ராஜ மோகன்
Appearance
ராஜ மோகன் | |
---|---|
இயக்கம் | பிரேம் சேத்னா |
தயாரிப்பு | நேஷனல் மூவி டோன் |
கதை | வை. மு. கோதநாயகி அம்மாள் |
இசை | யானை வைத்தியநாத ஐயர் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா காளி என். ரத்தினம் கே. பி. கேசவன் டி. ஆர். பி. ராவ் ஏ. கே. ராஜலட்சுமி எம். என். ராதாபாய் டி. ஏ. மதுரம் |
ஒளிப்பதிவு | திலங் |
வெளியீடு | 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 19000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜ மோகன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படமானது வை. மு. கோதைநாயகியின் ராஜமோகன் என்ற புதினத்தின் தழுவலாகும்.
கதைச்சுருக்கம்
[தொகு]மோகன் என்பவன் ஒரு அனாதை இளைஞனாவான். அவன் பத்திரிக்கை அதிபரான தர்மலிங்கத்தின் மகளான ராஜம் என்பவளை காதலிக்கிறான். மோகனின் வளர்ப்புத் தாய் கல்யாணி என்பவராவார். மோகனின் உண்மையான தாய் யார் என்பதும், ராஜமும் மோகனும் இறுதியில் சேர்ந்தார்களா என்பதுமே கதைமுடிவாகும்.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
- ↑ அறந்தை நாராயணன் (செப்டம்பர் 29 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள். ஜகன்மோகினி கோதைநாயகி". தினமணிக் கதிர்: 14-15.