பொட்டாசியம் பைசல்பைட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரசன் சல்பைட்டு
| |
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பைசல்பைட்டு, பொட்டாசியம் பைசல்பைட்டு கரைசல், சல்பூரசு அமிலம், ஒற்றை பொட்டாசிய உப்பு, மோனோ பொட்டாசியம் சல்பைட்டு
| |
இனங்காட்டிகள் | |
7773-03-7 | |
ChemSpider | 22889 |
EC number | 231-870-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23663620 |
| |
பண்புகள் | |
KHSO3 | |
வாய்ப்பாட்டு எடை | 120.1561 g/mol |
தோற்றம் | வெண் பளிங்குத் துகள் |
மணம் | SO2 |
உருகுநிலை | 190 °C (374 °F; 463 K) |
49 g/100 mL (20 °C) 115 g/100 mL (100 °C) | |
கரைதிறன் | ஆல்ககாலில் கரையாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் பைசல்பைட்டு (potassium bisulfite) அல்லது பொட்டாசியம் ஐதரசன் சல்பைட்டு (Potassium hydrogen sulfite) என்பது KHSO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். மதுபானத் தயாரிப்பில் நுண்ணுயிரகற்றல் என்ற காரணத்திற்காக இது சேர்க்கப்படுகிறது. கூட்டுப் பொருளான பொட்டாசியம் பைசல்பைட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் E228 என்று எண்ணிட்டுள்ளது[1].
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் கார்பனேட்டுடன் கந்தக டைஆக்சைடு வினைபுரிவதன் மூலமாக இவ்வுப்பு தயாரிக்கப்படுகிறது. வினையில் கார்பன்டைஆக்சைடு முழுவதுமாக வெளியேறும் வரை கந்தக டைஆக்சைடை பொட்டாசியம் கார்பனேட்டு கரைசலில் செலுத்துவதை நிறுத்தக்கூடாது. கரைசல் அடர்த்தியாக்கப்பட்டு பின்னர் படிகமாதலுக்கு அனுமதிக்கப்படுகிறது.