உள்ளடக்கத்துக்குச் செல்

வைதேகி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைதேகி அருவி தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலைகளின் தொடர்ச்சியாக கிழக்காக உள்ள மலையில், தொண்டாமுத்ததூருக்கு அருகே நரசீபுரம் கிராமத்துக்கு அருகில் மலைப்பகுதியில் அமைந்துள்ள அழகிய அருவியாகும். இது நொய்யலின் துனை ஆறுகளில் ஒன்றான தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி ஓடையில் அமைந்துள்ளது.இது செங்குத்தாகக் கொட்டாமல்,சரிவான பாறைகள் மீது சரிந்து ஓடும் அழகிய அருவியாகும். தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி அருவி என்பது இதன் இயற் பெயராகும் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு வைதேகி அருவி என அழைக்கப்படுகிறது. போளுவாம்பட்டி வனத்துறை சாவடியில் அனுமதி பெற்று 5 கி.மீ தொலைவுக்கு மலைப்பகுதியில் நடந்து சென்று அருவியை அடையலாம். இந்தப் பகுதியிலிருந்து 10 கி.மீ தொலைவில் புகழ்பெற்ற கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைதேகி_அருவி&oldid=3629707" இலிருந்து மீள்விக்கப்பட்டது