மார்பு
மார்பு | |
---|---|
மார்புக் கூடு | |
மார்பின் உள்ளுறுப்புகளைக் காட்டும் படம் | |
இலத்தீன் | தோரக்சு |
மார்பு அல்லது நெஞ்சு (கிரேக்க மொழி: θώραξ, இலத்தீன்: Thorax, வார்ப்புரு:Lang-ea) என்பது மனிதன் மற்றும் இதர விலங்கினங்களின் உடல்கூற்றிலுள்ள ஒரு பாகம் ஆகும் . இது சில நேரங்களில் தோரக்சு என்றும் அழைக்கப்படுகிறது.
மார்பின் அமைப்பு
[தொகு]மார்பு கழுத்துக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. முக்கிய உள்ளுறுப்புகளைக் காக்கும் பொருட்டு மார்பெலும்புகள் மற்றும் தோள்பட்டை எலும்புகளுடன் பிணைக்கப்பட்டு கூடு போன்ற அமைப்பில் உள்ளது. மார்புப் பகுதியையும் வயிற்றுக் குழியையும் பிரிக்கும் பகுதியாக பிறிமென்றகடு காணப்படுகிறது.
மார்பு கீழ்காணும் உள்ளுறுப்புகளை உள்ளடக்கியது:
- இதயம்
- நுரையீரல்
- கீழ்கழுத்துச் சுரப்பி (தைமசுச் சுரப்பி)
இவற்றை எலும்புகள், மார்புத் தசைகள் மற்றும் தோல் கொண்ட அமைப்பு மூடியுள்ளது.
புறத்தோற்றத்தில் ஆண்களுக்கு மார்புத் தசைகளும் மார்புக் காம்புகளும் உள்ளன, பெண்களுக்கு பால் சுரப்பிகளும், மார்புக் காம்புகளும் உள்ளன.
மார்பு சார்ந்த நோய்கள்
[தொகு]மனிதனில் மார்பு சார்ந்த நோய்களில் முக்கியமானது மார்புவலி அல்லது நெஞ்சுவலி ஆகும். மார்பகப் புற்று நோய் பெண்களைப் பாதிக்கும் முக்கிய நோய் ஆக உள்ளது