விதிஷா
விதிஷா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°32′N 77°49′E / 23.53°N 77.82°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | விதிஷா மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
விதிஷா நகரம், இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் பேட்வா ஆற்றின் கரையில் உள்ளது. இந்நகரம் விதிஷா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். மாநிலத் தலைநகரான போபாலிருந்து 54 கி மீ தொலைவில் உள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விதிஷா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 155,951 ஆகும். அதில் ஆண்கள் 81,488; பெண்கள் 74,463 ஆக உள்ளனர். விதிஷா நகரத்தில் இந்துக்கள் 137,373 (88.09 %); இசுலாமியர்கள் 10,089 (6.47 %); சமனர்கள் 7,376 (4.73 %) மற்றும் பிற மக்கள் 1.,113 (0.72%) ஆக உள்ளனர்.[1]
வரலாற்று இடங்களும், நினைவுச் சின்னங்களும்
[தொகு]இந்து சமயத்திற்கு மதம் மாறியவரும், சுங்கப் பேரரசில் இருந்த, இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவரும், கிருஷ்ண பக்தருமான ஹேலியோடோரஸ் என்பவரால், கி மு 113-இல் பகவான் கிருஷ்ணருக்காக நிறுவப்பட்ட தூண் ஆகும். கிருஷ்ணர் கோயில் முன் அமைந்த இத்தூணின் உச்சியில் கருடச் சிற்பம் அமைந்துள்ளது.[2]
வரலாறு
[தொகு]கி மு ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் சுங்கப் பேரரசு, சாதவாகனப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசின் காலத்தில் விதிஷா நகரம் பெரும் வணிக மையமாக விளங்கியது. விதிஷா நகரத்திலிருந்து 9 கி மீ தொலைவில் பௌத்த தலமான சாஞ்சி உள்ளது. அசோகர், இளவரசராக இருந்த போது விதிஷா பகுதியின் ஆளுநராக இருந்தவர்.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- கைலாசு சத்தியார்த்தி (2014-இல் நோபல் பரிசு வென்றவர்)[3]
போக்குவரத்து வசதிகள்
[தொகு]தில்லி – சென்னை, தில்லி – மும்பை இருப்புப் பாதை வழித் தடத்தில் விதிஷா நகரம் அமைந்துள்ளது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vidisha City Population 2011
- ↑ Hermann Kulke and Dietmar Rothermund (2004). A History of India. Routledge. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-32920-5.
- ↑ "10 things to know about Noble Prize winner Kailash Satyarthi". Zee News.
- ↑ Vidhisha Railway Station