உள்ளடக்கத்துக்குச் செல்

ரம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரம்பா

இயற் பெயர் விசயலட்சுமி
பிறப்பு சூன் 5, 1974 (1974-06-05) (அகவை 50)
இந்தியா விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
குறிப்பிடத்தக்க படங்கள் உள்ளத்தை அள்ளித்தா

ரம்பா (பிறப்பு: சூன் 5, 1974) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.

அவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படங்கள் கதாப்பாத்திரங்கள் குறிப்பு
1993 உழவன்
1996 உள்ளத்தை அளித்தா இந்து
1996 சுந்தர புருஷன் வள்ளி
1996 சிவசக்தி (திரைப்படம்) பிரியா
1996 செங்கோட்டை யமுனா
1997 தர்ம சக்கரம்
1997 அடிமைச் சங்கிலி
1997 வி.ஐ.பி இந்து
1997 அருணாச்சலம் (திரைப்படம்) நந்தினி
1997 ராசி (திரைப்படம்) மீனா
1997 ஜானகிராமன் காயத்ரி
1998 காதலர் தினம் (திரைப்படம்)
1998 நினைத்தேன் வந்தாய் சப்னா
1998 காதலா காதலா ஜானகி
1999 உனக்காக எல்லாம் உனக்காக இந்து
1999 உன்னருகே நான் இருந்தால் ரம்பா
1999 பூமகள் ஊர்வலம் கவிதா
1999 மின்சாரக் கண்ணா பிரியா
1999 சுயம்வரம் (1999 திரைப்படம்) ஊர்வசி
1999 என்றென்றும் காதல் மீனு
2000 குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்) அலமேலு கந்தசாமி
2000 அன்புடன்
2000 சுதந்திரம் (2000 திரைப்படம்) திவ்யா
2001 அழகான நாட்கள் இந்து
2001 ஆனந்தம் (திரைப்படம்) ரேனுகா மாதவன்
2003 திரீ ரோசஸ் (திரைப்படம்) சாரு
2003 பந்தா பரமசிவன் மஞ்சு
2004 சத்திரபதி
2004 அழகிய தீயே
2005 சுக்ரன்
2009 கிவிக் கன் முருகன் மேங்கோ டோலி
2010 ஒரு காதலன் ஒரு காதலி
2010 பெண் சிங்கம் மைதிலி

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும்.

மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும்.

தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைதனர்.

ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து திரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்தனர்.

ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார்.

தற்பொழுது கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்பா&oldid=4014715" இலிருந்து மீள்விக்கப்பட்டது