உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கனீசு(II) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு(II) ஐதராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மாங்கனீசு டையைதராக்சைடு, மாங்கனீசு ஐதராக்சைடு, மாங்கனசு ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
18933-05-6
பண்புகள்
H2MnO2
வாய்ப்பாட்டு எடை 88.95 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 3.258 கிராம்/செ.மீ3
உருகுநிலை சிதைவடையும்
18 பாகை செல்சியசில் 0.00034 கிராம்/100 மி.லி.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாங்கனீசு(II) ஐதராக்சைடு ( Manganese(II) hydroxide) என்பது Mn(OH)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத் திண்மமாக இச்சேர்மம் காணப்பட்டாலும் காற்றில் வெளிப்பட நேர்ந்தால் மாதிரிகள் உடனடியாக ஆக்சிசனேற்றம் அடைந்து கருத்து விடுகின்றன. தண்ணீரில் மாங்கனீசு(II) ஐதராக்சைடு சிறிதட்ளவே கரைகிறது.

தயாரிப்பு

[தொகு]

ஒரு கார உலோக ஐதராக்சைடுடன் மாங்கனீசு (Mn2+) உப்பின் நீரிய கரைசலை சேர்த்தால் மாங்கனீசு(II) ஐதராக்சைடு திண்மமாக வீழ்படிவாகிறது :[2].

Mn2+ + 2 NaOH → Mn(OH)2 + 2 Na+.

வினைகள்

[தொகு]

காற்றில் பட நேர்ந்தால் மாங்கனீசு(II) ஐதராக்சைடு உடனடியாக ஆக்சிசனேற்றம் அடைகிறது. நிற மாற்றம் ஏற்படுவது இதற்கான அடையாளமாகும்.

கட்டமைப்பு

[தொகு]

மாங்கனீசு(II) ஐதராக்சைடு மற்ற உலோக டையைதராக்சைடுகள் போல புரூசைட்டு கட்டமைப்பில் படிகமாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
  2. H. Lux "Manganese(II) Hydroxide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1456.