to-revive-erodepalani-railway-project/article8038988.ece.
- ↑ "Erode–Palani railway line". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Erode-Palani-railway-line-land-acquisition-survey-to-begin-soon/article15176598.ece.
- ↑ "Locals protests rail line through forests, suggests alternatives". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Locals-protest-rail-line-through-forest-suggest-alternative-route/articleshow/18721256.cms.
- ↑ "Railway Budget disappointing". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/railway-budget-disappointing/article4457313.ece.
- ↑ "Poor condition of Perundurai station irks commuters". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Poor-condition-of-Perundurai-station-irks-commuters/article14496442.ece.
- ↑ "Proposal to shift Goods shed out of Erode City". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Poor-condition-of-Perundurai-station-irks-commuters/article14496442.ece.