வலேரி பொல்யாக்கொவ்
வலேரி பொல்யாக்கொவ் Valeri Polyakov | |
---|---|
சோவியத்-உருசிய விண்வெளி வீரர் | |
தேசியம் | உருசியர் |
பிறப்பு | வலேரி விளாதிமீரவிச் பொல்யாக்கொவ் 27 ஏப்ரல் 1942 தூலா, உருசியா, சோவியத் ஒன்றியம் |
இறப்பு | 7 செப்டம்பர் 2022 மாஸ்கோ, உருசியா | (அகவை 80)
வேறு பணிகள் | மருத்துவர் |
விண்வெளி நேரம் | 678நா 16ம 32நிமி |
தெரிவு | மருத்துவக் குழு 3 |
பயணங்கள் | மீர் ஈஓ-3 / மீர் ஈஓ-4 (சோயூசு டிஎம்-6 / சோயூசு டிஎம்-7), மீர் ஈஓ-15 / மீர் ஈஓ-16 / மீர் ஈஓ-17 (சோயூசு டிஎம்-18 / சோயூசு டிஎம்-20) |
திட்டச் சின்னம் | |
விருதுகள் | பார்க்க |
வலேரி விளாதிமீரவிச் பொல்யாக்கொவ் (Valeri Vladimirovich Polyakov, உருசியம்: Вале́рий Влади́мирович Поляко́в, 27 ஏப்ரல் 1942 – 7 செப்டம்பர் 2022) என்பவர் ஒரு சோவியத், உருசிய விண்ணோடி ஆவார். 14 மாதங்களுக்கும் மேலாக (437 நாட்கள் 18 மணிநேரம்) தொடர்ந்து மீர் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, அதிக நேரம் விண்வெளியில் தங்கியதற்காக சாதனை படைத்தவர்.[1] அவரது ஒருங்கிணைந்த விண்வெளி அனுபவம் 22 மாதங்களுக்கும் மேலாகும்.[2]
1972 இல் ஒரு விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வலேரி, 1988 இல் சோயூசு டிஎம்-6 இல் விண்வெளிக்கு தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டு, 240 நாட்களுக்குப் பிறகு சோயூசு டிஎம்-7 இல் பூமிக்குத் திரும்பினார். 1994-1995 இல் விண்வெளியில் தனது இரண்டாவது பயணத்தின் போது, சோயூசு டிஎம்-18 இல் ஏவுவதற்கும் டிஎம்-20 உடன் தரையிறங்குவதற்கும் இடையில் 437 நாட்கள் விண்வெளியில் செலவழித்து, ஒரு தனிநபரால் அதிக நேரம் விண்வெளியில் தொடர்ந்து செலவழித்த சாதனையைப் படைத்தார்.[2]
தொடக்க வாழ்க்கை
[தொகு]சோவியத் ஒன்றியத்தில் தூலா நகரில் பிறந்த இவர் 1972 மார்ச் 22 இல் விண்வெளிப் பயணத்துக்காக மூன்றாம் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டார். 1995 சூன் 1 இல் இளைப்பாறினார். வலேரி தூலாவில் தனது ஆரம்பக் கல்வியை 1959 இல் முடித்து மாஸ்கோவில் முதலாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் வானியல் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.[2]
விண்வெளிப் பயணங்கள்
[தொகு]- சோயூசு டிஎம்-6 / சோயூசு டிஎம்-7 – 28 ஆகத்து 1988 முதல் 27 ஏப்ரல் 1989 வரை – 240 நாட்கள்,[2] 22 மணி, 34 நிமி
- சோயூசு டிஎம்-18 / சோயூசு டிஎம்-20 – 8 சனவரி 1994 முதல் 22 மார்ச் 1995 – 437 நாட்கள்,[2] 17 மணி, 58 நிமி.
விருதுகள்
[தொகு]- உருசியக் கூட்டமைப்பின் வீரர்[3]
- சோவியத் ஒன்றியத்தின் வீரர்[3]
- செவாலியே விருது (பிரான்சு)[2]
- லெனின் பதக்கம்[2]
- அசுத்தூரியாசு இளவரசர் விருது (எசுப்பானியா)[4]
- பரசாத் பதக்கம் (கசக்கசுத்தான்)[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schwirtz, Michael (30 March 2009). "Staying Put on Earth, Taking a Step to Mars". The New York Times இம் மூலத்தில் இருந்து 7 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180707011946/https://www.nytimes.com/2009/03/31/science/space/31mars.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Valeri Vladimirovich Polyakov". New Mexico Museum of Space History. Archived from the original on 24 April 2020. பார்க்கப்பட்ட நாள் 27 January 2011.
- ↑ 3.0 3.1 "Поляков Валерий Владимирович". Warheroes.ru. Archived from the original on 8 March 2021. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.
- ↑ "1999 PRINCE OF ASTURIAS AWARD FOR INTERNATIONAL COOPERATION". The Princess of Asturias Foundation. Archived from the original on 19 June 2021. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.